மன்னிக்க முடியாத பாவம் The Unpardonable Sin 54-10-24 பிரன்ஹாம் கூடாரம், ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா ?.. நாம் பாடுகிற அந்தப் பாடல்கள், அது நம்முடைய முகங்களை பிரகாசிக்கச் செய்கிறது; பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, சிந்தித்துப் பார்த்தால் நமக்கு நேரக் குறைவு என்பதே இருக்காது. ஆனால், உங்களுக்குத் தெரியுமா, நாம் கர்த்தருக்காக சேவை செய்ய வேண்டிய நேரம் இப்பொழுது தான், இல்லையா? நாம் இங்கிருக்கும் வேளையில், இந்த அழிவுக்குரிய ஜீவியத்தில் இந்த குறுகிய காலம் மட்டுமே நமக்கு நேரம் கிடைத்துள்ளது. கர்த்தருடைய சேவையில், ஏதோ வொன்றைச் செய்ய நம்மால் இயன்ற ஒவ்வொரு நிமிடத்தையும் செலவிடுவதே நம்முடைய விருப்பம் என்று நான் நம்புகிறேன். தேவனுடைய மகிமைக்காக பாடல் பாடலாம், அல்லது சாட்சி சொல்லலாம். அல்லது ஏதோவொன்றைச் செய்து கொண்டிருக்கலாம், அது என்னவாக இருந்தாலும் சரி. அது ஒரு பொருட்டல்ல. சற்று சிந்தியுங்கள், நாம் அங்கு சென்ற பிறகு, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு பாடல் பாட போகின்றோம். அது பாடல் ஆராதனையாக இருக்கும், அதோடு முழுமையாகாது, உங்களுக்குத் தெரியுமா, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ஆகவே அது ஒரு அற்புதமான நேரமாக இருக்கப் போகிறது இன்றிரவு நாங்கள் அறிவிப்பது என்னவெனில், இடஹோவிற்கு (Idaho) நான் காலையில் புறப்படப் போகிறேன். சிறிது நாட்கள் போயிருந்து, திரும்பி வருவேன். அதன்பிறகு கர்த்தருக்குச் சித்தமானால், சரியாக இங்கு இந்தக் கூடாரத்தில், பழைய பாணியிலான எழுப்புதலைத் தொடங்க விரும்பு கின்றோம். கர்த்தருக்குச் சித்தமானால், அதைக் குறித்த அனைத்து விவரங்களையும் நாம், அடுத்த இரண்டு வாரங்களில் அறிந்து கொள்ளுவோம். ஒரு அருமையான போதனை எழுப்புதல்... இந்தக் காலை வேளையில் நம்முடைய கரங்களை தேன் ஜாடிக்குள் போட்டு ஒரு அற்புதமான, மகிமையான நேரத்தைக் கொண்டிருந்தோம். உங்களுக்குத் தெரியும், அதில் பங்குகொள்ளாத நீங்கள் யாவரும், நிச்சயமாகவே ஒரு நீண்ட பின்னணியைத் தவறவிட்டீர்கள், அது ஒரு நீண்ட பின்னணியாக, இரண்டு மணிநேரம், நான் இங்கு பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான் மிக அருமையாக உணர்ந்தேன், நான் அப்பொழுது தான் கொலராடோ விலிருந்து (colorado) திரும்பி வந்தேன். நான் மிகவும் அற்புதமாக உணருகிறேன், ஆகவே நான் நான் உடனடியாக எழுப்புதலைத் தொடங்கப் போகிறேன். என்னுடைய அருமையான நல்ல நண்பர்களான, கலிபோர்னியாவைச் சேர்ந்த சகோதரன் ஆர்கன்பிரைட் (Arganbright), LOMMILD அநேகர், மற்றும் கிறிஸ்தவ வர்த்தகப் புருஷர்கள், இடஹோவில் அவர்களை சந்திக்கும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆகவே, நான் காலையில் கலிபோர்னியாவுக்குச் செல்ல வேண்டும்; செவ்வாய்க்கிழமை இடஹோ வரைச் செல்ல வேண்டும். அவர்கள் பாம்பாறு (snake river) போன்ற இடங்களுக்குச் செல்லும் போது, நானும் அவர்களுடன் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆகவே, எனக்கும் கூட்டங்கள் எதுவும் நிர்ணயிக்கப்படாததினால், எனவே நான்... உங்களுக்குத் தெரியும், ஒருவர் உங்களுக்காக ஏதாகிலும் நல்லது செய்தால், நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள். அது சரி. அவர்கள் எனக்கு நல்லவர்களாக இருந்தார்கள். ஆகவே நான் உள்ளே சென்று கர்த்தரிடம் கேட்டேன், நான் இங்குச் செல்வது சரியாக இருக்கும் என்று அவர் என்னிடம் கூறுவது போலத் தோன்றியது, எனவே நான் செல்கிறேன். 2. தேவனுக்குச் சித்தமானால், திரும்பி வந்த பின்னர், ஒரு எழுப்புதலைத் தொடங்கி, பழைய பாணியிலான ஒரு அருமையான நேரத்தைப் பெறுவோம். இப்பொழுது நீங்கள் அதைக் குறித்து சிந்தித்து, தேவன் வானத்தின் பலகணிகளைத் திறந்து நம்மீது எழுப்புதலின் ஆவியை ஊற்றும் படியாகவும் மற்றும் அதைக் குறித்து ஜெபிக்கும் படியாகவும் விரும்புகிறோம். 3. இன்று காலை நாங்கள் சொன்னது போல், உங்களுக்குத் தெரியும், தண்ணீர்... உதாரணமாக, நதியை என்னால் கூற முடியும். இப்பொழுது, சில சமயங்களில் நதி மிகக் கரடு முரடாக, குதித்து, துள்ளிக்கொண்டிருக் கின்றது, ஆனால் அதில் தண்ணீர் இல்லாத பொழுது அதனால் முடிந்த வரை அமைதியாக இருக்கிறது. ஆனால் அது ஒரு எழுப்புதலைப் பெற்றிருக்கும், நீங்கள் பாருங்கள். காற்றானது அதின் மேல் வீசி அதைக் குதித்து களிகூரச் செய்கிறது. அதிலுள்ள நன்மையான காரியம் என்னவென்றால் அது தண்ணீரிலுள்ள அனைத்து குச்சிகளையும் குப்பைகளையும் மிதக்கச் செய்து கரையில் தள்ளிவிடுகிறது. 4. எழுப்புதலும் அதைத் தான் செய்கிறது, அது நம்மை ஆட்கொள்ளும் வரை அது நம்மைச் சுற்றிலும் துள்ளச் செய்கிறது... நீங்கள் பாருங்கள், நாம் கீழே துள்ளிக் கொண்டு, மேலே துள்ளிக் கொண்டு, அங்கே துள்ளிக் கொண்டு, அதற்காக ஜெபித்துக் கொண்டு, அண்டை வீட்டாரிடம் சென்று, துள்ளிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் அறிய வேண்டிய முதலாவது காரியம், "உங்களுக்குத் தெரியுமா, எப்படியாயினும், அண்டை வீட்டாரிடம் அதைக் குறித்து நீங்கள் பேச வேண்டாமா" என்பதை கர்த்தர் நமக்கு வெளிப்படுத்துகின்றார். "நல்லது, நான் அவரிடம் சபைக்கு போகும்படி கேட்கப் போகிறேன்." 5. உங்களுக்குத் தெரியும், அவ்விதமான துள்ளல் சிறிது துளிர்விடுகிறது. ஆகவே தான் இந்த வருகையின் நேரத்தில் நாம் அதைச் செய்ய விரும்புகிறோம் 6. இப்பொழுது, உங்களுடைய நேரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை, ஏனெனில் நாளைய தினம் - திங்கட்கிழமை, வேலை நாளாக உள்ளது என்று எனக்குத் தெரியும். இந்த எழுப்புதலின் நேரத்தில், தேவனுக்குச் சித்தமானால், ஏறக்குறைய ஒரு இரவில் ஒன்றரை மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரத்தை எடுத்துக்கொள்ள விரும்புகிறோம்; பாடல் ஆராதனை, பின்பு சரியாக வார்த்தையின் போதனைக்குள்ளாக செல்வோம். 7. பாடல்கள் அற்புதமானவைகள், ஆனால் பாருங்கள், அளவிற்கு அதிகமான பாடல்களால் ஒரு கூட்டத்தைக் கெடுத்து விட முடியும் என்று நான் நினைக்கிறேன். பார்த்தீர்களா? நாம் பாடல்கள் பாடலாம், ஆனால் தேவனுடைய வீடு என்பது, திருத்துதலுக்காக, வார்த்தைக்காக, புரிந்துக் கொள்ளுதலுக்காக, அறிவுரைக் காக, மற்றும், நாம் நடந்து கொள்ளும் முறையை அறிந்து கொள்ளுவதற்காகத்தான். இன்றிரவு இருந்தது போன்று, நீங்கள் அருமையான பாடல்களை நீங்கள் கொண்டிருக் கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். அது மிக அருமையானது. 8. இப்பொழுது, இவ்வேளையில் நிச்சயமாகவே, நமக்கு சில விசேஷமானவைகள் இருக்கின்றன. ஒரே இரவில் அவை முழுவதையும் கொண்டிருக்க முடியாது, ஆனால், இரவுக்கு இரவு நமக்கு விசேஷமானவைகள் இருக்கின்றன. 9. நீங்கள் ஜனங்களை உள்ளே அழைத்து வரும்படி நாங்கள் விரும்புகிறோம். வேண்டுமானால் நாங்கள் திரும்பி வந்த பின் அதைக் குறித்து ஒரு தீர்மானமான அறிவிப்பை அளிக்கலாம் நீங்கள் அதை எதிர்பார்த் திருங்கள். செய்தித்தாளில் ஒரு சிறிய விளம்பரத்தைப் போடலாம். மேலும், நீங்கள் அனைவரும் வெளியே வாருங்கள். இப்பொழுது, இது ஒரு சுகமளித்தல் ஆராதனையாக இருக்காது. இது எழுப்புதல் ஆராதனையாக இருக்கும். 10. இப்பொழுது, எழுப்புதல் என்பது ஒரு புதிதாக ஏற்றுகொள்ளக் கூடியவர்களை கொண்டு வருவதல்ல. எழுப்புதல் என்பது அது முன்னமே ஏற்றுக்கொண்டவர் களை உயிர்ப்பிப்பதாகும். பார்த்தீர்களா? எழுப்புதல், என் பது "உயிர்ப்பிப்பது," பாருங்கள், "கொண்டு வருவது," "மறுபடியும் ஜீவிக்கச் செய்வது." சில சமயங்களில், சபையே, நாம் ஒரு சிறிய தளர்ச்சியை அடைகிறோம். ஆகவே நீண்ட நாட்களுக்கு முன்பு நாம் கொண்டிருந் ததுபோல, பழைய நாட்களில் ஒன்றைத் தேடுகிறோம் 11. சிறிது முன்பு கெர்ட்டி(Gertie) என்னை அழைத்து, அவளும் சகோதரி ஆஞ்சியும் கடந்து வந்து எனக்காகக் கூட்டத்தின் - நேரம் (நாற்பது வருடங்களுக்கு முன்பு என்பதைப் பாடுவார்கள் என்றாள். ஆகவே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்... மேலும், மற்ற சபையின் சகோதர சகோதரிகளுக்கு அவர்கள் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள் என்பதை தெரிவியுங்கள். 12. இப்பொழுது, இன்று காலையில் அறிவித்த படி, ஒரு ரு ஆழமான பாடப் பொருளை இன்றிரவு நாம் தியானிப்போம். நம்முடைய சகோதரன் நெவிலின் உபசரிப்பையும், தயவையும் நான் நிச்சயமாகவே பாராட்டுகிறேன். நம்மை முன்பு போகச் செய்து எப்பொழுதும் பின்புறம் அமர ஆயத்தமாக உள்ளார். அது தான் ஒரு உண்மையான சகோதரன். அது இல்லாதபோது செய்யும்படிக்கு அவருடைய பிரசங்க பீடத்தை கொடுக்கின்றார். ஆகவே, நாம், நான் சகோதரன் நெவிலை அதிகமாகப் பாராட்டுகிறேன். நான் அவரிடம் செய்யும்படி கூறும் எல்லாவற்றிலும் அவர் எப்பொழு துமே ஒத்துழைப்பாக இருக்கிறார், அது போன்று, அதைச் செய்யும்படியான வேலையில் அவர் சரியாக இருக் கின்றார். ஆகவே இப்படிப்பட்ட ஒரு சகோதரனை நான் பாராட்டுகிறேன். 13. இந்தக் காலையில்... கடந்த நான்கு மாதங்கள், அல்லது அதற்கு ஒப்பாக, எபிரெயர் புத்தகத்தில் 9-ம் அல்லது 10-ம் அதிகாரத்திலிருந்து நாம் தியானித்துக் கொண்டிருந்தோம். இந்தக் காலையில், நாம் 8-ம் வசனத்தில் தொடங்கி, அதனுடாக 25-வது வசனம் வரை சென்றோம் என்று நான் நினைக்கிறேன். பிறகு, இன்றிரவு, கர்த்தருக்குச் சித்தமானால், மன்னிக்க முடியாத பாவம்... என்பதின் பேரில் பிரசங்கிப்பதாக நான் அறிவித்தேன். மன்னிக்க முடியாத பாவம் என்பது என்ன? 14. இப்பொழுது, ஒரு பின்னனியைப் பெறுவதற்கு, இந்தக் காலை வேளையில், வாசித்த வேதவாக்கியத்திற்கு திரும்பிச் சென்று, ஒன்று அல்லது இரண்டு வசனங்களை ஆராய விரும்புகின்றோம், அதன்பிறகு எபிரேயர் புத்தகம் 10-ம் அதிகாரத்தின் 25 அல்லது 26-ம் வசனத்தின், பொருளுக்குள்ளாகச் செல்லுவோம். 19-ம் வசனத்திலிருந்து ஆராயத் தொடங்கி, ஒரு சில காரியங்களை கண்டு கொள்ளுவோம். 15. பவுல், இங்கு பேசும்போது, நியாயப்பிரமாணத் தையும் கிருபையையும் பிரித்துக் காண்பிக்க முயற்சிக் கின்றார். கிருபையிலிருந்து நியாயப்பிரமாணத்தைப் பிரிப்பது என்பது தான் முக்கிய பொருள் அல்லது கொள்கையாகும். இங்கு அவன் பிரமாணத்தின் மூலம், கிறிஸ்துவை அணுகும் முறையையும்; கிறிஸ்துவின் மூலம் தேவனிடம் அணுகும் முறையையும் வெளிக்கொண்டு வருகிறான். அவன் அவைகளைப் பிரித்து காண்பித்து, ஒவ்வொரு பாகமும் எப்படிச் செயல்படு கிறது என்பதை ஒன்றுப்படுத்திக் காண்பிக்கிறான். சுவிசேஷத்தில், அவை வெவ்வேறு கால கட்டத்தில் இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே பாகத்தை செயல்படுத்திக் காண்பிக்கின்றன. 16. அதன்பிறகு நாம் கொண்டுள்ளதில், ஆராதிப்பவன் கடந்து வந்து, தன்னுடைய காணிக்கையை சிந்தப்பட்ட பலியின் மீது செலுத்துகிறான். இந்தக் காலை வேளையில் நாம் யோபுவின் புத்தகத்தைத் திருப்பினால், யோபு சர்வாங்க தகனபலியும், காணிக்கையும் இருந்த நாட்களில் ஜீவித்தான் என்பதை கண்டுக் கொள்ளலாம். அவனுடைய பிள்ளைகள் ஏதோ ஒருவிதத்தில் பாவம் செய்து, அவர்கள் பாவம் செய்ததை அறியாமல் இருக்கலாம் என்று அவன் நினைத்து, அதை சரிசெய்வதை நிச்சயப்படுத்தி கொள்ளுவதற்காக, யோபு அவனுடைய பிள்ளைகளுக்காக தகன பலியை செலுத்தினான். எனக்கு அது பிடிக்கும். உங்களுக்கு இல்லையா? உங்களுடைய பிள்ளைகள் மீது கவனம் செலுத்துங்கள்! தகன பலியை செலுத்தி, செலுத்தப்பட்ட பலியான ஆட்டின் பலியின் கீழ் ஒரு ஜெபத்தை ஏறெடுத்துத் தன்னுடைய பிள்ளைகள் இழக்கப்பட்டுப் போகாமலும், அவர்கள் பாவம் செய்திருந்தால், அவர் களுடைய பாவங்களை தேவன் அவர்களுக்கு மன்னிப்பதற்காகவும், அப்படிச் செய்தான்.. 17. பின்பு நாம் யோபின் காரியங்களின் ஊடாக சென்றுபார்த்தால், முடிவில் கொடுத்தது என்பதை கண்டு தன்னுடைய வேதனை மற்றும் அது எப்படி பலன் கொள்ளலாம். யோபு சோதனையின் ஊடாக கடந்து சென்ற பின், தேவன் முடிவில் அதற்கான பலனைக் கொடுத்தார். யோபு தன்னுடைய பிள்ளைகளில் ஒருவரையும் இழந்து போகவில்லை. அவனுடைய ஆடுகளையும், அவனுடைய கால்நடைகளையும், அவனுடைய எருதுகள் யாவற்றையும், அவனுடைய ஒட்டகங்கள் யாவற்றையும் அவன் மீண்டும் இரட்டிப்பாய் பெற்றுக்கொண்டான். அதன்பின்பு, தேவன் அவனுடைய பிள்ளைகளையும் அவனுக்கு மீண்டும் திருப்பிக் கொடுத்தார். அவர்கள் அனைவரும் பூமிக்கு மரித்திருந் தார்கள்; ஆனால் அவர்கள் மகிமையில் அவன் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். பாருங்கள், அவர்களில் ஒருவரும் இழக்கப் படவில்லை. தேவன் யோபுவுக்கு அவனுடைய குமாரத்திகளையும் அவனு டைய குமாரர்களையும் கொடுத்தார். நாம் நடக்க வேண்டிய வெளிச்சத்தில் நடந்து வாழ்வது என்பதன் பொருள், அவருடைய ஆளுகையின் கீழ், எல்லா கட்டளைகள் மற்றும் நியமங்களின் படி வாழ்வதாகும். 18. நாம் வேதத்தில் பார்க்கும் போது, இயேசுவின் இரண்டாவது உறவினரான (cousin) யோவான் ஸ்நானகனின் தகப்பனாகிய சகரியா, அவர் ஒரு நீதியுள்ள மனிதனாக இருந்தார். நீங்கள் அதை வேதத்தில் கவனித்திருக்கிறீர்களா? "நியாயபிரமாணத்தின் கீழ் வாழ்ந்த ஒரு நீதியான மனிதன்," அங்கு அவனுடைய வீட்டில் தொடர்ந்து ஜெபங்கள் செய்யப் பட்டு கொண்டே இருந்தது. அவனுடைய மனைவி, எலிசபெத்து, மலடியாயிருந்தாள். மேலும் பரிசுத்த ஆவியானவர் அவனிடம் ஒரு ரூபத்தில் அல்லது, பிரதான தூதன் காபிரியேலாக வந்திருந்தார். தேவால யத்தில் ஜெபம் செய்து கொண்டிருக்கும் வேளையில், அவன் தன்னுடைய காணிக்கையைச் செலுத்தி, தூபங் காட்டுகிற போது, தூபத்தை எரிக்கும் போது, தேவாலயத்தில் ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டு கொண்டிருக் கும் போது பிரதான தூதன் காபிரியேல் அவனிடம் வந்தார். ஏனென்றால் அவன் நடக்க வேண்டிய முழுமை யான வெளிச்சத்தில் அவன் நடந்து கொண்டிருந்தான். 19. நாம் நடக்க வேண்டிய முழு வெளிச்சத்தில், நடப்பதை மட்டுமே தேவன் நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார். 20. அது தான் சுவிசேஷமாக உள்ளது. சுவிசேஷத்தின் இந்த நோக்கமானது அந்நிய தேசத்தில் தோல்வியடைந்தது. ஏனென்றால் நாம் அவர்களுக்கு ஒரு கோட்பாட்டை, அல்லது சில மத சாஸ்திரங்களை, அல்லது, சில மனிதர்களால் உருவாக்கப்பட்டதை மட்டுமே கொண்டு செல்கின்றோம். மேலும், அதை, நாம் அவர்களுக்கு அளிக்கிறோம். ஆனால், அவர்கள் கொண்டுள்ள சொந்த வழிபாடுகளை விட அவை எந்தவிதத்திலும் அதிக பயன் அளிக்கக்கூடியதாக இல்லை. 21. மற்றொரு வார்த்தையில் கூறுவோமானால், சூரியன் ஒரு மகா வல்லமையானது, அதுதான் பூமியைக் கட்டுப்படுத்துகிறது என்று அவர்களுக்கு சொல்லி கொடுத்தால், அதில் ஓரளவு அர்த்தமுள்ளது. அப்பொழுது, அந்த சூரியன் மகா வல்லமையை கொண்டுள்ளது என்றும், சூரியன் மூலம் தாவரங்கள் வருகின்றது, சூரியன் மூலம் ஜீவன் வருகின்றது, சூரியன் மூலம்.... என்றும் அவர்கள் நம்புகின்றார்கள்... நல்லது, அது முற்றிலும் சரி, ஆனால் சூரியன் சிருஷ்டிகரின் ஒரு படைப்பாக மட்டும் தான் உள்ளது. 22. அங்கே மேடையில் நாம் ஒன்றைக் கொண்டிருந் தோம். இப்பொழுது உங்களில் அநேகர் அதைக் குறித்த கடிதங்களைப் பெற்றிருப்பீர்கள். அங்கிருந்த ஊழியர் களையும், காரியங்களையும் நீங்கள் அறிந்திருக்கலாம். ஒருவர் மேலே வந்தார்... அவர்கள் அமர்ந்து அவர் களுடைய கண்கள் முழுவதுமாக குருடாகிப் போகும் மட்டும் சூரியனைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சூரியன் அவர்கள் கண்களைப் பார்வையிழக்கச் செய்தால், அதன்பிறகு அவர்கள் பாவத்தையும் இந்த உலகத்தின் காரியங்களையும் காண முடியாது என்றும், இந்த உலகத்திற்கு குருடாகி விடுவதாகவும் அவர்கள் நினைக்கின்றனர். இதைச் செய்வதன் மூலம் தாங்கள் காக்கப்படுவதாக நினைக்கிறார்கள். இதுவே தேவனைக் குறித்து அவர்கள் கொண்டுள்ள அறிவு. இதைத்தான் அவர்கள் போதிக்கப்பட்டு, விசுவாசித்து, தங்கள் கண்களை சூரியனால் பார்வையிழக்க ஓப்புக்கொடுத்து அதன் மூலம் ஒரு பலியாக தங்களைக் கொடுப்பதினால் "தாங்கள் காக்கப்படுவோம்" என்று அவர்கள் போதிக்கப் பட்டுள்ளனர். 23. மற்றவர்கள் நெருப்பில் நடக்கின்றார்கள்; சிலர் முள் படுக்கைகளில் படுத்துத் தங்கள் கரங்களை உயர்த்தி, தங்கள் சமாதானத்தை கண்டுகொள்ளும் வரை கரங்களைத் தாழ்த்த மாட்டோம் என்று கூறுகிறார்கள். அவர்களின் கரங்களிலுள்ள நகங்கள் கைகளின் பின்னால் அவ்விதமாக வருடங்கள் தோறும், வருடங்கள் தோறும், கீழ் நோக்கி வளருகின்றன. அவர்கள் தங்கள் கரங்களைத் தளராவிடாமல் உயர்த்திப் பிடித்து, அவ்விதமாக நடக்கிறார்கள். நேர்மையாக, முற்றிலும் நேர்மையாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் சுவிசேஷம் இல்லை. 24. இப்பொழுது, அழியக் கூடியவர்களான அவர் களை நம்மைப் போலவே கருதிப் பார்ப்பது நமது கடமையாகும். மேலும், எப்படியிருந்தாலும், அவர்கள் மாம்ச பிரகாரமாக நம்முடைய சகோதரர்கள், ஏனெனில் மனிதர் யாவரையும் தேவன் ஒரே இரத்தத்தின் மூலம் படைத்தார். ஆதியில் ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு மனித சரீரமும், ஆதாம் என்னும் ஒரே மரத்திலிருந்து வந்துள்ளது. ஆகையால் இப்பொழுது, அதன் மூலமாக கிறிஸ்துவுக்குள் சகோதரர்களாக, ஜீவிக்கிற உண்மையான சுவிசேஷத்தை அவர்களுக்கு கொண்டுச் செல்லுவது நமது கடமையாக உள்ளது. பின்பு, அங்கே ஒருவர் இவ்விதமாக சிறிய விலங்குகள், மற்றும் பூச்சிகள் போன்றவற்றை வணங்கி கொண்டிருக்கின்றார்கள். அப்போது பாருங்கள், அவர்கள் சிருஷ்டிகருக்கு பதிலாக சிருஷ்டியை ஆராதிக்கின்றனர். பின்பு ஒரு விசை அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் சுவிசேஷத்தைக் கேட்கும் போதும்.. அதன்பின்பு அநேகச் சமயங்களில் அவர்கள் அதை, ஊழியர்களின் ஜீவியத்தின் மூலமும், சிறு வார்த்தைப் பிரதிகளை பரிமாறுதல் மூலமும் பலமுறைக் கேட்கிறார்கள். அவர்கள் சொல்வது.. 25. "உங்களில் எத்தனைப் பேருக்கு கர்த்தராகிய இயேசுவைப் பற்றித் தெரியும்?" என்று நான் கேட்டேன். அவர்களில் ஒவ்வொருவரும் அறிந்து இருக்கிறார்கள். "உங்களில் எத்தனைப் பேர் அவர் தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறீர்கள்?" பாருங்கள் அவர்களில் ஒருவரும் இல்லை. "நல்லது, அவர் எப்படிப்பட்டவர் என்பதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" ஓ, நமக்கு இருப்பதைப் போலவே, அவர் ஒரு நல்ல போதகரும், அதற்கு மேலுமாக இருக்கிறார். பார்த்தீர்களா? 26. ஏனென்றால், இது அது என்றும், தங்கள் கடவுள்களின் மூலமாக இயற்கையாகக் கிடைக்கக் கூடியது என்றும் எதுவுமே இல்லை. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மூலம் அவர் கூறின ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறும். அது சரி. அது தான் வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது. 27. அநேக வருடங்களாக பார்வையற்றக் குருடனாக இருந்த ஏழை மனிதன் அங்கு நின்றுகொண்டிருந்த போது "உங்களுடைய மார்க்கத்தால் இந்த மனிதனுக்கு என்ன செய்ய முடியும்?", என்று நான் கேட்டேன், நிச்சயமாக ஒன்றுமில்லை. "ஆனால் இப்பொழுதே இயேசு கிறிஸ்துவினால் இவருக்குப் பார்வையை திரும்ப கொடுக்க முடியும்" என்று நான் கூறினேன், அவர் அப்படியே செய்தார். ஆகவே, அது தான் - அது தான் சுவிசேஷத்தின் நம்பகத் தன்மையாக உள்ளது. 28. இப்பொழுது, இங்கு பவுல் எபிரெயரில் பேசும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்தும் பலியின் மூலம் தான் ஜனங்கள் தேவனை அணுக முடியும் என்பதை கூற முயற்சிக்கின்றான். அப்படியாகத் தான் நீங்களும் இயேசுவின் மூலம் அவரை அணுகுகிறீர்கள், ஏனெனில் அவர் தாமே உலகத்தின் பாவங்களைப் போக்கும் ஆட்டுக்குட்டியாக இருக்கிறார். தேவன் அதை அங்கீகரித்தார். இப்பொழுது அவர் கூறும்போது.... 29. பழைய ஏற்பாட்டில், அவர்கள் ஆட்டுக் குட்டியைக் கொண்டு வந்த போது, அவர்கள் தங்களுடைய காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தி னார்கள்; அது நடுங்கி மரிக்கும் வேளையில், அதனுடைய தலையைப் பிடித்து; அதன் கழுத்து வெட்ட பட்டபடியால், அதன் இரத்தம் அந்தச் சிறிய ஆட்டின் மீது முழுவதுமாக வழிந்தது; அப்பொழுது அவர் களுக்குப் பதிலாக அந்த ஆட்டுக்குட்டி மரித்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தார்கள். பின்பு, அவர்கள் திரும்பி வெளியே செல்லும் போதும், அவர்கள் உள்ளே வரும்போதும் இருதயத்தில் கொண்டிருந்த அதே கொடுமையோடு செல்கின்றனர். விபச்சாரம் செய்யும்படியான அதே ஆசையோடும், பொய் சொல்லும் அதே ஆசையோடும், திருடும் அதே ஆசையோடும், கொலை செய்யும் ஆசை மற்றும் அதைக் காட்டிலும் அதிகமாக. 30. ஆனால், ஒரு மனிதன் அவனுடைய கரங்களை ஒரு விசை வைத்தால்... ஓ, என்ன! ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவின் தலையின் மீது தன்னுடைய கரங்களை வைத்து, தன்னுடைய பாவங்களைப் அறிக்கை செய்து, பாவங்களுக்காக, பாவத்திலிருந்து மனிதனை மீட்க அவர் செலுத்தின, கல்வாரிப் பாடுகளையும் வேதனைகளையும் உணர்ந்தால்! இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திலிருந்து, பரிசுத்த ஆவி கடந்து வந்து அந்த மனிதனை சுத்திகரிப்பார். ஒரே முறையில் அவன் முற்றிலுமாக ஒரு புதிய சிருஷ்டியாக, வெளியே செல்கிறான். ஒரு வித்தியாசமான மனிதனாக வெளியே செல்கிறான். அவனுடைய எல்லாப் பாவங்களும் என்றென்றுமாய் தீர்க்கப்பட்டவனாக அவன் வெளியே செல்கிறான். "ஒரே பலியினாலே," என்று இங்கு வேதம் சொல்கிறது, "ஏனெனில் பரிசுத்த மாக்கப்படுகிறவர்களை ஒரேபலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தி யிருக்கிறார்." அவர் சொல்லுகிறார், "பரிசுத்த ஆவியான வர் அதைக் குறித்து சாட்சிக் கொடுக்கின்றார்" பார்த்தீர்களா? 31. "அந்த ஒரே பலி, என்றென்றைக்குமாக உள்ளது அவர் காணிக்கையாக தன்னுடைய ஜீவனை கொடுத்து, மகிமையின் வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கின்றார். மகத்தான சிருஷ்டிகரின் பிரசன்னத்தில், தேவனுடைய மகிமையில் அமர்ந்து நம்முடைய குற்றங்களுக்காய் பரிந்து பேசும் மகாப் பெரிய ஆசாரியரை நாம் கொண்டுள்ளோம்." 32. அதன்பின்பு, இங்கு, 19-ம் வசனத்தில்: ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், 33. அதைக் குறித்து சிந்திப்போம், பயப்பட வேண்டாம்! இன்று கிறிஸ்தவ சபையில் ஒரு பெரிய பாதிப்பாக இருப்பது "பயம்" தான். அவர்கள் பயப்பட வேண்டியதன் காரணம் என்னவென்றால், அவர்கள் சரியான விதத்தில் போதிக்கப்பட்டு, சுவிசேஷத்தில் சரியான வகையில் உறுதிப்படாமல் இருப்பதே ஆகும். 34. இங்குள்ள இந்த சிறிய இடமானது, தேவனுடைய வல்லமையின் தேன்கூடாகவும், எவ்விடத்திலுமிருந்து பறந்து வரக்கூடிய தேவனுடைய மகிமையின் ரீங்கார மாகவும் இல்லாமல் போவதற்கான காரணம் எதுவுமே இல்லை. இந்த சுவற்றிலுள்ள பழைய சிறிய துளை முதல், இங்கு அந்த சிறிய இடத்தில் நீங்கள் உட்காரந்திருக்கும் இருக்கை வரை சற்றேரக் குறைய எல்லாவற்றையும் இந்த முழு உலகமும் அறிந்துள்ளது. அதற்கு காரணம் வில்லியம் பிரன்ஹாம் அல்ல. ஆனால் அது, தேவ னுடைய குமாரனாகிய, இயேசு கிறிஸ்துவும், அவர்கள் போராடி காத்துக்கொண்ட அந்த சுவிசேஷமுமாக இருக்கிறது. இல்லை ஐயா, அதற்கும் எனக்கும் முற்றிலுமாக எந்த சம்பந்தமும் இல்லை. அவர் தாமே அதைச் செய்தார், இந்த இடத்தை உலகம் முழுவதும் அறியச் செய்தார். அது ஒன்றுமில்லாத வெறும் 1500 டாலர் மதிப்புள்ள கட்டமைப்பாக அல்லது அதுபோன்ற ஏதோவொன்றாக, இருந்த போது அதில் தரைக் கூட இல்லாமலேயே இங்கு அமைந்திருந்தது. ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவனே அவற்றைச் செய்தார். இப்பொழுது அவரிடம் உள்ளது... நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டு பண்ணினபடியால் ... 35. பழைய வழியில் அல்ல. "ஆனால் புதிதும் ஜீவனுமான வழியில்.." நியாயப்பிரமாணத்தின் கட்டளை என்பது ஒரு மரித்த வழியாக உள்ளது. ஆனால் நாம் இப்பொழுது பரிசுத்த ஆவியின் மூலம் கிருபையினால் பிரவேசிக்கிறோம். ஓ. நீங்கள் அதைக் காண்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நியாயப்பிரமாணம் சொல்லுகிறது, "தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே. மாம்சத்தை சாப்பிடாதே, ஓய்வு நாட்களை ஆசரி," எல்லாவிதமான ஆராதனையையும் செய்கின்றான். ஆனால் இந்த "புதிதும் ஜீவனுமான வழியில்," நம்மால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. அதுதான் கிருபையின் மூலம் அவர் நமக்காகச் செய்தது நாம் அதை ஏற்றுக்கொள்ள மாத்திரம் செய்வோம். கிறிஸ்து பாவங்களை விலக்கிப் போடுகிறார். நாம் அதை விசுவாசிக்க வேண்டும். சுவிசேஷத்தைக் கேட்டு, அதை விசுவாசித்து, அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பின்பு நாம் அதை நமது இருதயத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக ஏற்றுக் கொண்டால், தேவன் நமக்கு பரிசுத்த ஆவியை அடையாளமாகக் கொடுக்கிறார். 36. பின்பு பாவங்கள் போய்விட்டன என்பதற்கும் நீங்கள் உலகத்திற்கு மரித்து விட்டீர்கள் என்பதற்கும், பரிசுத்த ஆவியே சாட்சியாக இருக்கிறார். நீங்கள் புதிதான ஜீவனுடன் எழுந்து, புதிய வாழ்க்கையில் நடக்கவும், புதிய வாழ்க்கையை வாழவும், தேவனுடைய வல்லமை மற்றும் பிரசன்னத்தில் ஜீவிக்கவும் செய்கிறீர் கள். எல்லாவற்றையும் சுமந்து கொண்டு இருக்கிறவர் களாக இல்லாமல் ஆவியின் நடத்துதலின் படியாக தேவனுடைய குமாரரும் குமாரத்தியுமாய் இருக்கிறீர்கள். ரோமர் 8:1 கூறுகின்றது 'ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர் களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை". 37. இப்போது, இங்குள்ள உங்களில் பலர், மற்ற சபைகளிலிருந்து வந்திருக்கலாம். நான் மற்ற சபைகளை வம்பு செய்து, இந்த சபையை தட்டி கொடுக்க முயற்சிக்கிறேன் என்று நீங்கள் நினைக்க நான் விரும்பவில்லை. இந்த சபையிலிருந்து உலக ஆசையை வெளியேற்றத் தான் நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் அது தான் முக்கியமான காரியம். நான் செய்ய அநேகக் காரியங்கள் இருக்கிறது. ஆனால், அதைச் செய்ய முயற்சிக்கும் போது, மற்றவர்களை விமர்சிப்பது அல்லது திருத்த முயற்சிப்பது போன்றவற்றை விட்டுவிட்டு நாம் நம்முடையக் காரியங்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நம்முடைய சொந்தப் பிரச்சனைகள் இங்கே தீர்க்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதில், நாம் மற்ற எடுத்துக்காட்டுகளையும் பயன்படுத்த வேண்டும். சகோதரனே, உங்களுக்குத் தெரியுமா, உங்களுடைய சபைகளிலும், நாம் அனைவரும் நம்மைச் சுற்றிலும் உள்ள எல்லாக் காரியங்களும் சரிசெய்யபட வேண்டும். நீங்கள் அதைப் புரிந்து கொள்ளுவீர்கள். 38. எனவே, அதைக் குறித்த காரியம், என்னவென்றால், தேவன் எந்தவொரு ஸ்தாபனத்தையோ அல்லது எந்தவொரு ஜனக் குழுவையோ அடையாளம் கண்டுக் கொள்ளவில்லை என்பதைக் காண வேண்டும். நீங்கள் மெத்தோடிஸ்டாக, இருந்தால், நீங்கள் மெத்தோடிஸ்டு என்ற காரணத்தினால் அவர் உங்களை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. நீங்கள் பெந்தெ கொஸ்தேயாக இருந்தால், நீங்கள் பெந்தெகொஸ்தே என்ற காரணத்தினால் அவர் உங்களை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அவர் ஒரு தனிப்பட்ட மனிதனைத் தான் அடையாளம் கண்டுகொள்ளுகிறார், ஆமென், அதாவது பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்து, கிறிஸ்து இயேசுவில் புதிய சிருஷ்டியாக்கப் பட்டவர்கள். 39. அவர் ஸ்தாபனங்களை அடையாளம் கண்டு கொள்வதில்லை. அவர் பெரிய கூட்டங்களை அடை யாளம் கண்டு கொள்வதில்லை. அது பெரிய கூட்டம் என்னும் காரணத்திற்காக தேவன் ஒருபோதும் பெரிய கூட்டங்களில் வருவதில்லை. அவர் வருவார் என்று ஒரு மனப்பட்ட இருதயங்கள் எதிர்பார்த்து இருக்கும் போது அவர் வருவார். இயேசுவைப் பாருங்கள், அவர் மிகவும் தாழ்மையான சபைக்காக "இரண்டுபேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ" என்று கூறியுள்ளார். 40. இப்போது, இந்தக் காலை வேளையில் நான் கூறியப்படி, நான் மறுபடியும் இப்பொழுது கூறுகிறேன், அதாவது இங்குள்ள நம்முடைய நம்முடைய சிறிய சபையே, நம்மைப் பொறுத்தவரை, நாம் தேவனுடைய கலப்படமற்ற வார்த்தையில் நிற்க முயற்சிக்கிறோம். அது இங்கிருந்து தான் வர வேண்டும். - 41. சபைகள், தங்களுடைய சபைகளை ஒழுங்குப் படுத்தும் போதும், அவர்கள் காரியங்களைச் செய்யும் போதும், தங்களுடைய இறையியல் (theology) கொள்கை யினால் தேவனுடைய ஆசீர்வாதங்களை தடுத்துப் போடுகின்றன. அதைத் தகர்த்துப் போட்டு தேவன் தம்முடைய ஜனங்களை ஆசீர்வதிக்க முடியாது. பரிசுத்த ஆவி சபைக்குள் வராதவரை அவர்களுடைய சபை மிகப் பாரம்பரியமாக, கடினமாக, மற்றும் விறைப்பாக இருக்கிறது. பின்பு அவர்களை இப்படியாகச் செய்யப் பண்ணின சாத்தான் காணும் போது, எப்படியாயினும் யாரோ அதை உடைத்துப் போடுவார்கள் என்று அறிந்து அவன் சுவிசேஷம் இல்லாத மற்றொரு வழியைத் திறக்கச் செய்து, மதவெறிக்குள்ளாக அவர்களை ஓடச் செய்வான். அது சரி. பார்த்தீர்களா? அவர்கள் மதப் பைத்தியங்களின் கூட்டமாகவோ அல்லது விறைப்பானக் கூட்டமாகவோ இருப்பார்கள். ஆனால் சபையின் நடுவில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் உள்ளது. 42. இந்தக் காலை வேளையில் நான் பேசியபடி, சில நிமிடங்களில் கேட்க வேண்டும் என்று வைத்திருக்கும் இந்த மகத்தான கேள்விக்கு இப்போது திரும்புவோம். இதுதான், அதாவது மனிதன் மற்றொருவரின் ஆவியைப் பெற்று கொள்கிறானா? கர்த்தருடைய ஆவிக்கு பதிலாக ஏதோவொரு மனிதனின் ஆவியைப் பெறாதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு சபைக்குள் சென்று, மேய்ப்பர் செயல்படும் விதத்தை கவனித்துப் பாருங்கள், அதேவிதமாகவே ஜனங்களும் செயல்படுவதைப் பாருங்கள். பார்த்தீர்களா? மேய்ப்பன் விறைப்பான, கடின மனிதனாக இருந்தால், ஜனங்களும் அவ்விதமாகவே இருப்பார்கள். காட்டு மிராண்டித்தனமும் வெறியுமுள்ள இடத்திற்கு நீங்கள் சென்றீர்களெனில் ஜனங்களும் அவ்விதமாகவே இருப்பார்கள். 43. ஆகவே, சகோதரர்களே, இன்றிரவு இந்தக் கூடாரத்தில் எளிமையாக, முழுமையாக, இலவசமாக மற்றும் அதின் வல்லமையுடன் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் விவேகமுள்ள ஒரு மேய்ப்பருக்காய் நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். ஆம் ஐயா. 44. இந்த உலகில் நான் ஏதோவொன்றைச் சரியாகப் பிரதிநிதித்துவம் செய்தாலும், மனித நேயத்தை நான் சரியாகப் பிரதிநிதித்துவம் செய்யாவிட்டாலும், இயேசு கிறிஸ்துவின் ஜீவியத்தை நான் பிரதிநித்துவம் செய்ய விரும்புகிறேன். 45. நான் வேதாகம கிறிஸ்தவனாய் இருக்க விரும்பு கிறேன். வேதம் என்ன சொல்லுகின்றதோ அதைத் தான் நான் விசுவாசிக்க விரும்புகின்றேன். யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை அல்லது யாரும் அதைச் செய்ய வில்லை என்றாலும் அது ஒரு பொருட்டல்ல, நான் அவர்கள் சார்பில் விழாமல், வேதாகமத்தையே விசுவாசிக்க விரும்புகின்றேன். இது தேவனுடைய வார்த்தையாக உள்ளது. இது தான் உண்மையான இரட்சிப்பின் திட்டமாக உள்ளது என்பதை நான் விசுவாசிக்கிறேன். காலங்களை அசைத்து என்றென்றைக்கும் நிற்கும் ஒரே கன்மலை தேவனுடைய வார்த்தை மட்டும் தான். "வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை" என்று இயேசு கூறியுள்ளார். ஆகவே இது தான் சத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன். தேவன்... (சகோ. பிரன்ஹாம் பிரசங்கப் பீடத்தை நான்கு முறைத் தட்டுகிறார்) 46. என்னுடைய சிறிய சபைக்கு முன்பாக நான் இதைத் தாழ்மையாக கூறுகிறேன். இதை என்னால் பெரியக் கூட்டங்களில் கூற முடியாது. ஏனென்றால் அவர்கள் அதை எடுத்துக் கொள்வார்கள். மேலும், தேவன் காண்பிக்கும் தரிசனங்களைப் பார்ப்பவன் என்பதால், அது என்னை எந்தவிதத்திலும் எங்கோ பத்து நிமிடத்திற்கு முன்பு மாற்றப்பட்ட குடிகாரனை விட மேலானவனாக ஆக்கிவிடாது. அது சரி. என்னை போலவே அவனும் ஒரு கிறிஸ்தவன், என்னைப் போல அதே பரலோகத்திற்கு சென்று, நானோ அல்லது என்னை போன்ற வேறு எவரோ பெறவிருக்கும் அதே ஆசீர்வாதங்கள் மற்றும் காரியங்களைப் பெற்று சந்தோஷமாக அனுபவிக்கப் போகிறான். 47. அங்கு தேவனுடைய ராஜ்ஜியத்தில் மகத்தான ஜனங்கள் என்றோ, பெரிய ஜனங்கள் என்றோ எதுவு மில்லை. நாம் அனைவரும் ஒன்றாயிருப்போம். அது சரி. அனைவரும் அதே நபராக சகோதர சகோதரிகளாக இருப்போம். நாம் மஞ்சளாகவோ, கருப்பாகவோ, வெள்ளையாகவோ எப்படி இருந்தாலும், நாம் என்னவாக இருந்தாலும் சரி, கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் ஒன்றாயிருப்போம். அங்கே டிடி. எல் எல் (LL) உடையவர்கள், மிகச்சிறிய நபர், டீக்கன்கள், வாயில் காப்பாளர் அல்லது அவர்கள் என்னவாக இருந்தாலும் சரி அது ஒன்றுமே இல்லை. அவர்கள் அனைவரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரே நபராக, ஒன்றாயிருப் பார்கள். நாம் மற்றொருவருக்கும் மேலானவர்கள் அல்ல. அதனால் தான் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் சகோதர சகோதரிகளாக இருக்கிறோம். 48. அதன்பிறகு, நாம் ஒன்று கூடி வந்து, ஒருமனதோடு, இருதயத்தின் ஒருமனதோடு, உன்னதங் களில் அமரும் போது, பரிசுத்த ஆவியானவர் கடந்து வந்து நம்மை ஆசீர்வதித்து, தேவனுடைய விலையேறப் பெற்ற வார்த்தையை நமக்கு அளிப்பார். பின்பு, இதை அநேகச் சமயங்களில், தரிசனங்கள் ஊடாகக் காண்போம். 49. யாராவது என்னிடம் எதைக்குறித்தாவது சொன் னாலோ, அல்லது நான் கண்ட தரிசனத்தைக் குறித்துப் பேசியிருந்தாலோ அல்லது எதையாவது முன்னுரைத்திருந்தாலோ அந்தப் பதிவை நான் எடுத்து கேட்பேன்; நான் எதைக்குறித்தாவது அல்லது எந்தவொரு தரி சனத்தைக் குறித்தாவது நான் சொல்வதற்கு முன் அந்தத் தரிசனத்தை தேவனுடைய வார்த்தையுடன் சரிப் பார்ப்பேன். அது தேவனுடைய வாரத்தையின் படி இல்லையெனில், நான் சொல்வேன், அது தேவனுடைய வாரத்தையின் படி இல்லையென்று நான் சொல்வேன். இதுவரை அது எப்போதும் தேவனுடைய வார்த்தையின்படியே உள்ளது. தேவனுக்கே நன்றிகளை ஏறெடுக்கிறேன். ஆனால் அது தேவனுடைய வார்த்தைக்குப் புறம்பானதாக இருந்தால், "அதுத் தவறாக இருக்கிறது, அதற்குச் செவிக்கொடுக்காதீர்கள்"என்று சொல்வேன். இங்கேயுள்ள, தேவனுடைய வார்த்தையே சத்தியம். 50. மேலும், நீங்கள் தேவனிடம் தெளிந்த மற்றும் ஆரோக்கியமான மனநிலையுடன், யாதொரு தீமை செய்யும் நோக்கமும், பாரபட்சமும் இல்லாமல் திறந்த இருதயத்தோடும் கற்றுக்கொள்ளும் மனநிலையோடும் வரும்போது தேவனால் நமக்கு கற்றுக்கொடுக்க முடியும். நாம் கற்றுக்கொள்ள விருப்பம் கொள்ளும்போது, நாம் முன் கற்பிக்கப்பட்ட பாரம்பரியத்தையும், கருத்துக்களையும் ஒதுக்கி புறம்பாக்க வேண்டும், இப்பொழுது, அம்மா உங்களுக்கு கற்பித்த காரியங்கள் மிக அருமையானது என்று எனக்குத் தெரியும், ஆனால், சில நேரங்களில் அம்மாவும் தவறானக் காரியங்களைக் கொண்டிருக்கின்றார்கள். 51. என்னுடைய தாயார் இங்கு அமர்ந்திருக்கிறார்கள், நான்.....சில நிமிடத்தில் கொண்டுவரவிருக்கும் பொருள் அதுதான். சில வருடத்திற்கு முன்பு, என் தாயார் என்னிடம் கூறினார், "மன்னிக்க முடியாத பாவம் என்பது ஒரு பெண்....கருக்கலைப்பு செய்வது தான்" என்று அவர்கள் நினைத்திருந்தார்கள். மற்றொரு வார்த்தையில் கூறினால், 'ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே, அதனுடைய ஜீவனை எடுப்பது. அதை அவளுக்கு எப்படி மன்னிக்க முடியும்?" என்றாள். தாயார், அவளுடைய அறிவில் அவள் அறிந்த எல்லாவற்றிலும், அது உண்மையாக இருந்தது. பார்த்தீர்களா? ஆனால், அது தேவனுடைய வார்த்தையின்படி உண்மையல்ல. ஆகவே அது தான் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றது. 52. எனவே சிலர், "நான் ஒரு கத்தோலிக்கனாகப் பிறந்துள்ளேன். என்னுடைய தாயாரும் கத்தோலிக்கர். அவள் என்னை கத்தோலிக்கனாக வளர்த்தாள். நான் ஒரு கத்தோலிக்கனாகவே இருக்கப் போகிறேன்" என்று கூறுகின்றனர். 53. நல்லது, நான் ஒரு பாப்டிஸ்ட்டாக (Baptist) வளர்க்கப்பட்டேன், ஆனால் நான் ஒரு பாப்டிஸ்ட்டாக நீடிக்கவில்லை. பாப்டிஸ்டு உபதேசம் (Doctrine) தேவனுடைய வார்த்தை சொல்லுவதற்கு மாறாக இருப்பதை நான் கண்ட போது, நான் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து, மற்ற மனிதர்களின் வார்த்தைகளைப் பொய்யாக விட்டுவிட்டேன். அதாவது... மனித னோடு சேர்ந்து நானும் விழுந்து போகவில்லை. நான் சொல்கிறேன், "சகோதரனே, இதைத் தான் நான் விசுவாசிக்கிறேன். நான் இன்னும் உங்களுடைய சகோதரன் தான், ஆனால் இதுதான் தேவனுடைய வார்த்தை என்று நான் விசுவாசிக்கிறேன்" என்று சொல்வேன். 54. இப்பொழுது, நீங்கள் அடிப்படை அஸ்திபாரத்தில் சரியாக அமையும் போது மேற்கொண்டுச் செல்வதற்கானத் துணிவு உங்களுக்குத் தானாக வந்துவிடும். 55. இப்பொழுது, நான் ஜனங்களை அறிவேன். மேலும் நீங்கள் எல்லோரும் ஒத்துக்கொள்ள வேண்டியது, ஜனங்கள் பரிசுத்த கூட்டங்களில் (holiness groups) உள்ளனர், பெந்தெகொஸ்தே கூட்டங்களில் உள்ளனர். நசரேயக் கூட்டங்களில் உள்ளனர், மற்றும் பரிசுத்த யாத்ரீகர்கள், (pilgrim Holiness) மற்றும் மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, மற்றும் பிற அமைப்புகளிலும் உள்ள மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக நடிக்கிறார்கள், ஆனால் அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. அவர்களுடைய இருதயத்தின் ஆழத்தில் அவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்கள் இல்லை என்பது அவர்களுக்கேத் தெரியும். ஆனால் இந்தக் கூட்டங்களில் இருக்கும் எந்த ஒரு புருஷனோ, ஸ்தீரியோ இயேசு கிறிஸ்துவை சந்தித்த வர்களாய் தங்களுடைய பாவங்களுக்காக உண்மையாக மனந்திரும்பி, உண்மையான, ஒப்புக் கொடுக்கப்பட்ட இருதயத்துடன், "கர்த்தாவே, நான் உம்மை உண்மையாக விசுவாசிக்கிறேன் என்று சொல்வார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால் அப்படி அவர்கள் ஒப்புக்கொடுப்பார்களானால் அந்த நேரமே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை தேவன் அவர்கள் மீது வைப்பார். 56. இப்பொழுது, நீங்கள் விசுவாசிதான், ஆனால் அதை அவர் உங்களுக்கு நிரூபிக்கும் வரை தேவன் உங்களுடைய விசுவாசத்தை அங்கீகரிக்க மாட்டார். ஆமென். ஓ, சகோதரனே, நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்லுகிறேன். உங்களுடைய விசுவாசம்..... அது உங்களுடைய சொந்த சிந்தனையில் அங்கீகரிக்கப் படலாம், ஆனால் அது தேவனுடைய சிந்தனையில் வரும்போது, தேவன் அந்த விசுவாசத்தை பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் முத்திரையிடுகிறார். ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. மேலும், தேவன் அவனை ஏற்றுக்கொண்டதின் அடையாளமாக விருத்தசேதனம் என்னும் முத்திரையை அவனுக்குக் கொடுத்தார். அல்லேலுயா! இன்று, ஜீவிக்கிற தேவனுடைய முத்திரை என்பது (வேத வசனத்தை ஆராய்ந்து பாருங்கள்) மனித இருதயத்தின் மேல் ஊற்றப்படும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமாக உள்ளது. ஆமென் எபேசியர் 4:30 கூறுகின்றது, 'அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." தேவனுடைய முத்திரை என்பது தேவன் உங்களை ஒரு விசுவாசியாக அங்கீகரிக்கும் போது, பரிசுத்த ஆவியின் மூலமாக அந்த சரீரத்திற்குள் ஞானஸ்நானத்தின் உங்களை முத்திரையிடுகிறார். 57. மேலும் நீங்கள் கோட்பாடுகளை, உணர்வுகளை, மற்ற எது ஒன்றையும் விசுவாசிக்கும் படி வஞ்சிக்கப் படாமலிருக்கலாம்.... அது அனைத்தும் சரி; நான் அதற்கு எதிராக எதுவும் சொல்லவில்லை. தேவன் அதை உங்களுக்கு எவ்விதம் கொடுத்திருந்தாலும் சரி, நீங்கள் பாருங்கள், அது உங்களுக்கும் தேவனுக்கும் உரியதாய் உள்ளது. ஆனால் ஆவியினால் பிறந்த ஒரு மனிதன் இருப்பானானால் அவன் கூடுமானவரை தைரியத் துடனும், தாழ்மையுடனும் இருந்து கிருபையின் சிங்காசனத்தை நோக்கிச் சென்று தனக்கு ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கும் அதிகாரம் உண்டு என்பதை அறிந்திருப்பான். ஏனெனில், அந்த நபருக்கு ஏதோ வொன்று சம்பவித்துள்ளது, உலகத்தில் வேறு எங்கும் அவனால் கண்டறிய முடியாத ஒரு அனுபவத்தை, அவன் பெற்றுள்ளான். தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும் தங்களுக்குள் ஒரு அனுபவத்தை பெற்றிருக்கின்றார்கள். அது எப்போது சம்பவித்தது, எப்படி சம்பவித்தது, மற்றும் அது அவர்களுக்குள் எந்த விதமான விளைவை ஏற்படுத்தியது என்பதை நேரடியாக அவர்களே அறிந்திருப்பார்கள். தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஸ்திரீக்கும் ஏதோவொன்று சம்பவித்துள்ளது, ஏதோவொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது... அது என்ன? அதுதான் மனந்திரும்புதலாய் உள்ளது. 58. இந்தக் காலை வேளையில் நாங்கள் சொன்னபடி; அங்கே ஒரு பழைய தாள் (sheet) உள்ளது. அது எவ்வளவு அழுக்காக இருக்கக் கூடுமோ அவ்வளவு அழுக்காக முழுவதும் மையினால் கறையாகி மற்றும் மற்ற எல்லாவிதத்திலும் அசுத்தமாக, எந்த ஒன்றும் அதை மாற்ற முடியாத நிலையில் உள்ளது. ஆனால்... அதைக் குளோராக்ஸ் (Clorox) நிறைந்த ஒரு கேனில் அல்லது ஒரு தொட்டியில் முழுக்கி, வெளியே எடுத்தால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெள்ளையாக மாறிவிடும்.. அதைத் தான் தன்னுடைய பாவத்தை அறிக்கைச் செய்கிற எந்தவொரு விசுவாசிக்கும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் செய்கிறது. அது கூறுகிறது: இம்மானுவேலின் இரத்தத்தால், நிறைந்த ஊற்றுண்டே, எப்பாவத்தீங்கும் அதினால், நிவிர்த்தியாகுமே. 59. பின்பு தேவன் அந்தத் தாளை அசைத்துப் பார்த்து அது, பரலோகத்திலிருந்து வீசும் பலத்த காற்று போல வருகிற தேவனுடைய பரிசுத்த காற்றினால் அது காய்ந்ததைக் காணும்போது, அவர் பரிசுத்த ஆவியை எடுத்து அதை மீட்பின் நாளுக்கென்று முத்திரையிடுகிறார். 60. மேலும், சாத்தான் அந்த முத்திரையைப் பார்க்கும் போது, அதனிடத்தில் அவனால் வர முடியாது. அவன் அதை கிண்டல் செய்வான், அதை சலசலப்புச் செய்வான், வம்பு செய்வான், ஆனால் அவனால் அதை எடுத்துக் கொள்ள முடியாது. அது சரி. அவனால் அதை எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் அங்கே இருக்கும் தேவனுடைய முத்திரை அவனைத் தடை செய்கிறது, அல்லேலூயா, அதைத் தொட அவனைத் தடை செய்துள்ளது. அது தேவனுடைய தனிப்பட்ட சொத்து அல்லேலூயா! ஆம் ஐயா. 61. அதுவே ஒரு மனிதனை தைரியமாகத் தன் பாதையில் நடக்கச் செய்கிறது. அவர்கள் பின்வாங்கிப் போவதைக் குறித்துப் பயப்படுவதில்லை. இல்லை, ஐயா. அவர்கள் சாத்தான் சொல்லுவதைக் கேட்டுப் பயப்படுவதில்லை. 62. அதைக் குறித்து ஒன்றுள்ளது, நீங்கள் போய் உங்களுடையக் காரணங்களை ஆராய்ந்து பார்த்து, நீங்கள் அந்தக் காரணத்திற்கு ஏற்ப உங்களை வரையறைப்படுத்திக் கொள்ளலாம். அதைக் காரணம் காட்ட முயற்சிக்காதீர்கள். நீங்கள் "நான் இப்பொழுது பார்க்கிறேன் ஒருவேளை என்னால் இதைச் செய்ய முடியும்" என்று கூறலாம். காரணத்தைத் தேடாதீர்கள். அதை விசுவாசியுங்கள். காரணங்களைப் பார்த்து தேவன் வருவதில்லை. அவையாவும் காரணமற்றவை. எந்த மனிதனும் தேவனை கண்டறிய முடியாது. நீங்கள் அதை என்றுமே செய்ததில்லை, அவர்களால் அதைச் செய்ய முடியாது. காரணங்களை வைத்து நீங்கள் தேவனை அறிய முடியாது. 63. அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளவும். குழந்தையைப் போன்ற எளிமையான விசுவாசத்தின் மூலமும் நீங்கள் தேவனை அறியலாம். நீங்கள் அது தான் சத்தியம் என்று சொல்லி அதை விசுவாசியுங்கள். அவ்வாறு தான் நீங்கள் தேவனை அறிந்து கொள்ள முடியும். மற்றபடி அறிவினாலோ அல்லது, உங்களுக்குள் இருக்கும் அறிவின் வல்லமையினாலோ தேவனை அறிய முடியாது. ஆனால் விசுவாசம் என்பது தேவனிடமிருந்து வருகிறது. விசுவாசம் என்பது உங்களுக்குள் பிறக்கக் கூடிய ஒன்றாகவும், தேவன் உங்களுக்கு தந்தருளும் ஒன்றாகவும் உள்ளது. "விசுவாசமானது நம்பப் படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமா யிருக்கிறது." அல்லேலூயா! 64. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கலப்படமற்ற வல்லமையின் மூலம், அங்கிருந்து தான், அது வருகிறது, அது ஒரு மனிதனை புதிய சிருஷ்டியாக்கி, அவனுக்கு பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானத்தைக் கொடுக்கின்றது. அவனைக் கழுவி, சுத்தப்படுத்தி, தேவனுடைய ராஜ்யத்திற்குள் முத்திரையிடுகின்றது. அதன் பின்பு அவன் தான் எங்கு இருக்கிறேன் என்பதை அறிந்த வனாய் அங்கே நிற்பான். பாதாளத்திலுள்ள அனைத்து பிசாசுகள் வந்தாலும் கூட அவனை அதிலிருந்து அசைக்க முடியாது. நீங்கள் அவன் மீது இயந்திரத் துப்பாக்கியைக் கூட திருப்பலாம்... 65. இது ஏற்கனவே முயற்சிக்கப்பட்ட ஒன்றாகும். ஒரு சில வாரங்களுக்கு முன்பு, பழைய எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகள் இருந்த அடிநிலை கல்லறைக் குள் சென்றிருந்தேன், இரத்த சாட்சியாக மரித்தவர்களும் பரிசுத்தவான்களும் ஏறக்குறைய அவற்றில் இந்த அளவிற்கு எஞ்சியிருந்தன. அவர்கள் அவர்களை சிங்கங்களுக்கும் மற்றவைகளுக்கும் உணவாக அளித்த அரங்கத்தில் நின்று கொண்டிருந்தேன். மேலும் அவர்கள் "அவருடைய உயிர்தெழுதலின் வல்லமையில் அவரை அறிந்திருந்ததால்" என்றாவது ஒரு நாள் அங்கிருந்து யாவரும் அசைவினால் அவர்கள் ஜீவிக்கிற தேவனுடைய இரத்தத்தால் கழுவப்பட்ட பரிசுத்தவான்கள் வருவார்கள் என்பதை அறிந்தவர்களாய் அவர்கள் தங்கள் கண்களைக் கூட இமைக்காமல் மரணத்தினூடாக சென்றனர். ஓ சகோதரனே, தேவனை சந்தித்த எந்தவொரு மனிதனும் திரும்பவும் அதே மனிதனாக ஒருபோதும் இருக்க முடியாது. 66. அந்த வயதான லேகியோன், அந்த வயதான மனிதன் தன்னுடைய மோசமான மனநிலையில், இயேசு கிறிஸ்துவை சந்திக்க அங்கிருந்து வந்ததை நான் நினைவு கூறுகிறேன். அவன் லேகியோனாக இருந்தவரை பிசாசுகள் அவனை ஆட்கொண்டிருந்தன. ஆனால் அவன் கிறிஸ்துவின் பிரசன்னத்தில் ஒருமுறை வந்தபோது, தேவன் அவனுக்குச் செய்த நன்மையான காரியங்களை அவனுடைய ஜனங்களிடம் கூற வீட்டிற்கு கடந்துச் சென்றான். 67. அந்த மார்க்கம் உன்னை பைத்தியமாக்குகிறது என்று அவர்கள் கூறுவார்கள். அது அப்படி இல்லை. நீங்கள் இயேசு கிறிஸ்துவை சந்திக்கும் வரையில் நீங்கள் உங்களுடைய சரியான மனநிலையில் இருப்பதில்லை. ஏனெனில், உங்களுக்கு உங்களுடைய மனநிலையை தரக்கூடிய, ஜீவனின் அதிபதி அவர் மாத்திரமே ஆவார். ...ஆகையால், நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டு பண்ணினபடியால், (ஆமென்) அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாயிக்கிறபடியினாலும்; 68. மாம்சம் என்ன செய்கிறது? மாம்சம் இரத்தத்தை மூடி மறைக்கிறது. இரத்தம் தான் ஜீவன். இவ்விதமாக மட்டும் தான் நம்முடைய சரீரத்தில் ஜீவனை தக்க வைத்துக் கொள்ள முடியும். ஏனெனில் தோல், மாம்சம், திசு மற்றும் நரம்புகள் ஆகியவை இரத்தத்தை அவைகள் இருக்கும் பகுதியில் தக்க வைத்துக்கொள்ளுகின்றன. ஆகவே அவை நாம் வசிக்கும் இந்தக் கூடாரத்திற்கு ஜீவனை அளிக்கின்றன. அது சரியா? 69. அவ்விதமாகத் தான் தேவன் மனித குலத்தினிட மிருந்து திரை மறைக்கப்பட்டார், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் தேவன் தன்னை தோல், நரம்பு மற்றும் இரத்தத்தினால் திரைமறைத்துக் கொண்டார். அவருடைய கலப்படமற்ற பிறப்பு, பிதாவாகிய தேவன் கன்னி மரியாளை நிழலிட்டு அவருடைய சொந்த சிருஷ்டிப்பின் இரத்த அணுவை அவளில் உருவாக்கினார். அங்கே அவருடைய தோலானது அவரை மனிதனிடமிருந்து மறைத்து வைத்தது. 70. ஆனால் ஒரு நாள் மனிதனுடைய பாவம் அவருடைய இருதயத்தை ஈட்டியினால் திறந்தது, அவருடைய இரத்தமானது தரையில் ஓடியது. உலகத்தின் பாவங்களுக்காக அது இலவசமாகக் கொடுக்கப்பட்டது. இன்று அது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரத்தம் வந்தது போலவே ஆவியும் கூடவே வந்தது. தண்ணீரினால் கழுவப்பட்டு பின் இரத்தம் மற்றும் ஆவியின் மூலமாக நாம் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிறந்து, கிறிஸ்து இயேசுவில் புதிய சிருஷ்டிகளாக்கப் பட்டோம். 71. தேவன் அந்த மரித்து அசைவற்று கல்லறையில் இருந்த சரீரத்தை நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக உயிர்த்தெழப்பண்ணினார் இன்றிரவு அவருடைய மகிமையின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து நமக்காக வேண்டுதல் செய்கிறார். நாம் என்னவிதமான ஜனங்களாக இருக்கின்றோம், கோழைத்தனமாக, பின்வாங்கிப் போனவர்களாக நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று முதலாளியிடம் கூற பயந்து கொண்டும், அல்லது புதிய பிறப்பை பெற்றிருக்கிறேன் என்று ஒரு குடிகாரனுக்கு சாட்சி சொல்ல பயந்து கொண்டும் இருக்கிறீர்களா? "நமக்கு தைரியம் உண்டு," அல்லேலூயா, "அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாயிக்கிறபடியினாலும்." 72. ஓ, அவர்கள் உங்களை பரிசுத்த உருளையர் என்று அழைக்கலாம். அவர்கள் உங்களை என்ன வேண்டுமானாலும் அழைக்கலாம். அதில் என்ன வித்தியாசம்? அவர்கள் அவரை "பெயல்செபூல்" என்று அழைத்தார்கள். பார்த்தீர்களா? ஆனால், அவர்கள் உங்களை அழைக்கிறதினால் அது என்ன வித்தியாசத்தைச் செய்கிறது? அது தேவன் உங்களை அழைத்ததினால் தான். "பரிசுத்த உருளையர்! அறிவில்லாதவன்! மதவெறியன்!" என்று உலகம் கூறுகின்றது. "அவன் தவறானப் பாதையில் போய்விட்டான். அவன், அவனுடைய சுயபுத்தியை இழந்து போய்விட்டான்" என்று சபை கூறுகின்றது. 73. ஆனால் தேவன் "இவன் என்னுடைய குமாரன்", என்று கூறுகிறார். மனிதனுடைய எல்லா புகழ்ச்சியையும் விட நான் இதையே கொண்டிருப்பேன். மனிதன் என் பின்தோளில் தட்ட வேண்டும் என்று நான் விரும்ப வில்லை. கிறிஸ்து என்னை தம்முடைய கரத்தினால் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆமென். உங்களுடைய சாட்சியும் அதுவா? 74. சிறிய தாவீதைக் குறித்து எனக்கு நினைவு வருகிறது, ஒரு சமயம், பெலிஸ்தர் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்து கொண்டு போய்விட்டபோது, இஸ்ரவேலில் எழுப்புதல் நீங்கிப் போனது. மேலும் ஒரு நாள் தாவீது மலைக்கு அப்பால் பார்த்துக் கொண்டிருந்த போது பெட்டி வருவதைப் பார்த்தான். அவன் பரிசுத்த உருளையாக இருந்தான். அவனால் முடிந்த அளவு அங்குமிங்கும் ஓடி நடனம் ஆடினான். அவனுடைய மனைவி அவனைக் குறித்து கேலி பேசினாள். "ஏன்," "உனக்கு அது பிடிக்கவில்லையா? இதை கவனி!" என்றான். அவன் அங்கு சென்று பெட்டியை சுற்றிச் சுற்றிச் சென்று அவனால் முடிந்த அளவு நடனம் ஆடினான். 75. அவனுடைய மனைவி அவள் மீது சாபத்தை வருவித்துக் கொண்டாள். அவள் மலடியானாள். அவள் இருந்த நாள்மட்டும் அவளுக்கு பிள்ளைகள் இல்லாதிருந்தது. மேலும் இஸ்ரவேலில் அவளுடைய பெயர் மரித்துபோயிற்று. 76. ஆனால் இங்கு என்ன சம்பவித்தது. தேவன் பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப் பார்த்து, "தாவீது, என்னுடைய இருதயத்திற்கு ஏற்றவன்" என்று கூறினார். ஆம், ஐயா. 77. இந்த பூமியிலிருக்கும் புருஷனோ, ஸ்தீரியோ அல்லது வேறு யாராயிருந்தாலும் அவர்களிடையே பிரபலத்தைப் பெறுவதை விட நான் அதையேக் கொண் டிருப்பேன். "எனக்கு ஒரு ஊழியக்காரன் உண்டு, நான் என் விரலை நீட்டுவேன். அவன் என்னை விசுவாசிப் பான். அவன் என்னை நம்புவான்" என்று தேவன் சொல்லுவார். அது சரி. 78. நீங்கள் அதை அரைகுறை வேலையாகச் செய்யக் கூடாது. நீங்கள் அதை சிக்கலான சிந்தனையுடன் செய்யக் கூடாது. நீங்கள் அதை, தூய்மையான, கலப்படமற்ற விசுவாசத்தைக் கொண்டு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் செய்ய வேண்டும். நீங்கள் அங்கு பிரவேசித்து, கரங்களினால் தேவனை தொட்டு நீங்கள் அவருடைய ஊழியக்காரர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பின்பு யாதொன்றைக் குறித்தும் நீங்கள் பயப்படமாட்டீர்கள். "இரத்தத்தின் மூலம் அவருடைய மறைக்கப்பட்ட அந்த மறைவின் மூலம், நாம் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தில் வந்திருக்கிறோம்." இன்னும் சிறிதாக... தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், (இங்கு கவனியுங்கள்) துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்ளாயும், உண்மையுள்ள இருதயத்தோடும், விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். 79. இந்தக் காலை வேளையில் நாம் அதனூடாகக் கடந்து சென்றிருக்கிறோம் இப்பொழுது ஜலம்.... தெளிக்கப்படுதல் என்றால் "உதறிவிடுதல்" என்று அர்த்தம். அது நம்முடைய மனசாட்சியிலிருந்து, பாவப்பிரச்சனை, இருள் மற்றும் தீமையை உதறிவிடுகின்றது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீர் ஞானஸ்நானத்தின் மூலம், "சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும்" இருக்கிறோம். 80. "நான் ஒரு காலத்தில் நேசித்தத் தீமையான காரியங்கள் ஒழிந்து, நான் முன்பு வாழ்ந்த வாழ்க்கை இப்போது முடிவுபெற்றதை அறிந்தவர்களாய் தேவனிடம் விடுதலையோடும் தைரியத்தோடும் செல்லுவோம். நான் அதைச் செய்ததினால் அல்ல. எனக்குள் ஏதோவொன்று கடந்து வந்து அதுவே அதைச் செய்தது. கிருபையினால் அவர் என்னை இரட்சித்தார். நான் அவரை விசுவாசித்தேன். அவர் எனக்கு பரிசுத்த ஆவியைத் தருகிறார். நான் ஒரு காலத்தில் வெறுத்தக் காரியங்களை இப்பொழுது நேசிக்கிறேன். அந்தத் தியாகம், எனக்கு சபைக்கு போவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்; ஆனால் இப்பொழுது நான் சபைக்கு விரும்பிப் போகிறேன். ஜனங்கள் பாடுவது, சத்தமிடுவது மற்றும் சாட்சி சொல்லுவதைக் கேட்பது எனக்கு வெறுப்பாக இருக்கும்; இப்பொழுது அதை நான் நேசிக்கிறேன். ஏதோவொன்று என்னை மாற்றியது. பின்பு, "நான் புதிதும் ஜீவனுமான வழியில்" இருக்கிறேன் ஏதோவொன்று இங்கு நங்கூரமிட்டது. எனக்குத் தெரியும், நான் தண்ணீருக்குள் சென்றபோது, அவர்கள் எனக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தார்கள்." 81. "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்" என்று அவர் கூறிள்ளார். 82. நான் விவாதிக்கப்பட்டேன், குறைக் கூறப்பட்டேன், தாழ்த்தி கேலி செய்யப்பட்டேன். ஆனால் இவை எதுவுமே சிறிதளவு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. "தேவன் அப்படியாக சொன்னார், மேலும் நான் அதை விசுவாசித்தேன்! அது சரியாக அவ்விதமாக உள்ளது." அவர்கள் கூறினர்; "நீர் இயேசு நாமக்காரன். நீர் ஒருத்துவக்காரன். நீர் இது என்று. நீர் இப்படி" என்கின்றனர். 83. அவர்கள் என்ன கூறினாலும், எனக்கு அக்கறை இல்லை. நான் தேவனுடைய வார்த்தையே சத்தியம் என்று விசுவாசிக்கிறேன். அது எவ்வளவு பிரபலமாக இருக்கிறது என்று எனக்குத் தெரியாது, நீங்கள் இங்கே எவ்வளவு பிரபலமாக மாறப்போகிறீர்கள் என்பது எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணாது. மேலே அந்த இடத்தில் நீங்கள் எவ்வளவு பிரபலமாக இருக்கிறீர்கள் என்பதே காரியம். 84. மகத்தான மனிதர்களில் ஒருவர் சமீபத்தில் என்னிடம் அதைக் குறித்து பிரசங்கிக்கும்படி கேட்டுக் கொண்டார். அவர் கூறினார், "அது சத்தியம் தான், ஆனால் நான் அதைக் கூறுவேனானால், என்னுடைய சபையார் வெளியேறிவிடுவார்கள்." 85. நான் கூறினேன், தேவன் ஆபிரகாமுக்கு இந்தக் கல்லுகளிலிருந்து பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார். நான் சுவிசேஷத்தோடு சமரசம் செய்து கொள்வதை விட "சத்தியத்தை இந்த நான்கு சுவர்களுக்கு பிரசங்கிப்பேன்" என்றேன். ஆம், ஐயா. 86. ஏனெனில் ஒரு நாள் இந்த புத்தகம் என்னை நியாயந்தீர்க்கும். அது சரி. நியாயத்தீர்ப்பு நாளில் அங்கு தேவனுடைய வார்த்தை என்னுடைய நீதிபதியாக இருக்கும். தேவனுடைய வார்த்தை எந்தவிதத்தில் காயப் படுத்தினாலும் அல்லது எதை அது காயப்படுத்தினாலும் பொருட் படுத்தாமல் நான் சத்தியத்தைப் பிரசங்கிக்க வேண்டும். 87. இப்பொழுது இங்கு கவனியுங்கள். இப்போது நாம் செல்லுவோம். அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து: 88. ஏவப்படுதல் என்றால் "ஊக்குவித்தல்" என்று அர்த்தம். அன்பிலும் நற்கிரியைகளிலும் நாம் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்த வேண்டும். சபையில் உள்ள ஒரு சகோதரன் மற்ற சகோதரனுக்கு எதிராக ஏதோ வொன்றைக் கொண்டிருப்பதை நீங்கள் கண்டால், அந்தக் காரியத்தை கிளறிவிடும்படியாக எதுவும் பேசாதீர்கள். அதற்கு மாறாக, அவர்களை மீண்டும் ஒன்று சேர்க்கும் விதமாக எதையாவது சொல்லுங்கள். "அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி," இதுதான் நாம் செய்ய வேண்டும். அது என்ன? அது தான் ஒரு மனிதனுடைய மறுபடிப் பிறத்தலாக உள்ளது. 89. என் சகோதரனே, இன்றிரவு, உங்களுடைய சகோதர்கள் ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளைப் பேசி விலகிப் போவதை நீங்கள் காணும் போது, அவர்களை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டிய உணர்வு உங்களுக்கு இல்லையென்றால், நீங்கள் பலிபீடத்தை நோக்கிச் செல்ல வேண்டிய நேரமாக உள்ளது. அது சரி. உங்களுடைய ஜீவியத்தில் ஏதோவொன்று சம்பவித்துள்ளது. நீங்கள் ஏதோ வொன்றினால் வஞ்சிக்கப்பட்டுள்ளீர்கள். தேவன் உங்களிடம் இருக்க வேண்டும் என்று விரும்புகிற அந்த அனுபவத்தை நீங்கள் இன்னும் பெறவில்லை. 90. ஏனெனில், இயேசு நிந்திக்கப்பட்ட போதும், அவர் திரும்பி நிந்திக்கவில்லை. தீமையாகப் பேசப்பட்ட போதும், அவர் திரும்பித் தீமையாய்ப் பேசவில்லை. மேலும்...அவர்கள் அவருக்குத் தீங்கு செய்த போதும், அவர் அவர்களுக்கு திருப்பி நன்மையே செய்தார். அவர்கள் அவரை துன்புறுத்தி, சிலுவையில் ஆணிகளைக் கொண்டு அறைந்தபோதும், அவர் அவர்களைப் பார்த்து, "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்." 91. அந்த விதமான ஆவி உங்களுக்குள் இல்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் இன்னும் உங்களுக்குள் பிரவேசிக்கவில்லை. ஏனெனில் அதே ஆவி கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தது. 'அது உங்களுக்குள்ளும் இருக்கும்" என்று வேதாகமம் கூறுகிறது. கிறிஸ்து அவருடைய சபைக்குள் இருக்கிறார். 92. இப்பொழுது, இங்கு இருக்கும் பிரன்ஹாம் கூடாரத்தைச் சேர்ந்த கூட்டமே, நமக்கு எந்தவொரு அமைப்போ, எந்தவொரு அடையாள அட்டைகளோ அல்லது அது போன்ற எதுவுமே நம்மிடம் இல்லை. இங்கு நமக்கு இருக்கும் ஒரே ஒரு காரியம் ஐக்கியம் மட்டுமே. இன்றிரவு எங்களோடு இயேசு கிறிஸ்துவில் ஐக்கியம் கொண்டிருக்கிறவர்கள், எல்லா இரவுகளிலும், எல்லா சமயங்களிலும் எங்களுடன் ஐக்கியம் கொள்ளும் உங்களை எங்களுடன் கொண்டிருப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. நீங்கள் இங்கிருக்கும்படி நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் எங்களோடு சேர்ந்து கொள்ள வேண்டாம். நாம்... நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் நீங்கள் எங்களோடு ஆராதிக்கக் கடந்து வந்தால் போதும். உங்களில் ஒவ்வொருவரும் உங்களுடைய இருதயத்தில், அசைவில்லாமல் தேவனுடைய உண்மையான இரகசியத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டுமென்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆராதனைக்குக் கடந்து வாருங்கள், பலிபீடத்தண்டை வாருங்கள், மற்றும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள், ஒருவரோடொருவர் இசைந்து ஒற்றுமையாய் இருங்கள். 93. ஒரு சகோதரன் வழித் தவறிச் செல்லுவதை நீங்கள் கண்டால், அவரிடம் சென்று, உங்களால் முடிந்தால் அவருடன் சமாதானம் செய்து கொள்ளுங்கள். அது சரி. அதைத் தான் நாம் செய்ய வேண்டும். மேலும், நண்பர்களே, நீங்கள் எப்பொழுதாவது.... நீங்கள் அதைச் செய்யவில்லை என்றால், என்ன செய்கின்றீர்கள்? உங்களை ஒரு பரிதாபமான சிருஷ்டியாக்குகின்றீர்கள், மேலும் நீங்கள் ஒரு கிறிஸ்தவன் அல்ல, அது சரி, நீங்கள் செய்யும் மற்ற அனைத்துமே விநோதமாக உள்ளது 94. "மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்" என்று இயேசு கூறவில்லையா? 95. "நல்லது, நான் சபையில் சேர்ந்து கொண்டேன். நான் என்னுடைய பெயரைப் புத்தகத்தில் சேர்த்து கொண்டேன். நான் இன்னின்னக் காரியங்களை எல்லாம் செய்துள்ளேன்" என்று கூறுவார்கள். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 96. "ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்." 97. கவனியுங்கள், முடிப்பதற்கு சற்று முன், அல்லது எனது முக்கிய பொருளுக்குள் செல்வதற்கு முன்பு, இப்பொழுது நான் கடைசி வசனத்திற்கு வருகின்றேன். அதன்பின் நாம்... உங்களை அதிக நேரம் வைத்துக் கொள்ளமாட்டேன். சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம்; நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்தி சொல்லவேண்டும். 98. ஜனங்கள் சபைக்குச் செல்வதை விட்டுவிடுகின்றார்கள். இப்பொழுது சபைகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. யுத்தம் முடிந்தது. எல்லாருக்கும் நன்றாக உணவளிக்கப்பட்டு, மாற்றிக் கொள்வதற்கு உடைகளும், நல்ல வேலைகளையும் பெற்று வாழ்கின்றனர். 99. நீங்கள் பண்டகசாலைக்கு செல்லும்போது உங்களுக்காக காத்திருக்க கூட அவர்களுக்கு நேரம் கிடையாது அன்றொருநாள் என்னுடைய அடுப்பை பொருத்த வேண்டிய வேலை இருந்தது. "நாம் அதை பொறுத்தி விட்டோமா?" என்றேன்."இல்லை, வேறு யாராவது தான் பொறுத்த முடியும். ஆனால் அவர்கள் இப்பொழுது அந்த தொழிலை செய்வதில்லை" என்றார். 100. "அப்படியானால், தங்கள் தொழிலை விட்டு வெளியே சென்ற ஜனங்களை சற்று கவனியுங்கள்" என்று கூறப்பட்டது. அவர்கள் அதைக் குறித்து அக்கறையற்றவர்களாயிருக்கின்றனர். சமீபத்தில், கடந்த சில வருடங்களாக, அவர்கள் தங்களால் முடிந்த ஒவ்வொரு தொழில் நுணுக்கங்களையும் செய்திருக்க முடியும். ஆனால் அவர்களுக்கோ போதுமான அளவு பணம் உள்ளது. எதைக் குறித்தும் கவலை இல்லை. அதை அப்படியே விட்டுவிடுகின்றனர். 101. ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அந்தப் பொருள் உங்களில் உள்ள (cankered) புற்றுத் துளைகளைத் தின்று விடும். ஆனால் அவர் சொல்கிறார்: இவ்வுலகின் வீணான செல்வத்திற்கு ஆசைப்படாதீர்கள், அது மிக விரைவாக அழிந்து விடும், பரலோகப் பொக்கிஷங்களைப் பெற தேடுங்கள், அவைகள் ஒருபோதும் அழியாது! 102. நான் தாழ்வில் இருந்திருக்கிறேன். நான் செழிப்பில் இருந்திருக்கிறேன். நான் அவை அனைத்தையுமே மொத்தமாகப் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த பூமியில் நீங்கள் குவிக்கக்கூடிய அனைத்து பணத்திற்காகவும் செல்வத்திற்காகவும் மற்றும் பிற எல்லாவற்றிற்காகவும் நான் இயேசு கிறிஸ்துவின் கரங்களை விட்டு விடமாட்டேன். நான் உடைக்கப்பட்டப் போது அவர் என்னுடைய நண்பராக இருந்தார். நான் அநேகத்தைக் கொண்டிருந்த போது அவர் என்னுடைய நண்பராக இருந்தார். நான் பசியாக இருந்தபோது அவரை நேசித்தேன். நான் நிரப்பப்பட்டபோது அவரை நேசித்தேன். நான் துக்கத்தில் இருந்தபோது அவரை நேசித்தேன். நான் சந்தோஷமாக இருந்தபோது அவரை நேசித்தேன். நான் அவரை நேசித்தேன், ஏனெனில் நான் அவரை நேசித்தேன், ஏனென்றால் அவர் தான் என்னை முந்தி நேசித்தார். ஆமென். அல்லேலூயா! 103. நான் வியாதிப்பட்டு, படுக்கையில் மரித்துக் கொண்டிருந்தபோது, அவர் என்னுடைய நண்பராக இருந்தார். இன்றிரவு நான் சந்தோஷமாக மகிழ்ச்சியாக உணரும் போது, அவர் இன்னும் என்னுடைய நண்பராகத் தான் இருக்கிறார். நான் அங்கே படுக்கையில் மரித்துக் கொண்டிருக்கையில் அந்த விரைத்த நரம்புகள் என்னுடைய கரத்தின் மேல் வந்தாலும், அப்போதும் அவர் என்னுடைய நண்பராக இருப்பார். நான் நடக்கும் - நடந்துக் கொண்டிருக்கும் இந்த எளிதில் முறியக் கூடிய கயிறு அறுந்து நான் நித்தியத்தில் மூழ்கும்போதும், அவர் என்னுடைய நண்பராக இருப்பார். காலங்கள் சுழன்று, பத்தாயிரம் வருடங்களுக்குப் பிறகு. உங்களுடைய யூபிலிப் பாடல்களை நீங்கள் பாடும்போதும், அப்போதும் அவர் என்னுடைய நண்பராக இருப்பார். ஆம், ஐயா. காலங்கள் சுழன்று, சந்திரன், சூரியன், பூமி போன்றவை இனி இல்லாமல் போகும் போதும், அப்போதும் அவர் என்னுடைய நண்பராக இருப்பார். 104. உங்களுடைய வேலை என்ன? உங்களிடம் என்ன இருக்கிறது? உங்களுடைய புகழ் என்ன? எப்படி இருந்தாலும் சரி, நீங்கள் யார்? அது சரி, தேவனைப் புறக்கணிக்க நீங்கள் யார்? அவர் சொல்லும் ஒரு வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் இருக்க நீங்கள் யார்? சில போதகர் அல்லது வேறு சிலர் உங்களிடம் இது வேறு ஏதோ ஒரு நாளுக்கான வார்த்தை என்று கூறியதினால், தேவனுடைய வார்த்தைக்கு உங்கள் தலையைத் திருப்பிக் கொள்ள நீங்கள் யார்? தேவனை விசுவாசிப் பதற்குப் பதிலாக மனிதனை விசுவாசிக்க நீங்கள் யார்? நீங்கள் மனிதனுக்குப் பதிலாக தேவனை விசுவாசியுங்கள். அவ்விதம் தான் தேவனோடு நட்பு கொள்ள முடியும். 105. இப்பொழுது கவனியுங்கள். இவை எல்லாவற்றையும் பார்த்த பிறகு, பவுல் இந்த மகத்தான முடிவாகிய, இந்த மகத்தான பதிலைக் கொடுக்கின்றார். அவை வருகிறது. கவனியுங்கள். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், 106. இப்பொழுது கொஞ்ச நேரத்தில் அதை நிறைவுடன் அதிகப்படுத்துவோம். நான் அதை உங்களிடம் விட்டுவிடப் போகிறேன். மேலும், சரியாக இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு நான் இங்கே கொண்டு வருகிறேன். (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை பத்து முறைகள் தட்டுகிறார்) சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால் பாவங் களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், (பாருங்கள்) நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். மோசேயினுடைய பிரமாணத்தைத் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தள்ளுகிறவன் தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென் றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப் பாருங்கள். 107. எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான்! மரிக்கும் ஆட்டுக்குட்டியின் கீழிருக்கும் ஒரு மனிதன் மோசேயின் நியாயப் பிரமாணத்தை நிந்திக்கும் போது அல்லது நிராகரிக்கும் போது, அவன் இரக்கமின்றி மரிக்க வேண்டும், ஏனென்றால் அவனுக்குப் பதிலாக அங்கே அந்த ஆட்டுக்குட்டி மரித்ததே. இயேசு... இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை வெறுத்து, நிராகரிக்கிற ஒரு மனிதனுக்கு எவ்வளவு அதிகம் செய்யப்படும் 108. இப்போது, முதலாவது நாம் அறிய வேண்டியது என்னவென்றால் "மன்னிக்க முடியாத பாவம்" என்பது என்ன? சிலர் "அது தற்கொலை" என்று கூறுகின்றனர். வேறு சிலர், அது-அது ஒரு தாய் தன்னுடைய குழந்தையை அழிப்பது கருக்கலைப்புக் காரியம்" என்று கூறுகின்றனர். மற்றவர்கள் இப்படிச் சொல்லுகின்றனர். மற்றவர்கள், "அதாவது ஒருமுறைப் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தும், பின்னர் அந்தப் பரிசுத்த ஆவியை விட்டு பின்வாங்கிப் போவது தான் மன்னிக்க முடியாத பாவம்" என்று கூறுகின்றனர். அது இல்லை. இல்லை, ஐயா 109. கூர்மையாக, அதைக் குறித்து நாம் பார்ப்போம். தேவனுடைய வார்த்தையைப் பார்ப்போம். இப்பொழுது மத்தேயு 12-ம் அதிகாரத்தில், இயேசு ஊமையும் குருடுமான ஆவியை அல்லது செவிடும் ஊமையுமான ஆவியைத் துரத்தினார். அது மனிதனிலிருந்து விரட்ட பட்டது என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் அதைத் துரத்தின போது, செவிடும் ஊமையுமானவன் பேசினான். சுற்றிலும் இருந்த ஜனங்கள் அவரைப் பார்த்து, "ஏன், இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானே" என்றார்கள். இயேசு சுற்றிப் பார்த்து அவர்களிடம் கேட்டார்.... 110. அவர்கள் இருந்த வழி மற்றும் அவர்களுடைய அக்கிரம நிறைவினாலும் அவர்களால் எப்படி விசுவாசிக்க முடியும்? ஏன், ஏன் அவர் அவர்களை கண்டித்தார்? ஏன்? ஏனென்றால், இது தேவனுடைய வார்த்தை தாமே அவர்களை கண்டித்தது. இயேசுவுக்காக... 111. பெந்தெகொஸ்தே நாளில், அப்போஸ்தலர் 2 ஏறக்குறைய 23-24-ம் வசனத்தில் பேதுரு கூறவில்லையா? "இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக் கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்" என்று கூறியுள்ளான். 112. இப்பொழுது, இங்கு நாம் சிந்திக்க வேண்டிய முதலாவது காரியம் இப்போது நாம் இங்கு 12-ம் அதிகாரத்தில் இயேசு பரிசேயருக்குக் கூறுகின்றார்: எவனாகிலும் மனுஷகுமரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. 113. "விரோதமாகப் பேசுவது"பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசுவது" "விரோதமாகப் பேசுவது" என்றால் என்ன? 114. இப்பொழுது, "பரிசுத்த ஆவியின் செயல்பாடு....யாரோ ஒருவர் கூச்சலிடுவது, பரிசுத்த ஆவியாக இருக்கலாம்" என்று நீங்கள் தவறாகக் கூறலாம். அது அதுவாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அவன் அந்நியபாஷை பேசுகிறான் என்று நீங்கள் கூறலாம், அதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் பேசுகிறாரா? அப்படி இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அது முற்றிலும் சரி. காரணம், அந்நியபாஷைகளைப் பேசுகிறவர்களான அவர்களுடைய அனைத்திலும், அவர்கள் தங்கள் மேல் பரிசுத்த ஆவியைப் பெறவில்லை என்பதை அறிய வேண்டிய, காலத்தைப் பார்க்கும் படியாக நான் ஜீவித்துக் கொண்டிருக்கிறேன். 115. சாத்தான் அந்நியபாஷைப் பேசுவதை நான் பார்த்துள்ளேன். மந்திரவாதிகள் அந்நியபாஷைப் பேசுவதை நான் பார்த்துள்ளேன். அவர்கள் மனித மண்டையோடுகளிருந்து இரத்தத்தைக் குடித்து அந்நியபாஷைப் பேசுவதை நான் பார்த்துள்ளேன். மேஜையில் இருக்கும் எழுதுகோல், அறியாத பாஷையில் எழுதுவதையும், அதை அந்த மந்திரவாதிகள் வாசிப்பதையும் நான் பார்த்துள்ளேன். அதினால் அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று பொருள் கொள்ள முடியாது. 116.அவர்கள் சத்தமிட்டு மேலும் கீழும் குதித்து கர்த்தரை ஸ்தோத்தரித்து; பின்பு வெளியே சென்று திருடி, பொய் பேசி, மோசடி செய்து மற்ற எல்லாவற்றையும் செய்வதை நான் பார்த்துள்ளேன். அது தேவனிடமிருந்து வரவில்லை என்று எனக்குத் தெரியும். 117. ஆனால் சகோதரனே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், தேவனுடைய தெய்வீக, பரிபூரண அன்பு இருதயத்தில் தங்கி, முத்திரையிடப்பட்டு, நேற்றைக்கும் இன்றைக்கும் நகரக்கூடியதான இடத்தில், அதைக் குறித்து நீங்கள் சிந்திக்க தொடங்கலாம். "நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்" என்று இயேசு கூறியுள்ளார். 118. "அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஓழிந்துபோம், விசுவாசமானாலும் தோற்றுப்போகும். மற்றும் இந்தக் காரியங்கள் அனைத்தும் இங்கு அப்படியே ஆகும். ஆனால் அந்த நிறைவான அன்பு வரும்போது, அது ஒருக்காலும் ஒழியாது.....அது சரி, அது கிறிஸ்துவின் அன்பு. 119. நீங்கள் செய்கிற எதுவொன்றை வைத்தும் என்னால் நியாயந்தீர்க்கமுடியாது. நியாயத்தீர்ப்பு செய்பவர் சர்வவல்லமையுள்ள தேவன் ஒருவர் மட்டுமே. ஆனால் "அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிவீர்கள்" என்று இயேசு கூறியுள்ளார். 120. இப்பொழுது, நாம் ஒரு காரியத்தை அறிந்து இருக்கிறோம். இப்போது இங்கு பாருங்கள். வேதாகமத்தில் உள்ள அனைத்து வசனங்களையும் முழுமையாக முடிவுறச் செய்யும் காரியமானது இங்கு உள்ளது. மன்னிக்க முடியாத பாவம், மன்னிக்க முடியாததைக் குறித்து வேதத்தில் ஒவ்வொரு இடத்திலும் பேசப் பட்டுள்ளது, சில நிமிடங்களுக்குள் அதை எடுத்து, உங்களுக்கு அதைக் காண்பிக்கப்போகிறேன். பவுல் இங்கு வந்து அதற்கு முடிவு கொடுக்கும் வகையில் கூறுவது, "சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவம் செய்கிறவர் களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்ததக்க வேறொரு பலி இனியிராமல்." அது தான் மன்னிக்கமுடியாத பாவமாக உள்ளது, "மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால்." அது சரியா? "அவன் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால்." 121. இப்பொழுது, பாவம் என்பது என்ன? நீங்கள் கண்டுகொள்ளவேண்டிய அடுத்த காரியம், பாவம் என்பது என்ன? பாவம் என்பது "கீழ்ப்படியாமை" பாவம் என்பது "புறக்கணித்தல்"இப்போது இங்கு பாருங்கள். முதலாவது பாவம்... 122. நான் உங்களுக்குக் காண்பிக்க விரும்பும் ஒரு பகுதி இங்குள்ளது, வேதாகமத்தின் முதல் பகுதி இங்கு உள்ளது இங்குள்ள அடிக்குறிப்பில் அவர் என்ன எழுதியுள்ளார். அது ரோமர் 3-ம் அதிகாரம் என்று நம்புகிறேன். சரியாக அடிக்குறிப்பில் வெப்ஸ்டர் அகராதி மூலமாக அவர் அதற்கு விளக்கம் கொடுத் திருக்கிறதை இங்கு சொல்லியிருக்கிறார். பாவம் என்பது தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தை புறக் கணிப்பதாகும் என்று அவர் சொல்லியிருக்கிறார். 123. பாவம், அதன் தொடக்கக் காலத்தில் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை, தேவனை... அல்லது தேவனுடைய சித்தத்தைப் புறக்கணிப்பதாக இருந்தது. தேவன் ஒன்றை அவருடைய சித்தத்தின்படி வெளிப்படுத்தும்போது; அதைப் புறக்கணிப்பது என்பது தூஷிப்பதாகவும், அல்லது, தேவனை புறக்கணிப்பதாகவும் உள்ளது. 124. முதலாவது பாவம் என்னவாக இருந்தது? அதைப் பார்ப்போம். நீங்கள் ஆதியாகமம் 3-ம் அதிகாரத்திற்கு திருப்புங்கள். உங்களுக்கு வேண்டு மானால், நீங்கள் வீட்டிற்குச் சென்று அதைப் படித்துக்கொள்ளுங்கள். ஆதியாகமம் 3. தேவன் ஏதேன் தோட்டத்தில், ஆதாம் மற்றும் ஏவாளை வைத்தபோது, அவர்களுக்கு அவர் காரியங்களைக் கூறினார்.... அது அவருடைய வார்த்தையாக இருந்தது; அவர்கள் எதைச் செய்யவேண்டும் மற்றும் எதைச் செய்யக்கூடாது என்பதைக் கூறினார். இப்பொழுது கவனியுங்கள், சாத்தான் ஏவாளிடம் வந்தபோது, அவன் கேட்டான், "நீங்கள் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ, ஆனால் நீங்கள் சாகவே சாவதில்லை" என்றான். அதைப் பார்த்தீர்களா? அப்பொழுது ஏவாள் மனப்பூர்வமாக.... புரிகின்றதா உங்களுக்கு? தேவன் செய்யவேண்டாம் என்று சொன்னதை அறிந்திருந்தும் ஏவாள் மனப்பூர்வமாக அதைச் செய்தாள். அது சரியா? இப்போது இதைப் பாருங்கள். ஏவாள் மனப்பூர்வமாகச் செய்தபோது... பாவங்களில் முதலாவதாக பாவம் செய்யப்பட்டது. அது சரியா? ஏவாள், தேவனுடைய சித்தத்தை அறிந்து, அதை மனப்பூர்வமாகச் செய்ய மறுத்தாள். அது சரியா? அது தான் முதல் பாவம். 125. மேலும், பாவம் என்பது என்ன? பரிசுத்த யோவான் 3-ம் அதிகாரத்தில் 18-ம் வசனத்தில், இயேசு கிறிஸ்து தாமே தாமே சொல்லுகிறார், அதாவது "அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்." அது சரியா? அப்படியானால் பாவம் என்பது அவிசுவாசமாக உள்ளது 126. சாத்தான் அவனுடைய வஞ்சனையினால் ஏவாளிடம் கூறினான், "தேவன் அதைக் கூறினார், ஆனால் அவர் அதை அந்த அர்த்தத்தில் கூறவில்லை." அவன் எவ்வாறு வார்த்தையை பூசி மழுப்புகிறான் என்று பார்த்தீர்களா? நல்லது, இப்பொழுது அவன் கூறுகிறான், "இப்பொழுது தேவன் அதைக் கூறினார், ஆனால் அவர் அதை அந்த அர்த்தத்தில் கூறவில்லை." வேறு வார்த்தையில் கூறுவோமானால், "நம்முடைய கண்கள் திறக்கப்படும். நீங்கள் நன்மை தீமையை அறிவீர்கள்." இப்பொழுது அதே அழுகியப் பொய்யை சாத்தான் இன்று பிரசங்கிகள் மற்றும் சபை அங்கத்தினர்களிடம் கூறகிறான். "தேவனுடைய வார்த்தை அவ்வாறு - இவ்வாறு கூறியுள்ளது, ஆனால் அதற்கு அந்த அர்த்தமில்லை." தேவனுடைய வார்த்தை என்பது அந்த வார்த்தை சொல்லுவதை அப்படியே சொல்லுவது ஆகும். 128. சில நாட்களுக்கு முன்பு நான் என்னுடைய சொந்த சபைக்கு என்னுடைய சொந்த ஜனங்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். இந்த நகரத்திற்கு வெளியே இருந்து வந்த யாரோ ஒருவர் அதை வைத்தார்... சுகமளித்தல் ஆராதனையில், நான் எந்தவிதமான உபதேசத்தையும் கொடுக்கமாட்டேன், காரணம் அது கலவையான கூட்டமாக உள்ளது. ஆனால் என்னுடைய சபையில் நான் சத்தியம் என்று விசுவாசிப்பதை நான் பிரசங்கிப்பேன். நான் பிரசங்கிப்பது அனைத்தும் சத்தியம், ஆனால் நான் அந்த விவரங்களுக்குள் செல்லவில்லை. நான் இங்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பதைப் பார்த்த யாரோ ஒருவர் "சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் ஒரு திரித்துவக்காரர் என்று இந்நாள் வரைக்கும் நினைத்திருந்தேன்" என்றார். 129. நான் சொன்னேன், "உங்களுக்கு அநேக யோசனைகள் வரலாம்." "வேதம் சொல்லுகிறது... இயேசு கிறிஸ்துவின் நாமத்தை அல்லாமல் வேறு எவ்விதத்திலும் யார் ஒருவரும் எந்தவொரு இடத்திலும் ஞானஸ்நானம் பெற்றதில்லை." நான் கூறினேன், "நல்லது," "ஆனால் உங்களுக்குத் தெரியும்." நான் கூறினேன், "அந்தக் காரியம் சரியாக உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது. " 130. ஏழாம் நாள் ஆசரிப்புக் கூடாரத்தைச் சேர்ந்த (Seventh-Day Adventist) சகோதரன் ஒருவர் ஒருமுறை என்னுடைய வீட்டிற்கு இதே காரியத்தின் மீது சவாலிட வந்திருந்தார் அவருடைய சகோதரன் இப்பொழுது இங்கே அமர்த்திருக்கிறார். என்னுடைய சகோதரன் அவரிடம் கூறினார், "இப்பொழுது, பாருங்கள் சகோதரனே, சரியில்லாத ஒரு காரியத்திற்கு நீர் செவிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்." அவர், "என்னிடம் சொல்வதற்கு அந்த பில் பிரன்ஹாம் யார்?" என்று சொன்னார்."நல்லது" வந்து தேவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுங்கள், என்றேன் 131. ஆகவே வாலிபன் வந்தான், நாங்கள் வேதாகமத்தை வெளியே வைத்தோம். நான் "இப்பொழுது பாருங்கள், சகோதரனே, நீங்கள் உங்களுடைய பாடநூலை கீழே வைத்து விட போகிறீர்களா? நாம் வேதத்தை எடுக்கலாமா" என்றேன். "ஆம், வேதம்.' 132. நான் மேலும் "நீங்கள் தவறு என்று தேவனுடைய வார்த்தை உங்களைக் குறித்துச் சொல்லு மானால், நான் உங்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்க என்னை அனுமதிப் பீர்களா? மேலும் நீங்கள் "பிதா, குமாரன், பரிசுத்த ஆவி" தான் ஞானஸ்நானம் பெற வழியாக உள்ளது என்பதை வேதத்திலிருந்து நிரூபித்தால், நீங்கள் எனக்கு ஞானஸ்நானம் கொடுக்க நான் அனுமதிப்பேன்" என்றேன். அவர் அதற்கு ஒத்துக் கொண்டார். 133. அவர் எடுத்த அவருடைய முதல் வேதப் பகுதி அவருக்குக் கிடைத்த அந்த ஒரே ஆதாரமே அவரை அங்கு சரியாகக் கண்டித்தது, பின்பு நான் அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கவும் மறுத்துவிட்டார். இப்பொழுது அதற்கு என்ன அர்த்தம்? அவ... "சத்தியத்தை அறியும் அறிவை அடைத்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்தால் அல்லது அவிசுவாசித்தால், பாவங்களின் நிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்." அது தான் உங்களுக்கு மன்னிக்க முடியாத பாவமாக உள்ளது. 134. சத்தியமான சுவிசேஷத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருந்து, அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டு தேவன் அதை உங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தால், அது சத்தியம் என்று உங்களுக்குத் தெரியும்; ஆனால் ஒரு சபையை அல்லது ஒரு போதகரைத் திருப்திசெய்ய, அல்லது பிரபலமாக இருக்க, தேவனுடைய வார்த்தையை எடுப்பதற்குப் பதிலாக நீங்கள் பிடித்துக்கொள்ள விரும்பும் காரியங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்; பவுல் சொல்லுகிறார், "சத்தியத்தை அறியும் அறிவை அடைத்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்தால் அல்லது அவிசுவாசித்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்." சத்தியத்தை அறிந்திருந்தும் அதில் நடக்க மறுத்தால், அது தான் உங்களுக்கு மன்னிக்க முடியாத பாவமாக உள்ளது. ஆமென். இப்பொழுது நீங்கள் அதை சரி என்று விசுவாசிக்கின்றீர்களா? அதைத் தான் வேதம் சொல்கின்றது. "பாவஞ்செய்கிற எவனும்!" பாவம் என்பது "அவிசுவாசம்". 135. நல்லது, "புகைப்பிடிப்பது பாவமா, குடிப்பது ஒரு பாவமா?" என்று நீங்கள் கேட்கலாம். இல்லை, இல்லை. அது எல்லாம் அவிசுவாசத்தின் தன்மைகளாக உள்ளது. நீங்கள் விசுவாசிக்காததினால் தான் அதைச் செய் கின்றீர்கள். 136. ஒரு மனிதன் தான் விசுவாசிக்கிறதாகக் கூறினால், அவன் கூறுகிற விதமாக நடந்து அவன் நிச்சயமாகவே ஒரு கிறிஸ்தவனாக இருக்கவேண்டும். பாருங்கள், தன்மை! ஆப்பிள் என்பது மரமல்ல; அது அந்த மரத்தின் தன்மையாக உள்ளது. ஏனெனில் நீங்கள் மறுபடியும் பிறக்காததால், உங்களை கிறிஸ்தவன் என்று அழைத்துக்கொண்டு, நீங்கள் பொய்ப் பேசி, திருடி, ஏமாற்றி, புகைத்து மற்றும் எல்லாவற்றையும் செய் கின்றீர்கள். அது சரி. நீங்கள் எந்த விதமான ஜீவியத்தைப் பெற்றிருக்கிறீர்கள் என்பதை அது காண்பிக்கின்றது. "அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிவீர்கள்" என்று இயேசு கூறியுள்ளார். பார்த்தீர்களா? 137. நீங்கள் இவைகளைச் செய்வீர்களானால், வேதம் சொல்கின்றது, "நீங்கள் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூர்ந்தால், பிதாவின் அன்பு உங்களிடத்தில் இல்லை," நீங்கள் மார்க்கத்தோடு மட்டும் தான் இருக்கிறீர்கள், எந்த இரட்சிப்புமில்லை. மார்க்கம் என்பது வெறும் மூடிக்கொள்ளுதல் தான், ஆனால் இரட்சிப்பு என்பது சுதந்தரம். அல்லேலூயா! இரட்சிப்பு மூடுதலை எடுக்கின்றது, அது சரி, நீங்கள் யார் என்பதைக் காண்பிக்கிறது. அது உண்மை. இப்பொழுது, நாம் விசுவாசிக்காததினால் நாம் தவறானக் காரியங்களைச் செய்கின்றோம். 138. ஆனால் நீங்கள் உங்களுடைய முழு இருதயத் தோடு இயேசு கிறிஸ்து தான் தேவனுடைய குமாரன் என்பதை விசுவாசித்தால், உங்களுடைய சாட்சி உண்மையாக இருக்கும் என்றால், தேவன் உங்களுக்குப் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் கொடுத்து, உங்களுடைய மீட்கப்படும் நாள் வரைக்கும் உங்களை தேவனுடைய ராஜ்யத்திற்குள் முத்திரையிட தேவன் கடமைபட்டவராய் இருக்கிறார். 139. "நல்லது, நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளேன்! தேவனுக்கு மகிமை! நான் அதைப் பெற்றுள்ளேன் என்பதை அறிந்துள்ளேன்; நான் ஆவியின் கீழாக உள்ளேன்" என்று நீங்கள் கூறலாம். ஓ, கொஞ்சம் கூட நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளீர்கள் என்பதற்கு அது அடையாளமில்லை. நண்பர்களே, ஆவிகளின் கீழ் விழக்கூடிய எல்லாவித மானக் காரியங்களையும் நான் கண்டிருக்கிறேன். அது சரி. அது உங்களை பரிசுத்த ஆவியைப் பெறச் செய்யாது. 140. ஆனால், உங்களுடைய இருதயத்தில் இயேசு கிறிஸ்துவின் அன்பைப் பெற்றிருக்கும்போது, தேவன் உங்களுக்குள்ளிருந்து ஒரு கிறிஸ்தவனை உருவாக்கும் போது, அவர் உங்களை அவருடைய ராஜ்யத்திற்குள்ளாக முத்திரைப் போடும்போது, நீங்கள் ஆவியின் கீழ் வர நேரிடும். நீங்கள் இதை, அதை, அல்லது வேறு எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் உங்களுடைய ஜீவியம் உங்களுடைய சாட்சியோடு ஒத்துப்போக வேண்டும். 141. நீங்கள் என்ன சொன்னாலும் அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் அதில் ஜீவிக்காத வரை ஜனங்கள் அதை விசுவாசிக்கமாட்டார்கள், உங்களுடைய ஜீவியமே மிகவும் சத்தமாக சாட்சிக் கொடுக்கிறதாக உள்ளது. அவர்கள் உங்களை நம்புவதில்லை. நீங்கள் அதை விசுவாசிக்கவில்லை, நீங்களும், ஜனங்களும் அதை விசுவாசிக்க வில்லை, ஆகவே நீங்கள் உங்களையே துக்ககரமாக செய்கின்றீர்கள். "தேவனே, நான் என்னுடைய தவறுகளை அறிக்கை செய்கிறேன். மேலும், நான் இயேசு கிறிஸ்துவை என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். இப்பொழுது, தேவனே, எனக்கு பரிசுத்த ஆவியைத் தாரும்" என்று கூறி ஏன், நீங்கள் ஒரு உண்மையான இருதயத்தோடு வரக் கூடாது. அவர் அதைச் செய்வார். அது சரி. அவர் அதைச் செய்வார். அப்பொழுது, அதனுடையக் கனியைப் பெறுவீர்கள். ஏனென்றால், நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். 142. "நல்லது, நான் புகைப்பதை விட்டுவிட்டேன். நான் குடிப்பதை விட்டுவிடுவேன். நான்-நான் இது, அது மற்றும் பிறவற்றைச் செய்வதை விட்டுவிட்டேன்" என்று நீங்கள் கூறலாம். சகோதரனே, எந்த ஒரு பாவியாலும் அதைச் செய்ய முடியும். நிச்சயமாகவே, அவனால் முடியும். அது ஒன்றும் செய்யாது... 143. யுத்த சமயத்தில், நீங்கள் காணக்கூடிய ஒரு மனிதன், அமெரிக்க சீருடையை அணிந்திருக்கிறான் என்று வைத்து கொள்வோம். இப்பொழுது, சகோ. ராபர்சன், சகோ. ஃபங்க் மற்றும் இங்குள்ள அநேகமான ராணுவ வீரர்களான நீங்கள் ஒருவன் அமெரிக்க சீருடை அணிந்திருப்பதினால் அவனை நம்பமுடியாது. ஒருவேளை அவன் ஒரு உளவாளியாக இருக்கலாம். அவன் ஒரு ஜெர்மானியனாக இருக்கலாம். அவன் ஒரு எதிரியாக இருக்கலாம். அவன் அமெரிக்க சீருடையை அணிந்திருப்பதினால் அது அவனை அமெரிக்கனாகச் செய்யாது. இல்லை, ஐயா. 144. அல்லேலூயா! நீங்கள் தேசத்திலுள்ள ஒவ் வொரு சபையையும் சார்ந்தவர்களாகவும், ஒவ்வொரு பக்கத்தையும் திருப்பி கொண்டு, ஒவ்வொரு புத்தாண்டாகக் கடக்கலாம். ஆனால் அது உங்களைக் கிறிஸ்த வனாகச் செய்யாது. சகோதரனே, நீங்கள் ஒரு கைரேகைச் சான்றிதழைக் கொண்டிருக்கும்போது தான், நீங்கள் ஒரு அமெரிக்கனாக கருதப் படுகிறீர்கள். நீங்கள் ஒரு அமெரிக்கன் என்று நிரூபிக்க ஒரு சான்றிதழை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். 145. உங்களுடைய ஜீவியத்தில் கிரியைச் செய்கிற தேவனுடைய வல்லமையோடுக் கூடியப் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை நீங்கள் பெறும்போது, அது இந்த தற்போதைய உலகத்தில் நாளுக்கு நாள், வாரத்திற்கு வாரம், வருடா வருடங்களாக உங்களைத் தாழ்மையாக, சமாதானமாக வாழச் செய்யும்போது, நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். அது சரி. தாவீது கூறுகிறான், "அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்." அவன் வறட்சியினால் வாடிப் போவதில்லை. ஏனெனில், அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டிருக்கிறான். ஆம், ஐயா. அவனுடைய கனிகள் உதிர்வதில்லை, அவனுடைய இலைகள் உதிர்ந்து போவதில்லை. தன் காலத்தில் தன் கனியைத் தருவான். "துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்." அது சரி, ஒரு எழுப்பு தலிருந்து அடுத்த எழுப்புதல் வரை, எழுப்புதல் மேல் எழுப்புதல் அடைய ஆனால், ஒருவிசை கிறிஸ்துவில் நங்கூரமிடப்பட்ட ஒரு மனிதனுக்கு அவன் எங்கிருக் கிறான் என்பது தெரியும். அது சரி. 146. "இப்பொழுது நாம் பாவம் செய்தால்", பா-வ-ம், பாவம்! இப்பொழுது பாவம் என்பது என்ன? பாவம் என்பது "அவிசுவாசமாக உள்ளது". எத்தனைப் பேருக்கு அது தெரியும்? உங்களுடைய வெப்ஸ்டர் அகராதியை எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் எங்கு சென்று ஆராய விரும்பினாலும் சரி, இங்கு வேதாகமத்தில், முதல் பாவம் என்பது அவிசுவாசமாக உள்ளது. அது சரியா? "அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்."வேதவாக்கியங்களினுடாக எல்லாவற்றிலும் அது "அவிசுவாசம், அவிசுவாசம்" ஆக உள்ளது. 147. ஒரு வேளை வெளிப்புறத்தில் இருளாக உள்ளது, அது இரவு என்று நான் கூறலாம்; எவ்வளவு இருளாக உள்ளது, அது இரவின் எந்தப் பாகமாக உள்ளது? அது முழுமையாக இரவு தான். அது சரியா? அது இருளாக இருப்பதினால் இரவாக உள்ளது. அது சரியா? 148. இந்த அறையில் எவ்வளவு வெளிச்சம் உள்ளது? இந்தப் பாகத்தில் வெளிச்சம் உள்ளதா? நல்லது, முழுவதும் வெளிச்சமாக உள்ளது. அது வெளிச்சமாக இருப்பதினால் வெளிச்சமாக உள்ளது. 149. நீங்கள் ஒரு விசுவாசியாக இருந்தால் நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறீர்கள். நீங்கள் விசுவாசியாக இல்லாவிடில் நீங்கள் ஒரு கிறிஸ்தவனல்ல. அவ்வளவு தான். 150. ஏனெனில், நீங்கள் எந்த நன்மையான கிரியை யினாலும் இரட்சிக்கப்படவில்லை. சத்தமிடுவதினால் நீங்கள் இரட்சிக்கப் படவில்லை. நீங்கள் ஆவியில் நடனமாடுவதினால் இரட்சிக்கப் படவில்லை. நீங்கள் அந்நியபாஷைப் பேசுவதினால் இரட்சிக்கப் படவில்லை. நீங்கள் ஓய்வு நாளை ஆசரிப்பதினால் இரட்சிக்கப் படவில்லை. நீங்கள் மாம்சம் புசிப்பதினால் இரட்சிக்கப் படவில்லை. நீங்கள் சபையில் சேர்ந்துக் கொண்டதினால் இரட்சிக்கப்படவில்லை. தண்ணீர் ஞானஸ்நானத்தினால் நீங்கள் இரட்சிக்கப்படவில்லை. "நீங்கள் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டீர்கள். கிருபையின் மூலம் இரட்சிக்கப் பட்டீர்கள்"சரி. 151. நீங்கள் உண்மையாக இரட்சிக்கப்பட்டிருந்தால், இத்தகைய இதரக் காரியங்கள் தானாக வரும். நீங்கள் அந்நிய பாஷையில் பேசலாம். நீங்கள் சத்தமிடலாம். நீங்கள் தேவனைத் துதிக்கலாம். "தீர்க்கதரிசிகளுடைய ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறதே" மேய்ப்பர் தவறான ஒன்றைக் காணும்போது, "பாருங்கள், சகோதரனே, அல்லது சகோதரியே, அது தவறாக உள்ளது" என்று கூறும்போது, நீங்கள் இணங்கிப் போவீர்கள். அது சரி. நீங்கள் இணங்கி இருப்பீர்கள். "தீர்க்கதரிசிகளுடைய ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறதே." அப்படியே ஒப்புக்கொடுத்து, "தேவனே, என்னை மன்னியும். நான் ஒழுங்கிலிருந்து வெளியேற வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் ஆயத்தமாக உள்ளேன்..." என்று கூறுங்கள். ஓ, ஓ,சபை மட்டும் இப்படியாக முன்னேறினால், அப்பொழுது சபை தேவனுடைய மகிமைக்காக முன்னேறுவதை நீங்கள் காண்பீர்கள். "தீர்க்கதரிசிகளுடைய ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறதே." ஒவ்வொருக் காரியமும் ஒழுங்கில் உள்ளது, சபை ஒழுங்கில் அமைக்கப்பட்டுள்ளது. 152. ஆனால் நீங்கள் அவர்களுடையத் தலையீட்டைத் தள்ளித் தவிர்த்து, "நான் விசுவாசிக்கவில்லை! நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் விசுவாசிக்க வில்லை!" என்று கூறினால், அப்பொழுது உங்களிடத்தில் ஏதோவொன்று தவறாக உள்ளது என்பதை அங்கே அது சரியாகக் காண்பிக்கிறது. அதுத் தவறாக உள்ளது. ஏதோவொன்றுத் தவறாக உள்ளது. உங்களால் உங்களை சரிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். 153. வேதம் சொல்லுகிறது, அவைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள். உங்களால் கடிந்துக்கொள்ளுதலை ஏற்று நிற்க முடியவில்லையென்றால் உங்களால் ஒரு ஒழுங்கின் கீழ் இருக்க முடியாது. தேவனுடைய காரியங்களிலும் நிலைக்க முடியாமல் நீங்கள் உங்களைப் பிரித்துக் கொண்டு விடுவீர்கள். "அவர்கள் நம்முடையவர்களாயில்லாததினால் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள்" என்று பவுல் சொல்லுகிறான். அது சரி. மேலும், "இந்த அனைத்துப் போதகங்களும்.." மேலும் அவன் கூறுகிறான், நான் உங்கள் மத்தியில் வரும் போது, இதுவும் இருக்கிறது, அதுவும் இருக்கிறது, மற்றவைகளும் இருக்கிறது."நல்லது, உங்களில் பிரிவினைகள் உண்டென்றுக் கேள்விப்படுகிறேன், ஒருவன் அவனுடைய சொந்தத் தாயுடன் ஜீவிக்கிறான், மற்றவன் கர்த்தருடைய பந்தியில் குடிக்கிறான். இந்தக் காரியங்களை நான் கேள்விப்படுகிறேன். அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை." அவர்கள் வெளியேறிப் போன போது, அவன் கூறுகிறான், "நல்லது, அவர்கள் நம்முடையவர்கள் அல்லாததினால் பிரிந்துப் போனார்கள்." அது சரி. "நீங்கள் சாத்தானின் பந்தியில் புசிக்கிறீர்கள், பின்பு கர்த்தருடையப் பந்தியிலும் புசித்து, உங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ள முயற்சிக்கிறீர்கள்" என்று சொல்லுகிறான். 154. அவன் அவர்களை வெட்டுகிறான். அவன் அவர்களை நறுக்குகிறான். அவன் அவர்களை நேசிக்கிறான், ஆயினும் அவன் அவர்களுக்கு சத்தியத்தை சொல்லுகிறான். அந்தச் சந்ததி எழும்பும் போது, பவுல் அவர்களுக்கு முன்பாக நின்று. "நான் எல்லா மனிதனுடைய இரத்தத்திற்கும் நீங்கலாயிருக்கிறேன். தேவனுடைய முழு சத்தியத்தை உங்களுக்குச் சொல்லாமல் ஒருபோதும் நான் மறைத்துவைக்கவில்லை" என்று சொல்ல முடியும். 155. பவுலினுடைய நாட்களைக் குறித்துப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஆனால், இந்தச் சந்ததி வரும்போது, நான் அவர்களுக்கு முன்பாகச் சாட்சியாக நிற்கவேண்டியுள்ளது. மேலும், நான் அந்தச் சத்தியத்தை அறிந்தும், அதைக் கூற மறுத்து, புகழ்ச்சிக்காக இணங்கிப் போனால், நான் வஞ்சகனாக வெளியேற்றப்படுவேன். மேலும், ஒரு வேளை நான் வஞ்சகனாக வெளியேற்றப்படலாம், ஒருவேளை "வெறியனாக" வெளியேற்றப்படலாம். மேலும் இங்கு பூமியில் உள்ள எல்லாமுமாக அழைக்கப்படலாம்; ஆனால், அந்த நாளில், "நீ என் வசனத்தைக் காத்துக்கொண்டபடியினால், நான் உன்னை சோதனை நாளில் காப்பேன்" என்று தேவன் கூறுவார். அது சரி. அதுவே செய்யவேண்டிய காரியம் 156. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் இல்லை, அது நிறுத்தப்பட்டது என்று வேதம் கற்பித்தால், நானும் அதே காரியத்தைப் போதிப்பேன். "இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்று வேதம் போதிக்கிறது 157. அற்புதங்கள் அப்போஸ்தலரோடே நிறுத்தப் பட்டது என்று அது கூறினால், நான் அதை விசுவாசிப்பேன். ஆனால் தேவன் சொல்லுகிறார், "உலகத்தின் முடிவுபரியந்தம் விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடை யாளங்களாவன" நான் அதை விசுவாசிக்கிறேன். 158. அப்போஸ்தலருடையக் காலத்தில் மட்டும் தான் ஜனங்களால் அந்நியபாஷையைப் பேசமுடியும், அவர் கள் பேசக்கூடிய ஒரே காலம் அதுமட்டும் தான் என்று வேதம் கூறியிருந்தால், நான் அதை விசுவாசிப்பேன். ஆனால், "நவமான பாஷைகளைப் பேசுவார்கள், மற்றும் இந்த அடையாளங்களில் உலகத்தின் முடிவு பரியந்தம் நிலைத்திருப்பார்கள்" என்று அவர் சொல்லியிருக்கிறார். 159. இயேசுவின் நாமத்தில் தண்ணீர் ஞானஸ்நானம் அப்போஸ்தலரோடே நிறுத்தப்பட்டது; இங்கே நாம் இதை நிறுத்திவிட்டு, கத்தோலிக்கச் சபை அமைப்பின் படி, "பிதா, குமாரன், பரிசுத்த ஆவி" என்பது தான் நமக்காக வைக்கப்பட்டுள்ளது என்றிருந்தால், நான் அதையே ஆரம்பித்துத் தொடர்ந்து செய்வேன். ஆனால் இது கற்பிப்பது, "ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்" என்ற அதே வார்த்தையைத் தான். வேதத்தில் தெளிக்கப்படுதல் என்பது இருந்தால், நானும் தெளிப் பேன். அது சரி. என்னவாகயிருந்தாலும்! 160. வேதத்தில் கால்கழுவுதல் இல்லையென்றால், நான் அதைப் பிரசங்கித்திருக்கமாட்டேன். ஆனால் வேதம் சொல்கிறது, "நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கிய வான்களாயிருப்பீர்கள்" நான் சத்தியத்தையே சொல்கிறேன். 161. கர்த்தருடையப் பந்தி ஆவிக்குரியதாக இருந்து, மாம்சப்பிரகாரமாக எடுக்கப்படாதிருத்தால், நானும் அவ்வாறே கூறுவேன். ஆனால், இயேசு சொல்லுகிறார், "ஆசீர்வதிக்கப்பட்ட" "இதைச் செய், அவர் திரும்பி மீண்டும் வருமளவும் அவருடைய சரீரமாகிய, அவருடைய இந்தப் பாகத்தை எடுத்துக்கொள்"நான் அதனோடு நிற்பேன். 162. அவர் தெய்வீக சுகமளித்தல் அங்கேயே நிறுத்தப்பட்டது என்று கூறினால், நான் அதை விசுவாசிப்பேன். ஆனால் இயேசு சொல்லுகிறார், "உலக முடிவு மட்டும், வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்." நான் அதை விசுவாசிக்கிறேன்! சரி. விசுவாசிகளைப் பின்தொடரும் அடையாளகளை நான் விசுவாசிக்கிறேன். 163. அநேக மதவெறிப்பிடித்தவர்கள், எழும்பி நடித்து, பரியாசம் செய்து, அது போல ஏளனம் செய்வதை நான் நின்று பார்க்கிறேன்; ஏளனம் அல்ல, ஆனால் அவர்கள் வெளியே சென்று நிந்தையை கொண்டு வருகின்றார்கள், உண்மையாகவே ஒரு நிந்தையை கொண்டு வருகின்றனர். சபையில் நின்று அந்நிய பாஷைப் பேசி, வெளியே சென்ற பின் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு வம்பு செய்து போய் வருகிறார்கள்; மீண்டும் அடுத்த எழுப்புதலுக்காய்த் திரும்பி உள்ளே வருகின்றனர். அங்கு தேவனில்லை. சரி. இல்லை, ஐயா. நீங்கள் உங்களுடையக் கனிகளினால் அறியப்படுவீர்கள். 164. எனக்குக் கவலை இல்லை, அப்பொழுதும், நீங்கள் அவர்களுக்குச் சத்தியத்தைக் கொடுத்து, "இது தான், கர்த்தர் உரைக்கிறதாவது" என்று சொல்லவேண்டும். 165. அந்த மனிதன் அதைப் பார்க்கும்பொழுது; அதைக் குறித்து பயப்படுகிறான். மேலும், அவன் விலகிச் சென்று, "ஓ, எப்படியாயினும், நான் அதை விசுவாசிக்கவில்லை" என்று சொல்கிறான். சகோதரனே, நீ பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பாவம் செய்கின்றாய். நீ திரும்ப வந்து அந்தக் காரியத்தைச் சரிசெய்யும் வரையில், நீங்கள் என்றுமே மன்னிக்கமுடியாத ஒன்றை தான் செய்கிறீர்கள். 166. நான் ஒஹையோ நதி வரைக்கும் வரும்போது, அங்கு ஒரு பாலம் உள்ளது, கடந்து செல்லுவதற்கு அங்கு ஒரு பாலம் உண்டு என்று அவர்கள் என்னிடம் சொல்கின்றார்கள். "நல்லது, நான் என்னுடைய வாகனத்தை வேறு விதமாக எடுத்துச் செல்லுவேன்" என்று கூறுகின்றேன். அங்கே ஒரு பாலம் உள்ளது. அது அங்கே அமைக்கப்பட்டுள்ளது. அதற்குச் செலுத்த வேண்டியக் கட்டணம் ஒன்று உள்ளது. நான் ஜெபர்சன்வில்லிருந்து கென்டக்கிக்குப் போகவேண்டு மானால், நான் அந்தப் பாலத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். அது சரியா? ஓ, "நான் அதைச் செய்ய மாட்டேன். நான் எனக்கு ஒரு படகை வாங்கிக்கொண்டு, அல்லது நான் யாரையாவது வாடகைக்கு அமர்த்திக் கொண்டு படகில் கடந்து செல்லுவேன்" என்று கூறினால். கவனியுங்கள், அந்தப் பாலத்திற்கான உரிமையாளர் அங்கே இருப்பார். நீங்கள் மறுக்கரைக்குச் சென்று இறங்கும் போது, அதிகாரிகள் உங்களை அங்கு சந்தித்து அதைச் செய்ததற்காக உங்களைக் கைது செய்வார்கள். அது முற்றிலும் சரி 167. "கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷன் உள்ளே வந்ததைக்" குறித்து இயேசு கூறினதில் ஆச்சரிய மில்லை. "சிநேகிதனே, இங்கு நீ என்ன செய்கிறாய்? உன்னை இங்கு யார் அழைத்து வந்தது? " என்று அவர் கேட்டார். அந்த மனிதன் உதவியற்ற நிலையில் நின்றான். அவன் ஏன் செய்யவில்லை? சொல்லப்பட்ட அந்த உவமையில். 168. இன்று கிழக்கில் இருக்கும் மணவாளன், கலியாணவிருந்தை ஆயத்தம் செய்துள்ளார். அப்படி அவர் செய்யும்போது, கலியாண வஸ்திரத்தை வழங்குவது அவருடையப் பொறுப்பில் உள்ளது. 169. இயேசு கிறிஸ்து கலியாண விருந்தைக் ஜீவியத் தின் முடிவில் ஆயத்தப்படுத்துகிறார். இதற்கானக் கலியாண வஸ்திரத்தை ஆயத்தம் செய்துக் கொடுப் பதும் அவருடைய பொறுப்பாகும். 170. வாசலண்டையில், வாயில்காப்போன் இருக் கின்றான், அல்லது அது அவருடைய மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவன் அங்கு நிற்கின்றான். அங்கு அனுமதிச் சீட்டுடன் வருகின்ற ஒவ்வொரு மனிதனும் ஒரேவிதமான வஸ்திரத்தைப் பெற்றிருந்தான். அவர்கள் அதை அவனுக்கு அணிவித்தார்கள். அவன் கந்தலான ஆடையாயிருந்தாலும், அல்லது பஞ்சுத்துணி ஆடையாயிருந்தாலும் சரி, அவன் அந்த கலியாண வஸ்திரத்தைத் தான் அணிந்திருப்பான், காரணம் அவனும் அங்குள்ள மற்றவர்களைப் போலவே சரியாகக் காணப்படுவான். அது முற்றிலும் சரி. 171. மேலும், சகோதரனே, நாம் கலியாண விருந்துக்கு வரும்போது, அன்று பரிசுத்த பவுல் கொண்டிருந்த அதே வஸ்திரத்தை நாமும் பெற்றிருக்க வேண்டும். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை நாமும் பெற்றி ருக்க வேண்டும். நம்முடைய இருதயத்திலும் கொழுந்து விட்டு எரிகிற அதே சுவிசேஷமானது கொழுந்துவிட்டு எறிய வேண்டும். அதே அன்பை நாம் பெற்றிருக்க வேண்டும், அல்லது நாம் புறம்பே தள்ளப்படுவோம். "நல்லது, சகோதரனே, நான் பெந்தெகொஸ்தே. நான்.." என்று கூறலாம். இல்லை ஐயா. அது உங்களை சிறிதும் மறைக்காது. "நான் மெத்தோடிஸ்டு, நான் பிரஸ்பிடேரியன், நான் பிரன்ஹாம் கூடாரத்தைச் சேர்த்தவன்," அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது சரி. 172. நீங்கள் சத்தியமாகிய சுவிசேஷத்தைப் பாருங்கள்! பவுல் எப்படி ஞானஸ்நானம் கொடுத்தான்? ஆதி சபை எப்படி ஞானஸ்நானம் கொடுத்தது? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால். அங்கு அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் அங்கு தெய்வீக சுகமளித்தலைக் கற்பித்தார்கள். தேவனுடைய வல்லமையைக் கற்பித்தார்கள். மனந்திரும்புதலைக் கற்பித்தார்கள். அவர்கள் கால் கழுவுதல் மற்றும் அப்பம் பிட்குதல் போன்றக் காரியங்களை மாம்ச ரீதியாக எடுப்பதைக் குறித்துக் கற்பித்தார்கள்; இருதயத்தின் ஒருமனதோடு வீடுகள் தோறும் அப்பம் பிட்டார்கள். அது சரியா? ஆம், ஐயா. 173. பாவம் எங்கே இருந்ததோ அதைக் கடிந்து கொண்டு அதை விட்டு ஒதுங்கி இருப்பதையே அவர்கள் விசுவாசித்தனர். அனனியா, சப்பீராள், அது எளிதானது அல்ல, ஆனால் பேதுரு அவர்களுக்குச் சம்பவித்ததைக் கூறினான். 174. மாயவித்தைக்காரனாகிய சீமோன் விசுவாசித்த போது, அவன் வந்து பரிசுத்த ஆவியை வாங்க அல்லது சபையில் சிறந்த அங்கத்தினராக இருக்க விரும்பி, "நான் பொக்கிஷசாலையில் பெரிய அளவில் பணத்தைப் போடுகிறேன்; எப்படியாயினும் இதை எனக்குக் கிடைக்கும்படிச் செய்யுங்கள்" என்றான். 175. "உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது" என்று பேதுரு கூறினான். அவனுடைய கட்டளையை அவர்கள் எதிர்க்கவில்லை. உண்மையான பரிசுத்த ஆவியினால் உண்டாகும் திட நம்பிக்கை கொண்ட மனிதர்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. அவர்கள் அந்தச் சத்தியத்தை அப்படியே சொல்லுகின்றனர். அங்கு தான் அது உள்ளது. "சீமோனே, நீ தவறாக இருக்கின்றாய்." சீமோன் தான் தவறாக இருப்பதை அறிந்திருந்தான். 176. இப்பொழுது நீங்கள் அதில் நடக்க மறுத்தால், நீங்கள் பரிசுத்த ஆவியை நிந்திக்கின்றீர்கள். "சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர் களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்." 177. (ஒலிநாடாவில் காலியிடம்) "நீங்கள் களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும் இருங்கள்." இந்தக் காலை வேளையில் நாம் அதனுடாகச் சென்றிருந்தோம். இது நியாயப்பிரமாணம் அதை மிகைப்படுத்திக் காட்டும் வரை அது ஒரு பாவம் என்று அறியப்படவில்லை என்பதைக் காண்பிக்கிறது 178. இங்கு நகரத்திலும் சட்டம் என்பது, சிவப்பு விளக்கு எரியும் போது மீறிக் கடந்து செல்வது தவறு என்று அதற்கு எதிராக ஒரு சட்டம் இருக்கும் பட்சத்தில் தான் தவறாகக் கருதப்படும். அதற்கு எதிரான சட்டம் இல்லை என்றால், 90 கிலோமீட்டர் வேகத்தில் சாலையில் வாகனத்தை ஓட்டுவது அதற்கு எதிரான வேகத்தடைச் சட்டம் இல்லாத பட்சத்தில் தவறாக எண்ணப்படாது. 179. அங்கு நியாயப்பிரமாணம் இல்லாதவரை நாம் பாவத்தைக் குறித்து அறியவில்லை. எப்பொழுது நியாயப் பிரமாணம் வந்து பாவத்தை மிகைப்படுத்தி அல்லது வெளிப்படுத்தியதோ, அதன்பின் இயேசுவின் கிருபை வந்து உங்களுடைய இருதயத்திலிருந்து பாவத்தின் வாஞ்சையை எடுத்துப் போட்டது. பாருங்கள், அது பாவத்தை எடுத்து போடுகிறது 180. பரலோகத்தில் உயர்ந்த காரியமான, தேவன் தாமே, பூமியில் தாழ்ந்த காரியமாக மாறினார், இன்னுமாக சர்ப்பமாகக் கூடப் பிரதிபலித்தார். அது உங்களுக்கு தெரியுமல்லவா? அவர் வனாந்திரத்தில் வெண்கலச் சர்ப்பமாக இருந்தார். அது சரியா? முழு நித்தியத்தின் உயர்ந்தப் பொருளாகயிருந்து பூமியில் தாழ்ந்த சிருஷ்டியாக வந்தார்; இருந்ததிலேயே பரிசுத்தமான காரியமாயிருந்து இருந்ததிலேயே பரிசுத்தமற்றக் காரியமாக மாறினார். ஏனெனில் அவர் ஒவ்வொரு மனிதனின், ஒவ்வொரு மிருகத்தின், ஒவ்வொரு உயிரின் பாவத்தை அவர்மீது எடுத்துக் கொண்டு, உங்களுடையப் பாவங்களைத் தன் மீது சுமந்து கொண்டு ஒரு பாவியாக மரித்தார். 181. இரண்டாவது மனிதன் வரவில்லை. தெய்வத்து வத்தின் இரண்டாவது நபர் வரவில்லை, தெய்வத்துவத்தின் மூன்றாவது நபர், நான்காவது நபர் வரவில்லை. தூதர்கள் வரவில்லை. தேவன் தாமே பாவத்தை எடுத்துப்போட உன்னதத்திலிருந்து இறங்கி வந்து முற்றிலும் தாழ்வாக மாறினார். 182. பின்பு, புருஷர்களும் ஸ்தீரிகளும் அவர் கூறினதைக் கவனித்து, அவரை விசுவாசிக்க வேண்டும் இப்பொழுது, வேதாகமத்தில், "அவர்கள் மனப்பூர்வமாய்ப் பாவம் செய்தால்," என்று கூறப்பட்டுள்ளது 183. ஒரு மனிதன்... அவன் வந்து அவனுடையக் கரங்களை மரித்து கொண்டிருக்கும் ஆட்டின் மீது வைக்கும்போது, "மகா ஆசாரியரே, நான் விபச்சாரம் செய்தேன். இப்பொழுது இந்த ஆட்டுக்குட்டியை ஒரு பழுதுமின்றி செலுத்துகிறேன்" என்று கூறுவான். இது கிறிஸ்துவுக்கு முன் அடையாளமாக உள்ளது. அவனுடையக் கரங்கள் அதனுடைய சிறிய தலையின் மீது வைக்கப்படும். அவர்கள் அதன் கழுத்தை வெட்டும் போது, அது நடுங்கி, கதறி, குலுங்கி மரிக்கும். அவனுடையப் பாவங்கள் அங்கே வைக்கப்பட்டுள்ளது என்பதை அவன் சரியாக அறிந்துள்ளான். அவன் தாமே அது போல மரிக்க வேண்டும். இந்த அப்பாவி ஜீவன் அவனுக்காக மரிக்கவில்லையென்றால் அவன் அந்த இடத்தில் மரிக்க வேண்டியதாய் இருந்திருக்கும். 184. அதன்பின் அவனுடைய பெயர், திரு. ஜான் டோ, என்று பதிவேடுகளில் பதிவு செய்யப்படுகிறது. அது இங்கே வைக்கப்படுகிறது. அது சரி. எழுத்தாளரான லேவியர்களில் ஒருவர் அதை வைத்துள்ளார். அதில், அவன் இந்த விபச்சாரத்தை செய்தான்; அதற்காக அவன் இந்த ஆட்டுக்குட்டியைச் செலுத்தியுள்ளான் என்று பதிவிடப்படுகிறது. 185. பின்பு அவன் தேவனுடைய வார்த்தையை அடையாளம் கண்டு வருடத்திற்கு ஒருமுறை, அது தேவை என்பதை அறிந்திருக்கிறான். அவ்வளவு தான். நல்லது, அவன் திரும்பி வெளியே செல்லும்போது அதே வாஞ்சையோடு செல்லுகிறான். அவன் மறுபடியும் அந்த ஸ்திரீயைக் கண்டு, மறுபடியும் விபச்சாரம் செய்கிறான்; ஓய்வு நாளில் விறகுகளைச் சேகரிக்கிறான். இப்படியாக அவன் எந்தப் பாவத்தைச் செய்தாலும், பரிசுத்த ஸ்தலத்தில் கழுவப்படுதலுக்காக அவன், மற்றொரு ஆட்டு குட்டியோடு, மறுபடியும் திரும்பி வருகிறான். மேலும், அவன் திரும்பி வரும்போது, "உன்னுடைய பெயர் என்ன?" "ஜான் டோ" ஜான் டோ வை கீழ்நோக்கி பார்க்கிறான். "உன்னுடைய குற்றம் என்ன?" "விபச்சாரம் செய்தேன்" 186. "ஆமாம், நாங்கள் அவனைக் கண்டு, சட்டத்தில் பிடித்துள்ளோம்." "ஏன், நீ இதை முன்னமே செய்துள்ளாயே. நீ ஒரு பரிகாரத்தைக் கொண்டுள்ளாயே. தேவனுடைய வார்த்தையின் படி நீ கல்லெறியப்பட வேண்டும்" அவர்கள் அவனை அந்த ஸ்தலத்திலிருந்து வெளியேற்றி, இரக்கமின்றி அவனைக் கல்லெறிவார்கள். அவன் நகரத்தின் மேயராக இருந்தாலும் அல்லது யாராக இருந்தாலும் சரி, எனக்கு கவலையில்லை. அது யாராக இருந்தாலும் சரி, இரக்கமின்றி மரிக்க வேண்டும், அது சரி, ஏனென்றால் அவன் தேவனுடைய வார்த்தையைப் புறக்கணித்தான். தேவனுக்கு தேவை ஒரு ஆடு, அவன் அதைப் புறக்கணித்தான். 187. இப்பொழுது பவுல் சொல்லுகிறான், "அது மோசேயின் சட்டத்தின் கீழ் இருந்தது." மோசேயினுடைய நியாயபிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம் பெறாமல் அவனை அந்தக் குற்றத்திற்காக பிடித்த இரண்டு மூன்று சாட்சிகளின் முன்பாக சாகிறான். "தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானா யிருப்பான்?" 188. அவருடையக் கிழிக்கப்பட்ட இருதயம்! அவர் காயப்பட்டார். அவருடையக் கன்னங்களிலிருந்து கண்ணீர் ஓடினது; அவருடையக் கிரீடத்தில் இருந்த முட்களினால், அவருடைய முகத்தின் மீது இரத்தம் வழிந்தது. அந்த இரத்தம் கண்ணீரோடுக் கலந்து அவருடைய அடிக்கப்பட்ட சரீரத்தில் வழிந்தது. ஒரு மனிதன் அங்கே வந்து "ஆம், அது தேவனுடைய குமாரன் என்று ஏற்றுக்கொள்ளுகிறேன்" என்று சொல்லி விட்டு, அதன்பின் வெளியே சென்று அதற்கு மாறாக அவருடைய கிருபையையும், அவருடைய இரக்கத்தையும், அவருடைய வார்த்தையையும் அவிசுவாசிக்கிறான். 189. பவுல் சொல்லுகிறான், "நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்ப்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்." என் சகோதரனே, சத்தியம் உங்களுக்குக் கொடுக்கப்படும் போது! 190. வரக்கூடிய எழுப்புதலுக்கான அடிப்படை அஸ்திபாரமாக நான் இதை வைக்கிறேன். நீங்கள் ஒவ்வொரு இரவும் உங்களுடைய வேதாகமத்தைக் கொண்டு வாருங்கள். சரிபார்த்துக் கொள்ளுவதற்காக உங்களுடைய எழுதுகோலையும், புத்தகத்தையும் கொண்டு வாருங்கள். உங்களுக்கு ஏதாவதுக் காரியம் புரியவில்லை என்று நீங்கள் நினைக்கும் எந்த நேரத் திலும் "வாருங்கள், நாம் ஒன்று கூடி அதைக் குறித்து பேசலாம்". 191. நானும் கூட சத்தியத்தைத் தான் அறிய விரும்புகிறேன். உங்களைப் போலவே நானும் சத்தியத்திற்காகத் திறந்த மனதுடன் இருக்கிறேன். எது சரி, எது தவறு என்பதை நான் அறிய விரும்புகிறேன், ஏனென்றால் செய்யும்படி அவர் கூறின காரியங்களுக்குக் கீழ்ப்படியாமலிருக்க நான் விரும்பவில்லை. பார்த்தீர்களா? அதனுடைய ஒவ்வொரு சிறு காரியமும் கூட என்னுடைய சொந்த இருதயத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அது வார்த்தையின் மூலம் மாத்திரம் வர வேண்டும். "சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களி னிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்." 192. ஒரு சில நிமிடத்தில் நான் இதை முடித்துக் கொள்ளுகிறேன். பாருங்கள், இப்பொழுது, பரிசுத்த ஆவியை தூஷணம் செய்தால் அவர்களுக்கு மன்னிப்பு இல்லை என்று இயேசு கூறினார்... மன்னிக்கமுடியாத- மன்னிக்கமுடியாத பாவம். 193. பாருங்கள், ஏசாயா தீர்க்கதரிசி, எரேமியா, அனைவரும், தீர்க்கதரிசிகள் யாவரும், "மேசியா வரும் போது, இது அவராக இருப்பார்" என்று கூறினர். தேவன்....இயேசு கிறிஸ்துவே தேவனுடைய வார்த்தை யாக இருக்கிறார். அது சரியா? அவரை மறுதலிப்பது என்பது வார்த்தையை மறுதலிப்பதாகும். அது சரியா? 194. "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்." எழுதப்பட்ட இந்த தேவனுடைய வார்த்தையானது, இங்கே பூமியில் தேவனுடைய வார்த்தையாக நிரூபிக்கப்படுகிறது. அவர் பேசின அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் வேதாகமமாக இருக்கிறது. அவர் போதித்த ஒவ்வொருப் பத்தியும் எழுதப்பட்ட வார்த்தையாக உள்ளது. அவர் தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார். மேலும்... எழுதப்பட்ட வார்த்தையானது அவர் வார்த்தையாக இருக்கிறார் என்பதை உறுதிசெய்கிறது. அவர் இங்குப் பூமியில் வந்து வெளிப்பட்டபோது, அந்த ஜனங்கள் வார்த்தையைக் கண்டு அதைப் புறக்கணித்தார்கள், நான் என்ன சொல்லுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? ஏனென்றால் அவர்கள் தங்கள் சபையை விட்டுவிட வேண்டியதாகயிருந்ததினால் தங்கள் கௌரவத்தை இழந்தனர். 195. எவராகிலும் ஒருவர், "அந்த விதமான மார்க்கத்தை நீங்கள் விசுவாசித்தால், நாங்கள் உங்களை சபையிலிருந்து வெளியேற்றி விடுவோம்" என்று கூறினால், நல்லது, அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. அவர்கள் தங்கள் இருதயத்தில் அவரை விசுவாசித் தார்கள், ஆனால் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் களால் அதைக் குறித்துப் பகிரங்கமாக அறிக்கை செய்யமுடியவில்லை. ஏனெனில், அவர்கள் அப்படி செய்தால், அவர்களுடைய சபையிலிருந்து வெளியேற்றப் படுவார்கள். ஆகவே, "அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்" அவர்கள் "நல்லது, எங்களுடைய சபை அதை அவ்விதமாக போதிக்கவில்லை, ஆகவே நாங்கள் அப்படியே..." என்கின்றார்கள். 196. இன்றும் அதே விதமானப் பழைய பிசாசுகள் ஜீவிப்பதைப் பாருங்கள். நிச்சயமாகவே. அவைகள் இன்றும் ஜீவிக்கின்றன. "நல்லது, என்னுடைய தாயார் ஒரு கத்தோலிக்கர். என்னுடைய தாய் ஒரு பிரெஸ்பிடேரியன். ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவள், தாய் என்னும் அந்த வகையில் நல்லவளாக இருந்தாள்..." 197. அம்மா அவள் கொண்டிருந்த வெளிச்சத்தில் நடந்தாள், ஆனால் சுவிசேஷ வெளிச்சம் பிரகாசிக்கும் நாள் வந்துவிட்டது. மதக் கோட்பாடுகள்... கிறிஸ்தவச் சபைகள் மரித்துக் கொண்டிருக்கின்றது. அது தோல்வியடைந்துவிட்டது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த சரீரமாகிய, அவருடைய சபையின் மூலமாக, தம்மை மறுபடியும் வெளிப்படுத்துவதற்காக, இப்பொழுது தேவன் உங்களைத் தெரிந்தெடுத்துள்ளார். சபையானது அமைப்புகளிருந்து உயிர்த்தெழுப்ப பட்டுள்ளது; குளிர்ந்த முறையான சபைகளிலிருந்து உயிர்த்தெழுப் பப்பட்டுள்ளது: வெறித்தனத்திலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டது. தேவன் ஒரு கூட்ட எலும்புகளை ஒன்று சேர்த்து அதைத் தோலினால் மூடுகிறார். அது பரிசுத்த ஆவியின் வல்லமையினால் சுவிசேஷத்தை அடையாளங்களோடும், அற்புதங்களோடும், இந்தக் கடைசிக் காலத்திலும் உலகத்தின் முடிவு பரியந்தமும் கொண்டு வரும். அவர்கள் வேதாகமத்தைப் போதித்து, அதற்காக நிற்பார்கள். அதற்காக ஜீவிப்பார்கள். அவர்கள் வலதுபுறமோ இடது புறமோ சாயமாட்டார்கள். சரி. அவர்கள் வார்த்தையின் பேரில் சரியாக நின்று கடந்துப் போய்கொண்டே இருப்பார்கள். தேவன் அவர்களோடுக் கூட இருந்து, அனுதினமும் தம்முடைய வார்த்தையைப் பின்தொடருகிற அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் உறுதிப்படுத்திக் கொண்டிருப்பார். அல்லேலூயா! விடிவெள்ளி நட்சத்திரங்களே, நீங்கள் யாவரும், எழுந்துப் பிரகாசியுங்கள்! அல்லேலூயா! 198. அங்கு கண்காணிப்புக் கோபுரத்தில் ஒருவர் இருக்கின்றார். "ஓ, ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது?" என்று கேட்க, அவன் கூறினான், "இராக் காலம் வருகிறது, விடியற்காலமும் வருகிறது," கவனி யுங்கள், எப்பொழுதும் விடியற்காலத்திற்கு முன்பாக இராக்காலம் இருக்கிறது. அது சரி. அவர்கள் நட்சத்திரங்களின் மூலம் நேரத்தைக் கணித்தார்கள். அது அந்த இடத்திற்குச் சரியாக ஒரு நாள் விடிவதற்கு சற்று முன்பு வருகிறது. வெளிச்சம் கடந்து வந்து இருளை அழுத்தும்வரை, காரிருள் அங்கிருந்தது, அதில் வெளிச்சம் வருகிறது. விடியற்காலத்திற்கு முன்பு இருளாயிருக்கிறது. 199. நீங்கள் மலைகளோடு பழக்கப்பட்ட மனிதரா யிருந்தால், ஆம், எவ்விதமாகக் காற்று வருகிறது, அது எந்தவழியாக வருகிறது, அது எவ்வளவு வேகமாக வீசுகிறது என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவ்விடத்தில் அந்த வெளிச்சத்தின் கதிர் மேகத்தைப் பிளந்து வெளியே வரும்போது, காற்றானது அந்த ஒளியலையின் ஊடாகக் கடந்து வந்து, சரியாகப் பள்ளத்தாக்கில் வீசுகிறது. எவ்விதமானக் காற்று வீசுகிறது என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை, அது சரியாகக் காலை விடியும் போது நிறுத்தப்பட்டு, ஒளியலையினூடாகக் கீழே வருகிறது. ஓ, அல்லேலூயா! 200. அன்றொரு நாளில் சகோதரன் ஃபங்க் (funk) அங்குப் படுத்திருந்தார். சகோதரன் ராபர்சனும் (Roberson) நானும் மற்றும் மற்றவர்களும் அங்கிருந் தோம். நான் என்னுடையக் காலணிகளை மாட்டிக் கொண்டு, அங்கு வெளியே நடத்தேன். நான் அழத் தொடங்கி, மறுபடியும் கூடாரத்திற்கு ஓடிச் சென்று விட்டேன். நான் அங்கு நின்று கொண்டிருந்த போது ஒரு வெளிப்பாட்டைப் பெற்றுக் கொண்டேன். மீண்டும் கூடாரத்திற்குச் சென்றேன். சகோதரன் உட் அங்குப் படுத்து அவரால் முடிந்தவரை ஆழமாகத் தூங்கிக் கொண்டிருந்தார். நான் ஒரு பக்கமாக அங்கு அமர்ந்து நான் கண்ட ஒரு காரியத்தினால் என்னால் முடிந்த அளவுக் கடினமாக அழுது, நடுங்கிக் கொண்டிருந்தேன். "ஆம், கர்த்தாவே, இரவும் வருகிறது, பகலும் வருகிறது" என்று நான் கூறினேன். 201. "வந்து, எங்களோடு சேருங்கள். வந்து எங்களோடு சேருங்கள். வந்து எங்களோடு சேருங்கள்" என்று மதக் கோட்பாடுகளும், சபைகளும் கூறும்போது, நாம் ஒரு பெரிய நெருக்கமான நேரத்தின் ஊடாக செல்கின்றோம். ஆனால் அவள் விடியற்காலமாக தொடங்குகையில், உந்தித் தள்ளும் அந்த மகத்தானக் காற்று ஒளியலையின் வாயிலாக கீழே வந்து, சரியாகச் சபைக்குள்ளாக வருகிறது. அது சரியாகப் பொழுது விடியும் விடியற்காலமாய் உள்ளது. விடியற்காலத்தில் வரும். ஓ, அல்லேலூயா, அதே பரிசுத்த ஆவியின் வல்லமையானது ஆதியிலிருந்த அதே சுவிசேஷத்தை உரிமை கோருவதாக அது உள்ளது. இன்று அது மறுபடியும் உரிமை கோருகிறது. அல்லேலூயா! ஓ, என்னே! ஜீவிக்கிற தேவனுடைய சபையாகிய சீயோனை நோக்கி நாம் அணிவகுந்து செல்லுவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். அல்லேலூயா! நான் விசுவாசிக்கிறேன். 202. நான் கூச்சலிடுகிறேன் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? இயேசு கிறிஸ்துவின் இரத்தம் பாவம் அனைத்திலிருந்தும் சுத்தமாக்கிய போது, என் சகோதரனே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கூச்சலிடும் படி நான் ஒன்றைப் பெற்றுள்ளேன். நான் என்னை அவருக்கு ஒப்புக்கொடுத்து, எந்தவொரு காரியம் சொல்லும் எதற்கும் என் கவனத்தைச் செலுத்தாத வகையில் பரிசுத்த ஆவியானவர் என்னை நடத்துவதை இந்த 23 ஆண்டுகளாக நான் பார்க்கிறேன். அது ஏதோவொன்றை என்னுடைய இருதயத்தில் போட்டு, அது அங்கு நங்கூரமிடப்பட்டிருக்கிறது, அதை என்னில் நானே போட்டுக் கொள்ளவில்லை. பரிசுத்த ஆவியானவர் அதை அங்கு போட்டிருகிறார். தேவன் எனக்கான சத்தியத்தைக் கொண்டுள்ளார். அவர் வெளிச்சத்தில் இருப்பதால் நானும் வெளிச்சத்தில் நடப்பேன். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அநீதியான யாவற்றிலுமிருந்து சுத்தம் செய்வதினால், நான் ஒவ்வொருவருடனும் ஐக்கியம் கொள்ளுவேன். 203. "சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவம் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களி னிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்." 204. இப்பொழுது, புருஷர்களே ஸ்தீரிகளே, இங்கு கவனியுங்கள்; என்னுடைய நண்பர்களே, கிறிஸ்தவ நண்பர்களே. வெறுமனே சபைக்கு வருவதைக் குறித்து மாத்திரம் நீங்கள் அறிந்திருந்தால், இப்பொழுது நீங்கள் அதை நிறுத்தி விட வேண்டும். நீங்கள் சரியாக இருக்கின்றீர்கள் என்று சிந்தித்துக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். "நல்லது, நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன்" என்ற கற்பனை எண்ணத்தை நீங்கள் கொண்டிருந்தால், நீங்கள் எப்போதும் எதைக் குறித்தாவது வம்பு செய்வ தையும், அல்லது ஏதோவொன்றைக் குறித்து நீங்கள் பிடிவாதமாக இருப்பதையும் பாருங்கள், உங்களில் ஏதோ தவறு இருக்கிறது. உங்களால் பகையை எடுக்கக் கூடாமலிருப்பதை நீங்கள் கண்டால், அது போன்ற ஏதோவொன்று அங்கிருப்பதை நீங்கள் கண்டால், அது போன்ற ஏதோவொன்றை கண்டால் அங்கு ஏதோவொன்று உங்களில் தவறாக உள்ளது. 205. "மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்." அது சரி. "மனுஷன் எதை விதைக்கிறானோ, அதையே அறுப்பான்." அது சரி. நீங்கள் செய்ய வேண்டிய காரியம்... 206. "நல்லது, நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளேன் என்று நான் விசுவாசிக்கிறேன்" என்று நீங்கள் கூறலாம். ஆனால் அது சாந்தம், தயவு, நற்குணம், மன்னிக்கும் தன்மை போன்ற கனிகளை விளைவிக்கா மலிருப்பதை நீங்கள் பார்க்கையில், அது உங்களை உதறித் தள்ளி வெளியேறும் நேரமாக இருக்கிறது. 207. நீங்கள் அந்தக் காரியத்தைச் சரி செய்துக் கொள்ளும் வரை, "சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல் அது சரி. நீங்கள் தவறு செய்கின்றீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால், உங்களால் முடிந்தவரைத் தாழ்மையாக நடந்து, அதைத் தேடுங்கள். 208. "நல்லது," "இந்த நாட்களில் சிலவற்றில், நான் அதைப் பார்ப்பேன்" என்று நீங்கள் சொல்லலாம். "இந்த நாட்களில் சிலவற்றில்" என்பது ஒருவேளை நீண்டதாக இருக்கலாம். "இந்த நாட்களில் சிலவற்றில்" ஒருவேளை நீங்கள் ஜீவிக்காமலிருக்கலாம். சரியாக இப்பொழுதே செய்ய வேண்டிய காரியம் அதைத் தேடுங்கள். அது சரி. அதைப் பார்த்து, அது சரியாக இருக்கின்றதா என்று பாருங்கள். அது சத்தியமாக இருந்தால், அதில் நடவுங்கள், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 209. நான் உங்களுக்கு ஒரு காரியத்தை சொல்வதற்கு முன்பு...இப்போது ஒரு நிமிடம், நாம் முடிப்பதற்கு முன்பு, இது போல உங்களை பிடித்து வைத்திருப்பதில் நான் வருந்துகிறேன். ஆனால் எனக்குத் தெரிந்த காரியங்களில் சிலவற்றை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். பிசாசுகளின் வல்லமைகளுக்கு முன்னால் அந்த நேரத்தில் சவாலுக்கு வரும் குறிப்பிட்ட- குறிப்பிட்ட காரியங்களை நான் அறியும் போது, காரியங் களுக்கு முன்னால் தைரியமாக நடக்க வேண்டியதற்கு நான் செய்யக்கூடிய ஒன்று அங்கிருக்கிறதென்றால், அதாவது நல்லதென்று நான் உணருகின்ற, நான் நிற்க வேண்டிய ஒரு காரியம் அங்குள்ளது. முக்கியமான இரண்டு காரியம். என்னுடைய இருதயத்தின் ஆழங்களிலிருந்து எனக்குத் தெரிந்தவரை, ஒரு காரியம் என்னவென்றால், வார்த்தையானது சரியாக எதைச் சொல்கிறதோ அதையே போதிக்க நான் முயற்சித்தேன். அவர் அந்த வார்த்தையை கனப்படுத்துவதாக தேவன் வாக்குக் கொடுத்திருக்கிறதை நான் அறிந்திருக்கிறேன். அது எதை போதிக்கின்றது, எதிலிருந்து வருகிறது என்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை. அது ஒரு மாயக் காரனிடமிருந்து வந்தாலும், தேவன் சத்தியத்தைக் கனப் படுத்துவார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உலகத்திலேயே மிகப்பெரிய மாயக்காரனாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை, தேவன் சத்தியத்தைக் கனம் பண்ணுவார். அது சரி. ஏனெனில் இந்த வேதாகமத் திலிருந்து இதை நான் வாசித்ததினாலே, இது தான் சத்தியம் என்பது எனக்குத் தெரியும். அது தான் சத்தியம் என்று எனக்குத் தெரியும். இரண்டாவது காரியம், அதன்பின், அந்தத் தூதன், அவர் என்னை அங்கு சந்தித்தபோது, அவர், "பயப்படாதே, நான் உன்னுடனே கூட இருப்பேன்" என்று கூறியதை நான் அறிந்திருக்கிறேன். அது சரி. 210. ஆகையால், எப்படி என்று தெரியாமல், தரிசனங்கள் இல்லாதபடியால், முன்னதாக நடந்த காரியங்களில் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன். ஒரு தரிசனத்தைப் பெற்று கொண்டபோதோ என்ன செய்யவேண்டும் என்பதை நான் அறிந்து கொண்டேன். ஆனால் அவர் என்னிடம் கூறாத போது, நான் எதிர்மறையானவற்றுக்கு ஒரு சவாலாக அங்கிருந்து வெளியேற வேண்டும். சரியாக அங்கு, "கர்த்தாவே தேவரீருடைய லோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் அறிவித்தேன் என்று எண்ணினேன். நீர் செய்யும் படி இந்த வேதாக மத்தில் கூறின ஒவ்வொரு காரியத்தையும், நான் பின்பற்ற முயற்சிக்கிறேன். ஆகையால், கர்த்தாவே, என்னுடைய இருதயத்தில் உமது வார்த்தையை வையும் உம்முடைய வார்த்தையை கண்காணிக்க நீர் கடமைப்பட்டிருக்கிறீர். நான் செய்ய வேண்டியது என்று அறிந்து அதைச் செய்யாமல் ஏதேனும் காரியங்கள் இருக்குமானால், கர்த்தாவே, அது எனக்கு மறைக்கப்பட்டுள்ளது. நான் உம்மோடு நடக்க முயற்சிக்கிறேன் என்று எனக்கு தெரியும், நீர் அவை அனைத்தையும் கனம்பண்ணுகிறீர் என்று எனக்கு தெரியும். " 211. ஜனங்களுக்குச் சொல்வது சிலசமயங்களில் எனக்கு வருத்தத்தை உண்டாக்குகிறதாக இருந்தாலும், நான் ஜனங்களுக்கு சொல்வேன். ஆனால் அது வார்த்தையாக இருப்பதினால், எப்படியாயினும், நான் அவர்களுக்கு சொல்வேன். நான் அதைச் செய்யாத வரை, செய்யும் படி அவர்களுக்கு சொல்லமாட்டேன். ஆமாம். 212. அவ்விதமாக நடப்பேன். அதன்பிறகு நான் சிறிது நெருக்கமாக நடந்து, சிந்தித்தேன், "கர்த்தாவே..." அதோ அங்கு அந்த வல்லமை நின்று கொண்டிருப் பதைப் பாருங்கள், அந்த சாத்தான் உங்களுக்கு சவாலிடத் தயாராக இருக்கையில், அவனிடம் வர உங்களுக்குத் தைரியத்தை தருகிறது. "கர்த்தாவே, இது என்னுடைய வார்த்தை அல்ல; இப்போது நான் நின்று கொண்டிருப்பது உம்முடையதாக உள்ளது" என்று கூறினேன். என்னுடைய நேரத்தை எடுத்துக் கொண்டு. அங்கு நடந்தேன். 213. நான் அங்கு சென்று, "ஓ தேவனுடைய தூதரே, உம்முடைய பிரசன்னம் என் அருகில் வரட்டும், ஏனெனில் இந்த மணிநேரத்தில் என்னைக் காக்கும் படிக்கு அனுப்பப்பட்ட அவருடைய ஊழியக்காரனாக நீர் இருக்கின்றீர். நான் சென்றால், என்னோடு இருப்பேன் என்று நீர் என்னிடம் அங்கு வாக்குக் கொடுத்துள்ளீர்" என்று சிந்தித்தேன். 214. ஆகவே நான் அங்கு சரியாக நடந்து, "பின்பு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், சத்தியத்தைச் சொல்வேன்" என்றேன். பிசாசுகள் அலறுவதை கவனியுங்கள், நடக்கும் காரியங்களை கவனியுங்கள். ஏனென்றால் தேவன் அவருடைய வார்த்தைக்குக் கட்டுபட்டவராக இருக்கிறார். 215. மேலும், ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், மற்றும் இதர அனைத்து செயல்பாடுகளும் சத்தியம் என்று நான் அறிந்திருக்கிறேன். ஆம் அவைகள் சத்தியம் என்று அறிந்திருக்கிறேன், ஏனென்றால் நான் மக்களிடையே பிரபலமாக இருக்க விரும்பி...மேலும் யாராவது என்னை முதுகில் தட்டிக் கொடுத்து, "டாக்டர், பாதிரியார் அல்லது பிஷப்," அல்லது வேறு எந்த விதத்திலும் அழைத்து, "நீங்கள் நீங்கள் நீங்கள் ஒரு அருமையான பிரசங்கத்தைப் பிரசங்கித்தீர்கள்" என்று சொன்னால் (சகோதரன் பிரன்ஹாம் ஏதோவொன்றை பலமுறை தட்டுகின்றார்) அது தான் மனிதனின் புகழ்ச்சி. 216. மாறாக, அவர்கள் என்னைப் பார்த்து ஏளனம் செய்து சிரித்து, என்னை எல்லாவற்றிலும் கேலி செய்தும், நான் தேவனுக்கு உண்மையானவனாக நிற்கிறேன் என்பதை அவர்கள் அறிந்திருப் பதையே விரும்புகிறேன். அது சரி. அது உண்மை. எனக்கு மனிதனுடைய புகழ்ச்சி வேண்டாம். எனக்கு தேவனுடைய புகழ்ச்சி தான் வேண்டும். நான் சத்தியத்தை மறைக்காமல் அறிவித்தேன் என்பதையே நான் அறிய விரும்புகிறேன்.. பின்பு நீங்கள் அதைப் புறக்கணித்தால், அது உங்களைப் பொறுத்தது. பார்த்தீர்களா? அது சரி. 217. ஆனால், இப்பொழுது வருகிற எழுப்புதலில், நான் உங்களுக்கு சுவிசேஷ சத்தியத்தை சொல்லட்டும். பரிசுத்த யோவான் 3-ம் அதிகாரத்தில், "ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான்" என்று இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் கூறுகின்றன. இதை அவர் பெரிய அதிகாரியிடம் கூறினார். அவன் ஒரு மதப்பற்றுள்ள மனிதனாக இருந்தான். அவன் ஒரு புகழ்பெற்ற மனிதனாக இருந்தான். அவன் பக்தியுள்ள மனிதனாக இருந்தான். அவன் ஒரு போதகன். அவன் ஒரு ஞானி. அவனிடத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் ஒவ்வொன்றையும் அவன் பெற்றிருந்தான். ஆனாலும் அவன் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கவில்லை என்று இயேசு அவனிடம் கூறினார். காரணம் அவன் பெறவில்லை...அவனால் அதைப் புரிந்துகொள்ளக் கூட முடியவில்லை. அவர் கூறினார் "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால்," நல்லது "தேவனுடைய ராஜ்யத்தைக் காண மாட்டான்," அவன் எவ்வளவு பக்தியுள்ளவனாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அவன் பெரிய சபையைச் சார்ந்திருந்தான். மகத்தானப் பேர் பெற்றவனாய் இருந்தான். அவன் வேத போதகனாய் இருந்தான், இருப்பினும் புது பிறப்பின் அனுபவத்தை பெற்றிருக்கவில்லை. இன்றிரவு நீங்கள் பெற்றிருக்கின்றீர்களா? 218. உங்களிடம் நான் நேரடியான மற்றும் ஒளிவு மறைவற்ற ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். உங்களை சங்கடப்படுத்த இதை நான் சொல்லவில்லை. நான் அங்கு இக்கட்டான நிலைக்கு ஆளாகுவதை விட இங்கு இக்கட்டான நிலைக்கு ஆளாகுவதே நல்லது. நீங்களும் அவ்வாறு தானே செய்வீர்கள்? இங்கிருக்கும் உங்களில் அநேகர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை எதிர்பார்த்துக் காத்து கொண்டிருக்கிறீர்கள். 219. இங்கிருக்கும் உங்களில் அநேகர் நான் சிறுவனாக, அல்லது என்னுடைய வாலிப காலத்தில் இருந்தது முதல் அல்லது என் பதின்ம வயதிலிருந்து சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டிருந்தது முதல் என்னை கவனிக்கின்றீர்கள். நான் தொடங்கிய சுவிசேஷத்தில் இருந்து ஒரு புள்ளியைக் கூட நான் மாற்றவில்லை. இன்னும் அதே காரியத்தைத்தான் போதிக்கின்றேன் ஏனென்றால், அது ஏதோ ஒரு வேதாகமப் பள்ளியின் மூலம் எனக்குக் கொடுக்கப்படவில்லை அல்லது அது மனிதனின் மூலம் கற்பிக்கப்பட வில்லை. அது வேதாகமத்தின் வெளிப்பாட்டின் மூலம் வந்தது. அது சரி. ஆகையால் அது தேவனிடமிருந்து வந்தது என்பதை நான் அறிந்திருப்பதினால், நான் அதே சுவிசேஷத்தோடு நிலைத்து நிற்கிறேன் 220. அநேக வருடங்களுக்கு முன்பே நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீர் ஞானஸ்நானத்தைப் பிரசங்கித்தேன். அநேக வருடங்களுக்கு முன்பே, பரிசுத்தமாக்கப்படுதலின் மூலம் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலே மனித ஆத்துமா சுத்தமாக்கப்படுதலை நான் பிரசிங்கித்தேன். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பது ஒரு உறுதிப்படுத்துதல் அல்லது தேவனுடைய ஜனத்தை அவருடைய இராஜ்யத்திற்குள்ளாக முத்தரித்தல் என்று பிரசங்கித்தேன். அது சரியென்று உங்களுக்குத் தெரியும். நான் தெய்வீக சுகமளித்தலை போதித்தேன். இரண்டாவது வருகையைக் குறித்து போதித்தேன். கால் கழுவுதலைக் குறித்து போதித்தேன். இராப்போஜனத்தைக் குறித்து போதித்தேன். கர்த்தருக்கு முன்பாக பரிசுத்தமாக இருப்பதைக் குறித்து போதித்தேன். தொடக்கத்திலேயே இந்த அனைத்துக் காரியங்களையும் நான் கற்பித்துள்ளேன். 221. அந்நிய பாஷையில் பேசுவது என்பது "பரிசுத்த ஆவியின் அடையாளமல்ல" என்பதை நான் போதித்தேன். சத்தமிடுதல் "பரிசுத்த ஆவியின் அடையாளமல்ல" என்பதை நான் போதித்தேன். பரிசுத்த ஆவியைப் பெற்றதற்கான அடையாளம் ஆதாரம் அல்லது ஒரே அடையாளம் என்று இவை எதையுமே சொல்ல முடியாது. அது பரிசுத்த ஆவியானவர் அங்கிருக்கிறார் என்பதற்கான அடையாளமாக இருக்கலாம். பாடல் பாடுவதும் பரிசுத்த ஆவியானவர் அங்கிருக்கிறார் என்பதற்கான அடையாளமாக இருக்கலாம். பேசுவதும் பரிசுத்த ஆவியானவர் அங்கிருக்கிறார் என்பதற்கான அடையாளமாக இருக்கலாம். அடையாளம் ஏதாயினும் இருக்கலாம், இருப்பினும் அது நிச்சயமான ஒன்றல்ல. பரிசுத்த ஆவியானவர் அங்கிருக்கின்றார் என்பதைக் கூறக்கூடிய ஒரே ஒரு நபர், அது தேவன் மாத்திரமே. அவர் தான் நியாயதிபதி. அவர்கள் பாடல் பாடுவதை நான் பார்த்திருக்கிறேன், அவர்கள் பேசுவதை நான் பார்த்திருக்கிறேன், அவர்கள் சத்தமிடுவதை நான் பார்த்திருக்கிறேன், அவர்கள் அந்நியபாஷை பேசுவதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தக் காரியங்கள் யாவும் இருந்தாலும் அவர்கள் அதைப் பெற்றிருக்கவில்லை. அவர்கள் அதைப் பெறவில்லை என்பதை அவர்களுடைய கனிகளே நிரூபிக்கின்றன. 222. நான் அதைப் பெற்றிருக்கிறேன் என்பதை விசுவாசிக்க என்னில் நீங்கள் முழு விசுவாசத்தைக் கொண்டுள்ளீர்கள் என்று நான் நினைக்கிறேன். நானும் அதை விசுவாசிக்கிறேன். நான்... தேவனுக்கு அது தெரியும். நீங்களும் அதைப் பெற்றுள்ளீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். அதை விசுவாசிக்கும்படி உங்கள் மீது நான் முழு நம்பிக்கைக் கொண்டுள்ளேன். நீங்கள் தயவானவர்கள், அன்பானவர்கள், இனிமையானவர்கள். நீங்கள் - நீங்கள் கிறிஸ்தவ ஜனங்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அதற்கு உறுதி கூற முடியாது. தேவனுக்கு அது தெரியும். அது சரி, பாருங்கள், ஆகவே இந்தக் காரியங்களைக் கொண்டு நாம் நியாயந்தீர்க்க கூடாது. நீங்கள் தேவனை குறைசொல்லி, "இது தான் அது" என்று சொல்ல கூடாது, ஏனென்றால் அவர் தான் நியாயாதிபதி. நாம் நியாயந்தீர்க்க அனுப்பப்படவில்லை. நாம் பிரசங்கிக்க அனுப்பப்பட்டிருக்கிறோம். அது சரியா? அது சரி, பிரசங்கிக்க! 223. நான் சத்தியத்தைக் கொண்டு வருகிறேன். நீங்கள் அதைப் புறக்கணித்து விலகி நடந்தால், வேதம் சொல்கிறதை நான் அறிவேன். அதைச் செய்தால், பின்பு உங்களுக்கு... மறுபடியும் நீங்கள் வந்து அதை சரி செய்து கொள்ளும் வரை உங்களுக்கு பாவமன்னிப்பு இல்லை. அது முற்றிலும் சரி. ஆகவே, நீங்கள் சத்தியத்தைக் காணும் போது, நீங்கள் அதில் நடக்க வேண்டும் 224. இப்பொழுது நீங்கள் வரும்போது, நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். "சகோதரன் பில், இங்கு இருக்கும் உங்களில் எத்தனை பேர், ஜனங்களுக்கு முன்னால் வெளியரங்கமாக ஒருவேளை இந்தக் கட்டிடத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு கூட நான் மரிக்கலாம், ஆனால் இங்கே தேவனும், ஜனங்களும் அறிந்துகொள்ள நான் விரும்புவது என்ன வென்றால், எனக்கு உண்மையான பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் வேண்டும்" என்று சொல்ல முடியும் "எனக்கு உண்மையான பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் வேண்டும்..." என்று உங்களுடைய கரங்களை உயர்த்தி சொல்லுவீர்களா?? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது நாம் எழுப்புதலுக்கான ஒரு சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளோம். 225. மேலும், நண்பர்களே கவனியுங்கள், இப்பொழுது "நான் உண்மையாகவே மிகவும் குளிர்ச்சியாக உணர்ந்தால், அல்லது அந்த சகோதரி பெற்ற விதமாக நானும் பெற்றேன்" என்று சொல்லிக் கொண்டு வராதீர்கள். அத்தகைய வழியில் அந்த சகோதரி அதைப் பெற்றுக் கொண்டால், நீங்களும் அதே வழியில் அதை எதிர்பார்க்கக் கூடாது. 226. நீங்கள் சுத்த இருதயத்தோடு வந்து, இயேசு கிறிஸ்துவே இரட்சகர் என்று விசுவாசித்து, நீங்கள் அவரை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். மேலும் தேவன் அவருடைய வார்த்தையைக் காத்துக்கொள்ளுவார் என்று விசுவாசித்து பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ள அவரை நோக்கிப் பாருங்கள், அவர் அதை உங்களுக்குத் தருவார். "கர்த்தாவே, எனக்கு... நீர் அதை எவ்விதத்திலாகிலும் எனக்குள் ஊற்றும், அதினால் நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுவேன். எனக்கு வேண்டியது அவ்வளவுதான், அது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் தான். என்னிலிருந்து இந்த சுயநலத்தை எடுத்துப் போடக்கூடிய ஒன்றை எனக்குத் தாரும். இந்த பயம் மற்றும் சந்தேகத்தை முழுவதையும் எடுத்துப் போடக்கூடிய ஒன்றை எனக்குத் தாரும் என்னே, கர்த்தாவே, எனக்கு அதைச் செய்யவேண்டாம். நீர் என்னை சத்தமிடச் செய்தால்; மற்றவர்கள் சத்தமிட்டு, அதின் படி ஜீவிக்காததை நான் கண்டிருக்கிறேன். என்னை அந்நியபாஷையில் பேசச் செய்ய வேண்டாம்; கர்த்தாவே மற்றவர்கள் அந்நியபாஷை பேசி அதின்படி ஜீவிக்காததை நான் கண்டிருக்கிறேன். ஆனால், கர்த்தாவே, என்னில் ஜீவித்து, ஒவ்வொரு நாளும் என்னைக் கிறிஸ்தவனாக நடக்கச் செய்யக்கூடிய ஒன்றை எனக்குள்ளாக வையும். அது நான் என்னுடைய சத்துருவை நேசிக்கச் செய்யும். அது என்னை குறித்து தீமையாகப் பேசுகிறவர்களைப் பற்றி நான் நன்மையாக பேசச் செய்யும். நான் ஏதாவது தவறு செய்தால், நான் உடனடியாக மனம்திரும்பி நேராக வந்து அதை அறிக்கை செய்வதற்கு அது என்னை ஆயத்தமாக வைக்கும். நான் தவறானவன். தேவனே, என்னை மன்னியும் என்று நான் கூறுவேன்" என்று சொல்லுங்கள். 227. அவ்விதமான ஆவியைத் தான் நீங்கள் விரும்புகின்றீர்கள், இல்லையா? ஆம், ஐயா. "என்னைத் தாழ்மையுள்ளவனாக மாற்றும். என்னில் ஒரு தவறை என்னுடைய போதகர் கண்டு, கடந்து வந்து, 'இப்பொழுது சகோதரனே அல்லது சகோதரியே, நீங்கள் இந்த காரியங்களை செய்யக்கூடாது' என்று கூறும்போது. என்னை தாழ்த்தி, 'ஆம், என் சகோதரனே, இப்போது ஜெபிக்கும்படி நீர் எனக்கு உதவி செய்யும். அவ்விதமான ஆவி என் மீது இருக்க நான் விரும்பவில்லை. எனக்கு வேண்டாம்.." என்று சொல்ல உதவிச் செய்யும். அவ்விதமான ஆவியை நீங்கள் விரும்பவில்லை, இல்லையா? 228. ஓ நீங்கள் கொந்தளித்து, "நல்லது, என்னிடம் அவ்வாறு கூறுவதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. நான் எங்கே நிற்கின்றேன் என்று எனக்குத் தெரியும்" என்று சொல்ல வேண்டாம். ஓ, நீங்கள் அதைச் செய்யும்போது, நண்பர்களே, நீங்கள் அப்பொழுதே தேவனுடைய சித்தத்தை விட்டு வெளியேப் போய்விடுகிறீர்கள் என்பதை சரியாகக் கண்டுகொள்ள வேண்டும். தொடக்கமுதல், நீங்கள் தவறாக உள்ளீர்கள் என்பதை நீங்கள் கண்டுகொள்ளலாம். 229. உங்களைத் தாழ்த்தி பரிசுத்த ஆவிக்கு ஒப்புக் கொடுத்து, "ஆம், ஜீவிக்கிற தேவனுடைய இந்த முழு சபையோடும் நான் கரம் கோர்த்துக்கொள்ளப் போகிறேன் என்று ஏன் சொல்லக்கூடாது. நான் கடந்து செல்லப் போகிறேன். என்னுடைய சகோதரியிடம் ஏதேனும் ஒரு தவறை நான் கண்டால், நான் அவளுக்காக ஜெபிக்கப் போகிறேன். என்னுடைய சகோதரனிடம் ஏதேனும் ஒரு தவறை நான் கண்டால், ஜெபிக்கப் போகிறேன்... அவன் தொடர்ந்து செய்தால், நான் அவனுடைய வீட்டிற்குச் சென்று, அன்பான சகோதரனே, உங்களுடைய கரத்தை நான் ஒரு நிமிடம் பிடித்துக் கொள்ளட்டும். நீங்கள் என்னை நேசிக்கின்றீர்களா?" ஆம், நான் உங்களை நேசிக்கிறேன். உங்களுக்குத் தெரியுமா, நமக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது.. அவர் நீங்கள் சாத்தானுடைய பாதாளத்திற்குப் போவதை விரும்பவில்லை. நீங்கள் குறிப்பிட்ட காரியத்தைச் செய்வதை நான் கவனித்தேன். இப்பொழுது நீங்களும் நானும் சேர்ந்து அதற்காக ஜெபிக்கலாம். பாருங்கள், அது போன்ற ஒன்று. 230. மேலும் உங்களுடைய சகோதரன் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், உங்களால் அதற்கான உதவியைச் செய்ய முடியாது. பின்பு உங்களோடு வேறு சகோதரரை அழைத்துச் செல்லவேண்டும். அதன் பிறகும் அவர் அவமதித்தால், உங்களுடைய பங்கை நீங்கள் செய்துவிட்டீர்கள், அவ்வளவு தான். பின்பு சபைக்குச் சென்று அதைக் குறித்து சொல்லுங்கள், நீங்கள் பாருங்கள், அத்துடன் அது முடிக்கப்படுகிறது 231. இப்பொழுது, நல்லதும் சிறந்ததும் உங்களுக்குத் தெரியும், இங்கு அமர்ந்திருக்கும் இந்தச் சிறிய கூட்ட ஜனங்களாகிய, நீங்கள் அவர்களுடைய காரியங்களில் சர்வ வல்லமையுள்ள தேவனின் கரத்தைப் பார்த்து இருக்கிறீர்கள். இங்கு கடந்து வந்து தாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதாக உரிமை கோரிய ஜனங்களை உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு அது தெரியும். மேலும் அவர்கள் இங்கு நடந்து கர்வம் கொண்டு, விநோதமாகவும் மற்றும் வேறு எல்லாவிதமாகவும் நடந்து வெளியேச் சென்று விடுகிறார்கள். 232. நான் திரும்பி வரும் போது அன்றொரு இரவு போதகர் என்னிடம் கூறினார். "நீங்கள் அவரைப் பார்க்கச் சென்றீர்களா?""ஆமாம்.""வேறு யாரையாவது அழைத்துச் சென்றீரா?" "ஆமாம்" 233. சகோதரன் ஷெல்பி என்னிடம் கூறினதைக் குறித்து எனக்கு நினைவிருக்கிறது... மேலும் மற்றவர்கள் வேறு நபர்கள் ஜனங்களிடம் சென்று முயற்சிக்கின்றனர்... நான் ஜனங்களிடம் சென்றேன். நான் கூறினேன்... என்ன, அவர்கள் எல்லாவற்றிலும் என்னை ஏளனம் செய்து பலவிதமானதைச் சொன்னார்கள். என்னை எல்லாவிதமாகவும் அழைத்தனர் "இப்பொழுது, என்னுடைய அன்பான நண்பரே, பாருங்கள், இனி இது உதவாது" என்று நான் கூறினேன். 234. "ஓ, என்னே, நீங்கள் உலகத்தினுள் சென்ற வுடனே பின்வாங்கிப் போகிறீர்கள். மேலும் நீங்கள் இதுபோல இருக்கின்றீர்கள், நீங்கள் எந்த ஆத்துமாவையும் இரட்சிக்க முடியாது. இதுபோல தான். மேலும் நீங்கள் நினைக்கும் அனைத்தும்..." 235. "வழிநடத்த, நான் பரிசுத்த ஆவியைப் பின்பற்று கிறேன் என்று நீங்கள் நினைக்கவில்லையா?" என்று நான் சொன்னேன். 236. "ஓ. நீங்கள் தவறாக இருக்கின்றீர்கள்! நீங்கள் இதையும், அதையும் மற்றவைகளையும் செய்கின்றீர்கள் நீங்கள் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களுக்கு சொல்பவன் நானே." 237. நீங்கள் அதைச் சரியாகப் பாருங்கள் அது சாத்தானாக உள்ளது. பின்பு நான் கூறினேன், இனிமேல், இது முதற்கொண்டு, "நீங்கள் சபையுடன் ஒப்புரவாகாவிட்டால்; பாருங்கள், அவர்கள் உங்களை நேசிக் கின்றார்கள், ஆனால் நீங்கள் திரும்பி வரவில்லையென்றால், அப்பொழுது நினைவில் கொள்ளுங்கள்... உங்களில் ஒவ்வொருவரிடமும் நான் நான்கு அல்லது ஐந்து முறை வந்திருக்கிறேன். அதன்பின்பு, மேலும் நானும் கூறினேன், என்னுடன் மற்றவர்களையும் அழைத்துவந்தேன், நீங்கள் ஒப்புரவாகவில்லை இப்பொழுது நான் இதைச் சபைக்கு முன்பாகச் சொல்லப் போகிறேன், இது முதற்கொண்டு, நீங்கள் அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் தான் இருக்க வேண்டும்." அது எவ்வளவு கிடைநிலையாக ஒத்தாலும் அது ஒரு பொருட்டல்ல, ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தையாக உள்ளது. 238. அதன் பின்பு நான் சபைக்குச் சென்று, "இதுமுதற்கொண்டு, இந்த ஜனங்கள் நம்முடைய சகோதர சகோதரிகள் அல்ல, ஏனென்றால் அவர்கள் நம்மை விட்டு தங்களைப் பிரித்துக்கொண்டு, ஆவியையுடைய வர்களாய் இல்லாமல் வெளியே போய்விட்டார்கள், என்ன சம்பவித்தது என்று பாருங்கள்" என்றேன். அது சரி. அது சரி, என்ன சம்பவித்தது என்று பாருங்கள். 239. நீங்கள் தேவனுடைய வார்த்தையைச் சுற்றி வளைக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட காரியத்தை தேவன் செய்யச் சொன்னால், அதை தேவன் சொன்னப்படியே மிகவும் சரியாகச் செய்ய வேண்டும். அது தான் சரி. 240. எனவே இப்பொழுது நாம் அனைவரும் ஒன்றாக இணைவோம். இந்தச் சிறிய பழையக் கூடாரத்தில், இங்கு நாம் ஒரு கூட்ட ஜனங்களாக இருக்கின்றோம், இல்லையென்றால்... என்னுடைய அந்தப் பெயரை முன்பக்கத்திலிருந்து எடுக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அது.... அவர்கள் அங்கு அதை அப்படி போட்டுவிட்டார்கள். நீங்கள் விரும்பும் விதமாக எப்படியாயினும் அழைக்கலாம். எனக்கு.... எந்த வித்தியாசத்தையும் செய்யாது. நீங்கள் விரும்பினால், உங்களுக்கு விருப்பமானால் "சபை" என்று அழைக்கலாம். இது "பிரன்ஹாம்" கூடாரம் என்று இருக்க வேண்டியதில்லை. பிரன்ஹாமிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இல்லை, இது ஒரு காரியமே அல்ல. பத்திரம் என்னுடையப் பெயரில் இருப்பதாலும், அவர்கள் அதைத் தபாலில் அனுப்பியதாலும் அவர்கள் என்னுடைய பெயரை இங்கு மேலே போட்டு விட்டார்கள். 241. நான் அங்கேச் சென்று மனச்சோர்வில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, அவர்கள் தங்கள் தசமபாகத்தைக் கொண்டு வந்தனர். நான் அதை வைத்து வேலை செய்யாமல் இருப்பதற்கு பதிலாக, எனது சொந்த தசமபாகத்தையும், எனது காணிக்கைகளையும், பணத் தையும் சேர்த்து, நாங்கள் இங்கே இந்தக் கூடாரத்தை கட்டினோம். ஜீவியத்தை நடத்தும்படி, எனக்கு ஜனங்கள் தந்த காணிக்கையில் இது கட்டப்பட்டுள்ளது. நான் வேலை செய்து, அதையும் இந்தக் கூடாரத்தில் போட்டேன், அதனால் தான் அவர்கள் இதை பிரன்ஹாம் கூடாரம் என்று அழைக்கின்றார்கள். அதற்கும் இதற்கும் எந்த சமந்தமும் இல்லை. இது நெவில் கூடாரம் என்று அழைக்கப்பட்டால், நீங்கள் விரும்பும் எவ்விதத்திலும் அதை அழைக்கலாம், அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. நாம் நம்முடைய தலையைச் சாய்க்க தேவன் நமக்கு தந்த சிறிய ஸ்தலமாக இது உள்ளது 242. நாம் இங்கு வந்து கர்த்தரை ஆராதித்து, நமக்கு உண்மையாக எவ்வளவு தெரியுமோ, அந்த அளவிற்கு வேதாகமத்தை போதிக்கின்றோம். சகோதரனே, இது தேசங்கள் கடந்து பல்வேறு விதமான இடங்களுக்கும் சவாலாக கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் தேவனுடைய வார்த்தையானது அது இருக்கும் விதமா கவே தூய்மையாக, முழுமையாக, கலப்படமற்றதாக, ஒரேவிதத்தில் நகர்ந்து செல்கிறது. இப்பொழுது எங்களோடு வந்து இணைந்துகொள்ளுங்கள்; சபையோடு இணைந்துகொள்ள அல்ல, எங்களோடு இணைந்து கொள்ள அல்ல. ஆனால் இயேசு கிறிஸ்துவில் வந்து இணைந்து கொள்ளுங்கள். அவரை நேசியுங்கள். பெலவீனமானவர்களை, பார்வையற்றோரை, வியாகுலப் படுகிறவர்களை குணமாக்கி, அதை உலகம் முழுவதும் பரப்பும், தம்முடைய வார்த்தையைக் தேவன் மிகவும் கனப் படுத்துவரானால், நிச்சயமாகவே அவர் என்னை ஒரு பிழையுடன் வெளியே செல்ல விடமாட்டார், விடுவாரா? மேலும்? என்னுடைய சகோதரனே, இங்குச் சரியாக, அது தேவனுடைய வார்த்தையில் எழுதப் பட்டிருக்கும்போது, அதைப் புறக்கணிக்காதே அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அது கர்த்தராகிய இயேசு. 243. மேலும் நீங்கள் யாவரும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். நாம் ஒரு பெரிய சந்தோஷமான குடும்பமாக இருப்போம். பின்பு "நல்லது, நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டேன்; தேவனுக்கு மகிமை, நான் இப்போது வரத்தைப் பெறப்போகிறேன்!" என்று கூறிக்கொண்டு வராதீர்கள். வரங்களை தனியாக விட்டுவிடுங்கள்; அவைகளே அதைப் பார்த்துக்கொள்ளும், பாருங்கள். தேவன், ஏதோவொன்றிற்காக உங்களைப் பயன்படுத்த அவர் விரும்பு வதை அவர் பார்க்கும்போது, என்ன செய்யவேண்டும் என்பதை அவர் உங்களுக்குச் சொல்லுவார், அதைப் போய் செய்யுங்கள். வரங்களைத் தேடாதீர்கள். அதை அளிப்பவரைத் தேடுங்கள். உள்ளே வந்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். நாம் அற்புதமான நேரத்தைக் கொண்டிருக்கப் போகிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன், உங்களுக்கு இல்லையா? 244. இப்பொழுது, மன்னிக்க முடியாத பாவம் என்பது என்ன? அது சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவம் செய்வதாக உள்ளது. அது சரியா? "ஏனெனில் அவன் அந்தப் பாவத்தை.." மேலும் பாவம் என்பது என்ன? அவிசுவாசம். நீங்கள் அதைப் பார்க்கும் போது, "அது தான் சத்தியம்" என்று சொல்லுகின்றீர்கள், ஆனால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றீர்கள் "சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய் கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்" அங்கு தான் சத்தியம் உள்ளது. அங்கு தான் அது வைக்கப்பட்டுள்ளது. மேலும் முற்றிலும் நீங்கள் வருவது போல்... இங்கு தான் மகத்தான வழியில் அதே காரியம் உள்ளது. பாருங்கள், பின்பு நான் முடிக்கிறேன். 245. இயேசு கிறிஸ்து, அவர் தான் தேவனுடைய குமாரன்; அவரை ஏற்றுக் கொண்டால் ஜீவன்; அவரைப் புறக்கணித்தால் மரணம். உங்களுக்கு விருப்பமானதைச் செய்யுங்கள். "நல்லது, இப்பொழுது, நான் அதை விசுவாசிக்கவில்லை. நல்லது, நான் அதை விசுவாசிக்க வில்லை, என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று நீங்கள் சொல்லலாம். எனக்கு இல்லை" என்று சொல்லலாம். நல்லது, நீங்கள் விசுவாசிக்கவில்லை யென்றால், அது உங்களுக்குரியது; உங்களுக்கு ஜீவன் இல்லை, அவ்வளவு தான் ஏனென்றால், அது தான் சத்தியமாக உள்ளது. அது சரி. சரி. 246. எந்தவொரு சத்தியத்திற்கும் இதுவே காரியம். அது சரி. தேவனுடைய வார்த்தையை மறுப்பது, அவிசுவாசிப்பது, மற்றும் புறக்கணிப்பது, அது தான் மன்னிக்க முடியாத பாவம் ஆகும். உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. நீங்கள் கடந்து வந்து, "நல்லது, அவர் கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கவில்லை" என்று கூறினால், பின்பு அதற்காக மனம் திரும்பி மீண்டும் அவரிடம் ஒப்புரவாகும் வரை நீங்கள் ஒருபோதும் இரட்சிக்கப்படமாட்டீர்கள். இது தான் தேவனுடைய சத்தியம், இது உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் "ஓ, நான் அதை விசுவாசிக்கவில்லை" என்று கூறினால், நீங்கள் மனந்திரும்பி மீண்டும் சத்தியத்திற்கு வரும் வரை தேவனிடமிருந்து நீங்கள் வெட்டப்பட்டு விடுகிறீர்கள். அது சரியா? 247. நல்ல கர்த்தர் உங்களை உண்மையாகவே அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக. அவர் உங்களை ஆரோக்கியமாக வைப்பாராக. 248. நான் போகும் போது தேவன் எனக்கு பாதுகாப்பை தந்து, எழுப்புதலுக்காக மீண்டும் திரும்பி வர எனக்காக நீங்கள் ஜெபித்துக் கொள்ளுங்கள் (நீங்கள் அதைச் செய்வீர்களா?) அதன் பிறகு தேவனுடைய எழுதப்பட்ட சத்தியமாகிய இந்த அஸ்திபாரத்தின் மீது நாங்கள் வருகிற எழுப்புதலை நிலைநாட்டுகிறோம். நாம் தலைகளைத் தாழ்த்தி இருக்கும் வேளையில் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 249. சகோதரன் டெடி ஒரு நிமிடம் நீங்கள் பியானோவிற்கு அருகில் வந்து நாம் ஜெபத்திலிருக்கும் வேளையில், எங்களுக்காக ஒரு சிறியப் பாடலை வாசித்துக் கொடுங்கள். 250. தகப்பனே, நீண்ட நேரமாக, இந்த நீளமான, கடினமாக வெட்டக்கூடிய இந்தப் பிரசங்கத்தில் பிரசங்கத்தின், துவக்கத்திலிருந்தே அவர் இங்கிருந்து, பரிசுத்த ஆவியானவர் முதலாவதாக கூட்டத்திற்குள் வந்து நமக்கு ஆசீர்வாதத்தை அருளினார் என்று உணரு கிறோம். அவர் இங்கே இருக்கிறார் என்று அறிந்து, பின்னர் வார்த்தைக்குத் திரும்பும் சிந்தனையுடன், மிகவும் அருமையான பொருளான மன்னிக்க முடியாத பாவம் என்பது என்னவாக இருக்கும் என்று பார்த்தோம். என்னவாக இருக்கு.... தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் இருப்பது அல்லது புறக்கணிப்பதே ஆகும்.... 251. பின்பு, தகப்பனே, நாங்கள் அதை நோக்கிப் பார்த்து, "ஓ தேவனே, எல்லா அவிசுவாசங்களிலிருந்தும் என்னைச் சுத்திகரியும். இந்த வேதாகமம் உம்முடைய வார்த்தை என்று நான் விசுவாசிக்கட்டும். ஒரு மனிதன் தேவனுக்கு முன்பாக குற்றமற்றவனாக நிற்பதற்கும், மேன்மைப் பாராட்டுவதற்கும், திருத்திக் கொள்வதற்கும், இந்தப் புத்தகத்திலுள்ளவைகளை கொண்டு தான் நாம் நியாயந்தீர்க்கப் படுவோம் என்பதை அறிந்து கொள்வதற் காகவும் தான் இது எழுதப்பட்டுள்ளது என்று நான் விசுவாசிக்கட்டும். 252. இந்தப் புத்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான், அவர்களுக்கு ஜீவ விருட்சத்தின்மேல் அதிகாரமுண்டு. ஆனால் அப்படிச் செய்யாதவர்கள், நாய்களும் சூனியக்காரருமாயிருந்து, புறம்பாக்கப்பட்டு, முடிவில் எரிக்கப்படுவார்கள். வசனங் களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான். ஒருவன் இந்தப் புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டு, அதன் ஸ்தானத்தில் வேறு ஒன்றைப் போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடையப் பெயர் எடுக்கப்பட்டுபோம். ஆனால் இந்தக் கட்டளைகள் யாவையும் காத்துக்கொண்டு அவைகளைச் செய்கிறவர் களுக்கு, ஜீவவிருட்சத்தின் மேல் அதிகாரமுண்டு" என்று அவர் கூறியுள்ளார். 253. தேவனே, இன்றிரவு இந்த சபையிலிருக்கும் நான், நாங்கள், வலது புறமோ அல்லது இடது புறமோ நோக்காமல் அல்லது அவிசுவாசிக்காமல்; நாங்கள் எப்பொழுதுமே வேதத்தின் வெளிச்சத்தில் நடக்கவும்,, வேதம் கூறும் காரியங்களை மட்டும் செய்யவும் அருள்புரியும். அதை எங்களுக்கு அருளும். உம்முடைய வார்த்தை தான் சத்தியமாக உள்ளது. எங்களுக்கு உதவிச் செய்யும்,தகப்பனே. 254. இப்பொழுது அநேகக் கரங்கள், ஓ, டஜன் கணக்காக அல்லது அதற்கும் அதிகமானவை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 15 அல்லது 20, அவர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை விரும்புகின்றார்கள். கர்த்தாவே, அவர்கள் தேவன் மேல் பசியாக இருக்கின்றார்கள் என்பதை அது நிரூபித்துக்கொண்டிருக் கிறது. "பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்" என்று நீர் கூறியுள்ளீர். ஏன்? பரிசுத்த ஆவியானவர் முன்னதாகவே அவர்களிடம் பேசியிருக்கிறீர். உண்மையாகவே பசியடையவும், தேவன் அவர்களோடு இருக்கிறார் என்றும் அவர் தான் அவர்களுக்கு அந்தப் பசியை கொடுக்கின்றார் என்றும் அறிந்த அவர்கள் பாக்கியவான்கள். ஓ, அவர்கள் பசிக்கொண்டிருக்கும் வரை அவர்களுக்காக ஏதோவொன்று அங்கிருக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தார்கள். எப்படி ஒரு மனிதன் உணவுக்காக பசிக் கொண்டிருந்தால் அவனுக்கான உணவு அங்கிருந்தாக வேண்டுமோ அதேப் போல் தான். 255. இப்பொழுது, தகப்பனே, அவர்கள் ஒவ்வொரு வரையும் நீர் நிரப்ப வேண்டும் என்று நான் ஜெபிக் கிறேன். எழுப்புதல் தொடங்குவதற்கு முன்னதாகவே, அவர்கள், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படத்தக்கதாக அருள்புரியும். இன்றிரவு இந்தக் கூட்டம் முடிவதற்கு முன்பாக, கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவர் இங்கு ஒவ்வொரு மாம்ச சரீரத்திற்குள்ளாக வந்து, ஒவ்வொரு இருதயத்தையும் அவருடைய வல்லமையினாலும் துதி யினாலும் நிரப்பும். தகப்பனே, அதை அருளும். 256. இப்பொழுது, எங்கள் மத்தியிலிருக்கும் வியாதியஸ்தர்களை சுகப்படுத்தும். மேலும், தேவனே, எங்களோடிருந்து, எங்களை ஆசீர்வதியும். எங்களுடைய அன்பான சகோதரன் நெவிலை ஆசீர்வதியும். கர்த்தாவே, தாழ்மையாக அவரை நீர் காத்துக் கொள்ளும் படி நாங்கள் ஜெபிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நீதியுள்ள, நிதானமான, கலப்படமற்ற சுவிசேஷம் என்று அறிந்து தன்னுடைய சபைக்கு அவர் கொடுத்து வரும் அற்புதமான, வல்லமையான செய்திகளையும், போதனைகளையும், அவருக்குக் கொடுத்தருளும். தேவனே, அவர் மீது ஆசீர்வாதங்களை ஊற்றும். அவருடைய மனைவி யையும், குடும்பத்தையும் ஆசீர்வதியும். எங்கள் யாவரையும், பெரியோரையும், ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும், இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். இப்பொழுது, சகோதரன் டெடி, நாம்... -- 257. சகோதரன் நெவில், அடுத்த சனிக்கிழமைக்கான ஒளிபரப்பைக் குறித்து நீங்கள் சொல்ல விரும்பும் வார்த்தை ஏதேனும் உள்ளதா? நான் அப்படி தான் நினைக்கிறேன்... [சகோதரன் நெவில், "ஆம்" என்கிறார்-ஆசி] அடுத்த சனிக்கிழமையின் ஒளிபரப்பிற் காக. எத்தனை பேர் ஒளிபரப்பைக் கேட்கிறார்கள்? சகோதரன் நெவில்? அவருக்கு இப்போது அரை மணி நேரம் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். அது சரியா? (சகோதரன் நெவில் சகோதரன் பிரன்ஹாமிடம் பேசுகின்றார்) ஆம் தயவு செய்து, மேற்கொண்டுச் செல்லுங்கள். (சகோதரன் நெவில் சொல்லுகின்றார், "இன்றிரவு, ஒளிபரப்புக்காக ஏதேனும் பங்களிப்புகள் இருக்குமானால், யாரேனும் இருந்தால், ஆராதனைக்கு பின்பு அதை என்னிடம் கொண்டு வாருங்கள். நாங்கள் அதை மெச்சுக்கின்றோம். சனிக்கிழமைக்கான ஒளிபரப்பிற்காக எங்களிடம் போதுமான அளவு பணம் இல்லை. ஆனால் குறிப்பிட்ட நேரம் வரும்போது, அது இங்கே இருக்கும். ஆகவே அதற்காக நாங்கள் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். தேவன் உங்களை இப்பொழுது ஆசீர்வதிப்பாராக.") 258. சகோதரன் நெவில், சகோதரனே, உமக்கு விருப்பமானால், அதற்காக அவர்கள் ஏதாவது கொண்டிருந்தால், ஜனங்கள் வெளியே செல்லும் வாசலண்டையில் நில்லுங்கள். ("ஆமென்" என்று சகோதரன் நெவில் கூறுகின்றார்) அது நல்லது, ஆகவே நீங்கள் நிச்சயமாக இருந்தால் இப்போது நீங்கள் அதைப் பெற்று கொள்ளுவீர்கள். இப்பொழுது, இது அவருடைய ஒளிபரப்பிற்காக. அவர் தொடர்ந்து ஒளிப்பரப்புச் செய்ய முயற்சிக்கின்றார். இந்தக் கூடாரத்திற்கு வராத ஜனங்களையும், வெளியேறியுள்ள இதர ஜனங்களையும் அவர் சந்திக்கின்றார். அநேகதரம், நான் இதைக் குறித்து முயற்சித்துள்ளேன். 259. "நல்லது, சகோ. பிரன்ஹாம் இங்கு வந்து எனக்காக ஜெபம் செய்வீர்களா?" என்று ஜனங்கள் கேட்கின்றனர். நான், "சபைக் கூடாரத்திற்கு வாருங்கள்" என்பேன். 260. "நல்லது, ஹ, ஹ, உங்களுக்குத் தெரியும், ஹ, அதைச் செய்யும் படி எனக்கு நேரம் கிடைக்கவில்லை." 261. அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் தங்களைத் தாழ்த்தி இங்கு வருவதற்கு கடினக் கழுத்துடைய மக்களாக இருக்கிறார்கள். அது முற்றிலும் சரி. ஒருவேளை அவர்களுடைய போதகர் கூறியிருக்கலாம், இங்குள்ள யாராவது அவர்களுடன் சேர்ந்து இருந்தால், அவர்கள் தவறான மக்கள் கூட்டத்தில் இருப்பதாக அவர்கள் பயப்படுகிறார்கள். அப்படி அவர் கள் எண்ணினால், அவர்களுக்காக ஜெபம் செய்வதில் எவ்விதத்திலும் எந்தப் பலனும் இருக்காது. அது சரிதான் 262. தீர்க்கதரிசி, நாகமானிடம் என்ன சொன்னான் என்று உங்களுக்குத் தெரியுமா? "நீ போய் யோர்தானில் மூழ்கு, அது கலங்கிய சேற்று நீர்" என்று அவன் கூறினான். 263. "ஏன், இதைப் பார்க்கிலும் என் தேசத்து தண்ணீர் சுத்தமானதல்லவா" என்றான். 264. "நல்லது, பின் உன்னுடைய குஷ்டரோகத்தோடேயே திரும்பிப் போ" அது சரி, அவன் தன்னைத் தாழ்த்தி, கலங்கின யோர்தானுக்கு நடந்துச் சென்று தீர்க்கதரிசி தனக்குக் கூறினது போல ஏழு தரம் மூழ்கிய பின்னர் தான், அவனுடைய குஷ்டரோகம் அவனை விட்டுப் போனது. அது சரி. 265. அவர்கள் இந்தக் கூடாரத்திற்கு வர மிகவும் கடினமானவர்களாகவும் விரைப்பானவர்களாகவும் இருந்தால், அப்போது அவர்கள்... தங்கள் குஷ்டரோகத்திலேயே நீடித்திருப்பார்கள். அது முற்றிலும் சரி. தேவனே, இரக்கமாயிரும்! 266. ஓ, நண்பர்களே, வருகிற நாளை நான் காணும் போது, இங்கு மேலும் எல்லாவற்றிலும் என்னுடைய வயது கடந்து செல்லுகிறதைக் காணும் போது, நான் என்ன செய்து விட்டேன்? ஓ, நான் ஒன்றுமே செய்யாதது போல உணருகிறேன். கர்த்தராகிய இயேசுவிற்காய் எதையாவது நான் செய்ய வேண்டும். நான்-நான் எதையாகிலும் செய்ய வேண்டும். ஓ, நான்... இப்பொழுது, என்னிலிருந்து என்னுடைய இருதயம் பிளந்து கொண்டிருக்கிறது. நான் நன்றாகவும் பெலமாகவும் உணருகிறேன். என்ன சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் பல வருடங்களாக பிரசங்கம் செய்யவில்லை, இப்போது தான் பிரசங்கம் செய்ய ஆரம்பிக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் கிறிஸ்துவுக்காய் ஆத்துமாக்களை வெல்ல விரும்புகிறேன். அது.... நான் யாரையாவது தேவனுடன் சரியாக்க விரும்புகிறேன். அவ்வளவுதான். இன்னும், அங்கு, அவர் எனக்கு ஊழியத்தைக் கொடுத்ததாக நான் உணர்கிறேன், இருப்பினும் நான் அவரிடம் லட்சக் கணக்கான ஆத்துமாக்களை விட சிறந்ததாகக் கருது கிறேன். ஆனால், அது, உலகில் உள்ள கோடிக்கணக்கானோருக்கு, கிறிஸ்தவமற்றதாக எளிதாகத் தோன்றுகிறது. நீங்கள் பாருங்கள். 267. இன்னும் போக வேண்டிய லட்சக்கணக்கான லட்சக்கணக்கான மற்றும் லட்சங்களை நோக்கிப் பாருங்கள்! நண்பர்களே, நாம் செல்லுவோம், நாம் செல்லுவோம். ஒருவேளை உங்களால் சமுத்திரத்தைக் கடக்க முடியாது, ஆனால் உங்களால் தெருவைக் கடக்க முடியும். ஏதோவொன்றைச் செய்வோம். தேவனுடைய மகிமைக்காக ஏதோவொன்றைச் செய்வோம். இப்பொழுது, நாம் எழுந்து நிற்கும் வேளையில், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 268. இயேசுவின் நாமத்தை உங்களோடு எடுத்துச் செல்லுங்கள், என்ற கடைசிப் பாடலை நாம் பாடும் போது, உங்களிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்பு கிறேன். பாருங்கள், ஒவ்வொரு எதிரியினிடமிருந்து நம்மைக் காக்கும் ஒரு கேடயமாக இயேசுவின் நாமத்தை உங்களோடு எடுத்துச் செல்லுங்கள். அது சரி. உங்களைச் சுற்றி சோதனைகள் கூடும் போது, அவருடைய பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் சுவாசியுங்கள். "தேவனே, கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை நேசிக்கப் போகிறேன். நீர் என்னோடு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று சொல்லி இன்றிரவு எத்தனைப் பேர் அந்த நாமத்தை உங்களோடு எடுத்துக் கொண்டுச் செல்லப் போகின்றீர்கள்? இப்பொழுது உங்களுடையக் கரங்களை உயரமாக உயர்த்துங்கள். அது சரி. என்னுடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே, தேவன் உங்களோடு இருப்பாராக. சரி. இயேசுவின் நாமத்தை உங்களோடு எடுத்துச் செல்லுங்கள், துக்கத்தின் கவலையின் பிள்ளையே ; அது-அது உங்களுக்கு சந்தோஷத்தையும் ஆறுதலையும் தரும், நீங்கள் செல்லுமிடமெல்லாம் அதை எடுத்துச் செல்லுங்கள். விலையேறப் பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியில் என் நம்பிக்கை மற்றும் பரலோகத்தின் மகிழ்ச்சி; விலையேறப் பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியில் என் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி.... 269. இப்பொழுது, அடுத்த வரியைப் பாடும் வேளையில், உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் நபரோடு கரங்களைக் குலுக்குங்கள். இயேசுவின் நாமத்தில் தலை வணங்குகிறோம், அவருடைய பாதத்தில் சாஷ்டாங்கமாகப் பணிகிறோம், பரலோகத்தின் ராஜாதி ராஜா, அவரை நாம் முடிசூட்டுவோம், நம்முடைய யாத்திரை முடியும் போது. விலையேறப் பெற்ற நாமம், (விலையேறப் பெற்ற நாமம்!) ஓ எவ்வளவு இனிமையானது! (ஓ எவ்வளவு இனிமையானது!) பூமியில் என் நம்பிக்கை மற்றும் பரலோகத்தின் மகிழ்ச்சி; விலையேறப் பெற்ற நாமம், (விலையேறப் பெற்ற நாமம்!) ஓ எவ்வளவு இனிமையானது! பூமியில் என் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி 270. உங்களிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் என்னை நேசிக்கின்றீர்களா? சொல்லுங்கள்... (சபையார் "ஆமென்" என்று சொல் கின்றார்கள்) நீங்கள் ஒன்றைச் செய்யும் படி நான் விரும்புகிறேன். இங்கு கூடாரத்தைச் சுற்றி ஒரு வித்தியாசம் உள்ளது. பாருங்கள், நாம் ஒரு பெரிய நட்பு குழுவாக இருக்க விரும்புகின்றோம். நாம் யாவரோடும் கரங்களைக் குலுக்கிக் கொள்வோம். நீண்ட நேரம் ஒருவரிடத்திலேயே நிற்க வேண்டாம். மற்றவரிடமும் சென்று "சகோதரனே, உங்களைக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். மீண்டும் வாருங்கள். சகோதரியே, உங்களைக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக" என்று கூறுங்கள். அனைவருடனும் கரங்களைக் குலுக்குங்கள். நீங்கள் சந்திக்க விரும்பினால் வீட்டிற்கு சென்று சந்தியுங்கள். ஆனால் எல்லாரோடும் கரங்களைக் குலுக்குங்கள். பார்த்தீர்களா? சுற்றிச் சென்று எல்லாரோடும் கரங்களைக் குலுக்குங்கள், அதன்பின்பு மகிழ்ச்சியோடு, இந்தக் கட்டிடத்தை விட்டுச் செல்லுங்கள். நீங்கள் அதைச் செய்யமாட்டீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 271. நம்முடைய தலையைத் தாழ்த்திருக்கையில். அங்கிருக்கும் சகோதரன் ரடல், உமக்கு விருப்பமானால், சகோதரன் ரடல், நீங்கள் ஜெபித்து எங்களை வழியனுப்புவீர்களா? 72 The Unpardonable Sin மன்னிக்க முடியாத பாவம் 71